Header Ads



ஹக்கீம் தலைமையில் பாராளுமன்ற குழு அறையில் முக்கிய கூட்டம் - ஹரீஸும் பங்கேற்பு

இழுபறி நிலையிலுள்ள கல்முனை நிர்வாக அலகு பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் நோக்கிலான உயர்மட்ட கலந்துரையாடல், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் இன்று (31) பாராளுமன்ற குழு அறையில் நடைபெற்றது.

இச்சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம். ஹரீஸ், அலிஸாஹிர் மௌலானா, ஏ.எல்.எம். நசீர், மு.கா. தவிசாளர் அப்துல் மஜீத், செயலாளர் நிஸாம் காரியப்பர், கல்முனை மேயர் ரகீப், மாநகர சபை உறுப்பினர்கள், சாய்ந்தமருது சுயேற்சைக் குழு உறுப்பினர்கள், சாய்ந்தமருது பள்ளிவாசல் தலைவர் வை.எம். ஹனீபா, கட்சியின் உள்ளூர் பிரதிநிதிகள் மற்றும் கல்முனை, சாய்ந்தமருது, மருதமுனை, நற்பிட்டிமுனை ஊர்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.


1 comment:

  1. தயவுசெய்து தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள் இவ்வாறு பிரச்சினைக்குரியவர்களுடன் கலந்துரையாடி கொடுக்கும் வாக்குறுதிகளைக் காப்பாற்றுங்கள், அதன்மூலம் ஊர்களிட்க்கிடையே ஒற்றுமையை உருவாக்குங்கள், மாறாக சற்றும் முற்போக்குச் சிந்தனையில்லாத முழு ஊர்வாதத்தினையே தன்சிந்தனையாகக்கொண்ட ஒருசிலரை மையப்படுத்தி SLMC எனும் முழுநாட்டு முஸ்லிம்களுக்கும் சொந்தமான கட்சிசியினைத் தனிநபர்களுக்குத் தாரைவார்த்து ஊர்களினைப்பிரித்துவிடாதீர்கள், கட்சிமாறிவிடுவோம் என்று மிரட்டும் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்றில்லாவிட்டாலும் நாளை புதிய அரசில் உங்களுடனிருக்கப்போவதில்லை, SLMC தலைமைத்துவத்திற்கு காலத்திர்ட்க்குக் காலம் ஒவ்வொருவர் சுயநலனுக்காக சவால்விடத்தவறவில்லை, இருப்பினும் தலைவர் அஸ்ரப் அவர்களின் காலத்தில் தனிநபருக்கு அஸ்ரப் அவர்கள் முக்கியம் கொடுக்கவில்லை அதனால்தான் அவர்காலத்தில் ஊர்ப்பிரிவினயிருக்கவில்லை, மாறாக ஹக்கீம் அவர்களின் காலத்தில் தனிநபர்கள் தலைவரை ஆட்டும் விதம் எல்லோருமறிந்த விடயம், தலைவர் என்பது ஏனையவர்களை வழிநடத்தவேண்டும், ஏனையவர்களால் வழிநடத்தப் படுகின்றவராக இருக்கக்கூடாது, அதற்கு சிறந்த உதாரணம் ஹக்கீம் அவர்கள் உளூர்ச்சித் தேர்தல்காலத்தில் சாய்ந்தமருது என்ற ஊருக்கெதிராக ஏனைய ஊர்களுக்கெல்லாம் சென்று நகைச்சுவை மன்னர்போல் கல்முனைப் பாராளுமன்ற உறுப்பினரைத் திருப்திப்படுத்திப்பேசியது ஒரு தலைவருக்குரிய நாகரீகமாக இருக்கவில்லை, இனியும் இவ்வாறான தவறுகளிலிருந்து விடுபட்டு எல்லோரையும் சேர்த்துச்செல்லக்கூடிய அணுகுமுறையினைப்பின்பற்றுங்கள்

    ReplyDelete

Powered by Blogger.