Header Ads



தமிழ் - முஸ்லிம் மக்களின் வாக்குகளை பெறமுடியும், எம்மை புறக்கணிக்க உரிய காரணம் கிடையாது - மஹிந்த

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேடபாளர் யார் என்ற  சர்ச்சைக்கு  ஆகஸ்ட் மாதம் 11 ஆம் திகதி  தீர்வு கிடைக்கும் என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். 

அத்துடன் இதுவரையில் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் தெரிவிற்கு ஐவரது பெயர்  பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.    எதிரிணியில் அங்கத்துவம்  வகிக்கும் அனைத்து  கட்சிகளினதும் அபிப்ராயங்களுக்கு அமையவே ஜனாதிபதி வேட்பாளர் தெரிவுசெய்யப்படுவார்.

தமிழ் - முஸ்லிம் மக்களின் வாக்குகளை  பெற முடியும் என்ற  நம்பிக்கை   காணப்படுகின்றது. எம்மை புறக்கணிப்பதற்கான  உரிய காரணம் ஏதும் கிடையாது.போலியான குற்றச்சாட்டுக்களுக்கு மத்தியிலே  ஆட்சி மாற்றம் ஏற்படுத்தப்பட்டன. சாட்டப்பட்ட குற்றங்கள் ஏதும் இதுவரையில் நிரூபிக்கப்படவில்லை.

தேர்தலை  கருத்திற் கொண்டு அரசாங்கம் தற்போது மாறுப்பட்ட பல விடயங்களை முன்னெடுக்கின்றது. தேர்தல் வெற்றிக்கான  இம்முறை மேற்கொள்ளும் உபாயங்கள் ஏதும் பயனளிக்காது என்றும் அவர் குறிப்பிட்டார்.

கொழும்பில் இடம் பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

5 comments:

  1. நாமல் ராஜபக்ஷே வேட்பாளர் !

    ReplyDelete
  2. yes, muslim community has forget what you did for them

    ReplyDelete
  3. மனச்சாட்சியை தொட்டுப்பார்த்தால் இப்படியான கருத்தைச் சொல்லி இருக்க மாட்டார் மஹிந்த. உங்களைப் புறக்கணிக்க எங்களுக்கு ஏராளமான காரணங்கள் உண்டு.

    ReplyDelete
  4. Mr.EX.President keep in your mind people don't like country is rule by one family.

    ReplyDelete
  5. Were you in deep slumber during the last three months?
    Please watch video recordings of what your party men-goons- were talking You can easily take the recording from your friends' 2 TV channels.
    You have explicitly shown that you have not changed. You are a great actor

    ReplyDelete

Powered by Blogger.