Header Ads



ஸ்டோக்ஸ், நியூசிலாந்திடம் மன்னிப்பு கேட்டார்


இங்கிலாந்து, நியூசிலாந்து இடையேயான உலகக் கோப்பை இறுதிப்போட்டியின் கடைசி ஓவரில் நிகழ்ந்த சர்ச்சைக்குரிய ஓவர் த்ரோவ் ஓட்டங்கள் குறித்து வில்லியம்சன் மனம் திறந்துள்ளார்.

கடைசி 3 பந்தில் இங்கிலாந்து வெற்றிக்கு 9 ஓட்டங்கள் தேவைபட்ட நிலையில், களதடுப்பில் ஈடுபட்ட நியூசிலாந்து வீரர், வீசிய பந்து பென் ஸ்டோக்ஸ் துடுப்பில் பட்டு பவுண்டரிக்கு சென்றதால் இங்கிலாந்து அணிக்கு 6 ஓட்டங்கள் வழங்கப்பட்டது. இதன் மூலம் போட்டி சூப்பர் வரை செல்ல நேரிட்டது.

போட்டிக்கு பின் பேட்டியளித்த நியூசிலாந்து அணித்தலைவர் கேன் வில்லயம்சன் கூறியதாவது, பந்து ஸ்டோக்ஸின் மட்டையைத் தாக்கியது வெட்கக்கேடானது, நான் குற்றம்சாட்டு விரும்பவில்லை, இதுபோன்ற தருணங்களில் இனி ஒருபோதும் இவ்வாறு நடக்காது என்று நம்புகிறேன்.

இந்த நிலைக்கு எங்களை அழைத்துச் செல்ல நியூசிலாந்து தரப்பு மிகுந்த ஆதரவு அளித்தனர். வீரர்கள் இந்த நேரத்தில் சிதைந்து விடுகின்றனர், அது பயங்கரமானதாக இருக்கிறது. இந்த கட்டத்தில் தோல்வியை ஜீரணிப்பது மிகவும் கடினம். ஆனால் எங்கள் வீரர்களிடமிருந்து ஒரு அருமையான முயற்சிய காண முடிந்தது என்று நியூசிலாந்து அணித்தலைவர் வில்லியம்சன் கூறியுள்ளார்.

அந்த அதிர்ஷ்டமான தற்செயலான தொடுதலுக்காக ஸ்டோக்ஸ், நியூசிலாந்திடம் மன்னிப்பு கேட்டுள்ளார். கடைசி ஓவரில் பந்து மட்டையைத் தாக்கி நான்கு ஓட்டங்களுக்குச் சென்றதற்காக நான் கேனி வில்லியம்சனிடம் மன்னிப்பு கேட்டேன் என ஸ்டோக்ஸ் தெரிவித்தார்.

578 ஓட்டங்கள் எடுத்ததற்காகவும், அவரது அற்புதமான தலைமை பண்பிற்காகவும் தொடர் நாயகனாக வில்லியம்சன் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.