Header Ads



கண்டி எசல பெரஹராவின் பதுகாப்புக்காக 8000 பாதுகாப்பு தரப்பினர் குவிப்பு

கண்டி எசல பெரஹராவின் போது கடும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் பெரஹராவை பார்வையிட வரும் பொதுமக்கள் முழுமையான சோதனை நடவடிக்கைகளின் பின்னர் அனுமதிக்கப்படுவார்கள் என தலதா மாளிகையின் தியவடன நிலமே பிரதீப் திலங்க தேல தேரர் தெரிவித்துள்ளார்.

ஊடக அமைச்சில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்,

எசல பெரஹராவின் பாதுகாப்பிற்காக பொலிஸ் மற்றும் முப்படைகளின் 8000 இற்கும் அதிகமானவர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்களில் 6000 பொலிஸாரும் 2000 இராணுவ வீரர்களும் பாதுகாப்பு கடமையில் ஈடுபடவுள்ளனர்.

இம்முறை பெரஹராவின் போது கடும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் பெரஹராவை பார்வையிட வரும் பொதுமக்கள் முழுமையான சோதனை நடவடிக்கைகளின் பின்னர் அனுமதிக்கப்படுவார்கள் என்றார்.

No comments

Powered by Blogger.