Header Ads



75 நாட்கள் சிறையின் பின், மற்றுமொரு அப்பாவி முஸ்லிம் இன்று விடுதலையானார்

கடந்த 28/04/2019 அன்று கொழும்பு கெசல்வத்த பொலிசார் “தேசிய தவ்ஹீத் ஜமாஆத்தின்(NTJ) கொழும்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எனச்சந்தேகத்தின் பெயரில் சமூக அக்கறையாளரான மொஹமட் பாரூக் மொஹமட் பவாஸ் எனும் அப்பாவியை கைது செய்ததுடன் குறித்த நபர் குண்டுகளை வெடிக்க வைப்பதற்கான ரிமோர்ட் கொன்ட்ரோல் உபகரணத்தை தன் உடமையில் வைத்திருந்தார் எனவும் இவர் பயங்கரவாத செயற்பாடுகளுடன் நேரடியாக தொடர்புபட்டவர்” எனும் பொய்யைக்கூறி சிறையிலடைத்து ஆப்பிளுத்த குரங்காகினர்.

ஆப்பிளுத்த குரங்குகளாக கெசல்வத்த பொலிஸ்,பயங்கரவாத தடுப்பு பிரிவு மற்றும் ஹிரு,தெரன , சிரச மற்றும் அனைத்து பத்திரிகைகளும் செயற்பட்டதால் அதாவது தனது “கையை விட்டால் வால் நறுக்கப்படும்”என்ற பயத்தால் குரங்குகள் அனைத்தும் 75 நாட்கள் என்ன செய்யவதென்று தெரியாமல் அப்பாவியை உள்ளே வைத்து காலத்தை தேவையில்லாமல் கடத்தியது.

பயங்கரவாததடுப்புச்சட்டத்தின்(PTA) பிரிவு 7(1) ன் படி கைது செய்யப்படும் நபர் வழக்கு விசாரித்து முடிவடையும் வரை விளக்கமறியலில் வைக்கலாம் எனவும்,

இந்தப்பிரிவின் விதி விலக்கான வாசகத்தின் வழக்கு விசாரணை முடிவடைவதற்கு முன் சட்டமா அதிபரின் சிபார்சின் படி குறிப்பிட்ட நபரை பிணையில் விடலாம்.என்பதற்கிணங்க இன்று எமது எதிர்பார்க்கைக்கை அமைந்தது.

அல்ஹம்துலில்லாஹ் இன்று சிரேஷ்ட சட்டத்தரணி MCM முனீருடன் எமது FAST & FIRST TEAM (FFT) ன் சட்டத்தரணிகளான என்னுடன் நுஷ்ரா சறூக்,இர்பானா இம்ரான் ஆகியோரின் எதிர்வாதத்தினாலும் சட்டமா அதிபரின் சிபார்சின் பேரிலும் 75 நாட்கள் சிறைவாசத்தின் பின்னர் அப்பாவியான பவாஸை கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜெயரட்ன பிணையில் விடுதலையாக்கினார்.

சட்டத்தரணி சறூக்

2 comments:

Powered by Blogger.