July 30, 2019

காத்தான்குடியாக மாறப்போகிறதாம் வவுனியா - கதறுகிறது சிறிரெலோ

வவுனியா மாவட்டம் காத்தான்குடியாக மாறப்போகின்றதா? இதற்கு யார் பொறுப்பு என சிறிரெலோ கட்சியின் இளைஞரணி தலைவர் பரமேஸ்வரன் கார்த்தீபன் கேள்வி எழுப்பியுள்ளார்.

வவுனியா நகரில் அமைக்கப்பட்டுள்ள அத்துமீறிய கட்டிடம் தொடர்பில் அவர் இன்றையதினம் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில்,

வவுனியா மாவட்டம் காத்தான்குடியாக மாறப்போகிறாதா? இதற்கு யார் பொறுப்பு...? என்று பொதுமக்கள் நீங்களே சிந்தியுங்கள்.

வவுனியா நகரசபைக்கு சொந்தமான வவுனியா ஹொரவப்பொத்தான வீதியில் (சந்தைக்கு அருகாமையில்) இருக்கும் நிலப்பரப்பில் அத்துமீறி கட்டப்பட்ட இந்த கட்டிடத்தை நகரசபையின் செயலாளரால்(உள்ளூராட்சி தேர்தலுக்கு முன்) தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டது.

ஆனால் இப்பொழுது மீண்டும் அந்த வியாபார நிலையம் திறக்கப்பட்டுள்ளது. இதற்கு யார் அனுமதி கொடுத்தது? காத்தான்குடியை சேர்ந்த ஒரு நபரே இந்த வியாபார நிலையத்தை ஆரம்பித்துள்ளார். இதனை தட்டிக்கேட்க வவுனியாவில் மானமுள்ள தமிழன் யாரும் இல்லையா..?

காத்தான்குடியில் இருந்து வவுனியாவிற்கு வந்து நகரசபை நிலத்தில் அத்துமீறி கட்டிடம் அமைப்பதற்கு யார் அந்த தைரியத்தை கொடுத்தது?

ஆனால் இங்கிருக்கும் அப்பாவி ஏழை தமிழன் வீதியில் வியாபாரம் செய்தால் அதற்கு நடவடிக்கை எடுக்கிறது நகரசபை! இது எந்த விதத்தில் நியாயம்.

தமிழர்களே தமிழனின் நிலத்தை கூறு போட்டு விற்கின்றனர் இதனை தட்டிக்கேட்க வேண்டிய முழுப்பொறுப்பும் வவுனியா வாழ் ஒவ்வொரு தமிழனுக்கும் உண்டு. எல்லாவற்றிக்கும் மேலாக நகரசபை உறுப்பினர்கள் வாய் மூடி இருக்கின்றனரே? பணத்தை கண்டால் பிணமும் வாய் திறக்கும் என்பது உண்மை தான் போல?

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனியின்( EPRLF) கீழ் இருக்கும் வவுனியா நகரசபை இதற்கு என்ன நடவடிக்கை எடுக்க போகிறது. நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அவர்களே இது உங்களின் கவனத்திற்கு.

இதுவரை காலமும் நாம் மாத்திரம் குரல் கொடுத்து குரல் கொடுத்து நாம் எடுத்த பெயர் “இனவாதி, குழப்பவாதி” ஆனால் நான் குரல் கொடுப்பது வன்னியில் தமிழனின் இருப்பை தக்கவைப்பதற்கு என்பது விளங்க வில்லை அந்த நடுநிலைவாதிகளுக்கு.

எனவே இதற்கு எந்த மானமுள்ள தமிழனாவது முன் வந்து கேள்வி கேளுங்கள் வன்னியை வன்னிஸ்தானாக மாற்றுவதை தடுப்பதற்காக நாம் எந்த ரீதியிலும் களம் இறங்க தயார் என்பதையும் அறிய தருகிறோம்.

7 கருத்துரைகள்:

Why? Vavuniya is for Tamils only? is ha a lunatik, mental???

கார்த்தீபன் மாமா நீங்கள் இனவாதி குழப்பவாதிதானே. நீங்களே அதற்குரிய சகல ஆதாரங்களையும் தந்துவிட்டு “நான் இனவாதி அல்ல குழப்பவாதி அல்ல என்று கூறினால் மாமா அக்கூற்று உண்மையாகிவிடுமா மாமா? கார்த்தீபன் மாமா நீங்கள் ரத்ன அத்துரலிய ஞானசாரர் ஆகியோரின் சிஷ்யகோடி என்பது உலகம் அறிந்த உண்மை.

நீங்கள் கூட்டிகொடுத்து அடுத்தவன் உழைப்பை பார்த்து பொறாமை கொள்பவர்கள் நீங்கள் வவுனியாவில் மட்டுமல்ல இந்த உலகில் எங்கயும் வாழ தகுதியற்ற ஒரு சக்கிலிய கூட்டம்

முகவரி இல்லாத இந்த நாய்கள்,தேர்தல் நெருங்கி வருவதால் தமிழரின் வாக்குக்காக வால் ஆட்ட தொடங்கி விட்டது.இவனெல்லாம் யாருன்னே பல பேருக்கு தெரியாது.

Sooriyarkalai parththu kuraikkum Nai ivan

முஸ்லிம்களிடம் பனமிருந்தும் ஊடக முதலீடும் பலமும் இல்லை. இருக்கிற ஊடகங்களுள் யப்ணாமுஸ்லிம் மிக முக்கியமான ஊடகம் என்கிற பொறுப்புணர்வுடன் நாம் விவாதங்களில் சம்பந்தப்பட வேண்டும். தனிப்பட்ட தாக்குதல்கள்..திருக் குரான் நெறிகளுக்கு விரோதமாக சக்கிலியன் என முஸ்லிம் பெயரில் பேசுவது எல்லாம் தவறு என்று தெரியவில்லையா?. மற்றபடி நகரசபை நிலத்தில் கடை கட்டப்பட்டிருந்தால் அதுபற்றி பிரஸ்தாபிக்க வவுனியாவில் நீதிமன்றம் இருக்கு. நீதிமன்றம் செல்வதை விடுத்து அதை இனவாத அரசியல் ஆக்குவதை கண்டிக்கிறேன்.

@ஜெயபாலன் ஐயா, சின்னப் பையன்களும் தங்கட அரசியல் அறிவை வளர்த்துக் கொள்வதற்காக இங்கு வருகின்றார்கள். எங்களுக்குப் படிப்பிச்ச யாழ் ஐயா சொல்லுவாங்க “ஐந்து விரல்களும் ஒன்றல்ல” என்று. உண்மைதான். அவர்களும் திருந்த வேண்டும். நாங்களும் எங்களையும் திருத்தி அவர்களையும் திருத்த வேண்டும்.

Post a Comment