Header Ads



மைத்திரி - சஜித் தொடர்பு நிலைக்கும் என, யாராவது நினைப்பார்களாயின் அது ஒருபோதும் நடைபெறாது

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் காணப்படும் உறவு, அரசியல் ரீதியானது அல்லவெனவும் அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கு வழங்கப்பட்ட பொறுப்புக்களை அவர் நிறைவேற்றும் விதம் தொடர்பில் ஏற்பட்ட மதிப்பு ஒன்று மாத்திரமே எனவும் பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

இன்று (16) பதுளையில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் சஜித் – மைத்திரி உறவு குறித்து வினவிய போதே டிலான் பெரேரா எம்.பி. இவ்வாறு கூறியுள்ளார்.

மைத்திரிபால சிறிசேனவுக்கும் சஜித் பிரேமதாசவுக்கு இடையில் நிலவும் தொடர்பு நிலைக்கும் என்று யாராவது நினைப்பார்களாயின், அது ஒரு போதும் நடைபெறாது.

கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் மஹிந்த ராஜபக்ஸவுக்கும் இடையில் ஏற்பட்ட உறவைத் தான் மக்கள் பிரார்த்தித்திருந்தனர்.

இந்த இருவரின் உறவினால் வரும் ஜனாதிபதி வேட்பாளரைத் தான் மக்கள் வரவேற்கின்றனர்.

ஆனால், மைத்திரி – சஜித் யுகம் என்பது தொடர்பான கனவு சாத்தியமற்றது எனவும் இதுதான் அரசியல் யதார்த்தம் எனவும் டிலான் பெரேரா மேலும் கூறியுள்ளார். dc

No comments

Powered by Blogger.