Header Ads



மைத்திரிக்கு வால் பிடிக்கும் சஜித் - பொன்சேகா ஆத்திரம்

ஐக்கிய தேசிக் கட்சி, மரண தண்டனைக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ளதாகவும், கட்சியின் உறுப்பினர்கள் அதனை பின்பற்றுவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.

எனினும், ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி தலைவர் சஜித் பிரேமதாச, எப்போதும் ஜனாதிபதியின் தேவைகளை பூர்த்தி செய்வதாகவும், ஜனாதிபதியின் அறிக்கைகளுக்கு ஆதரவு வழங்கி வருவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

மரண தண்டனையை நிறைவேற்றப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அது குறித்து ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டிருந்த அவர்,

“ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச எப்போதும் ஜனாதிபதியின் தேவைகளை பூர்த்தி செய்கின்றார். ஜனாதிபதியின் அறிக்கைகளை அவர் ஆதரிக்கின்றார்.

எனினும், ஐக்கிய தேசிக் கட்சி, மரண தண்டனைக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ளதாகவும், கட்சியின் உறுப்பினர்கள் அதனை பின்பற்றுகின்றனர்.

எவ்வாறாயினும், தேர்தலில் மக்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் சில கைதிகளை தூக்கிலிட முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக” பீல்ட் மார்சல் சரத்பொன்சேகா மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, போதைப்பொருள் பாவனை தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு, விரைவில் தூக்கு தண்டனையை நிறைவேற்றும் ஆவணங்களில் கையெழுத்திட்டுள்ளதாக ஜனாதிபதி அண்மையில் தெரிவித்திருந்தார்.

ஜனாதிபதியின் இந்த நடவடிக்கைக்கு, உள்நாட்டில் இருந்தும் வெளிநாட்டில் இருந்தும் கடும் எதிர்ப்புகள் வெளியாகியிருந்ததன. குறிப்பாக ஆளும் ஐக்கிய தேசிய கட்சி கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தது.

எனினும், சிறைச்சாலைக்குள் இருந்து கொண்டு போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வரும் மிகப் பெரிய போதைப் பொருள் குற்றவாளிகள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் சட்டத்திற்கு முன் நீதிமன்ற செயற்பாடுகளில் எந்த சந்தேகங்களும் இன்றி சாட்சியங்களுடன் நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு தூக்கு தண்டனையை அமுல்படுத்துவதில் எந்த தவறும் இல்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி தலைவர் அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது”

No comments

Powered by Blogger.