Header Ads



7ஆம் திகதி "முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள், கட்டவிழ்த்துப்படும் அபாயம்"

கண்டியில் எதிர்வரும் 7ஆம் திகதி  நடைபெறவுள்ள  'சிவ் ஹெல மகா சமுலுவ' (பிக்குமார் மாநாடு) யைத் தொடர்ந்து முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் கட்டவிழ்த்துப்படும் அபாயம் இருப்பதால் அது தொடர்பில் பிரதமரையும் ஜனாதிபதியையும் சந்தித்து தேவையான பாதுகாப்பு முன்னேற்பாடுகளை முன்னெடுக்க முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு திட்டமிட்டுள்ளது.  

இது தொடர்பில் முக்கிய முஸ்லிம் தலைவர்கள் கூடி ஆராய்ந்துள்ளதுடன், 7ஆம் திகதிக்கு முன்னர் நாட்டுத் தலைவர்கள் இருவரையும் சந்திக்க இருப்பதாகவும் அறிய வருகிறது.  

இது தவிர முஸ்லிம் எம்.பிக்கள் பலரும் பாதுகாப்பு தரப்புடன் தொடர்பு கொண்டு முஸ்லிம்களின் பாதுகாப்பு தொடர்பில் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கோரியுள்ளனர். ஏப்ரல் 21தற்கொலை தாக்குதலையடுத்து முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன.

தாக்குதலுடன் முஸ்லிம் தலைவர்களுக்கு தொடர்பு இருப்பதாகவும் அவர்கள் பதவியை இராஜினாமா செய்யுமாறு கோரியும் ரதன தேரர் உண்ணாவிரதமிருந்த நிலையில் முஸ்லிம் அமைச்சர்கள் மற்றும் ஆளுநர்கள் பதவி விலகியமை தெரிந்ததே.இதனை தொடர்ந்து 20முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து செயற்பட்டு வரும் நிலையில் அடுத்த கட்ட நகர்வு தொடர்பில் எதிர்வரும் 11ஆம் திகதி கூடி ஆராய முடிவு செய்யப் பட்டுள்ளது.அன்றைய தினம் முஸ்லிம்களுக்கு எதிராகத் தொடரும் பாரபட்சங்கள், கல்முனை வடக்கு விவகாரம் உட்பட பல முக்கிய விடயங்கள் ஆராயப்பட இருப்பதாக முஸ்லிம் எம்.பிக்கள் குழு முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார்.மீண்டும் அமைச்சு பதவிகளை பொறுப்பேற்பது தொடர்பில் இப்போதைக்கு கவனம் செலுத்தப்பட மாட்டாது என்றும் அவர் கூறினார்.  

தற்போதைய நெருக்கடி நிலைக்கு தீர்வு காண்பதற்கே முன்னுரிமை அளிக்கப்படும் எனவும் அடுத்தே அமைச்சு பதவி குறித்து கவனம் செலுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.  

ஜனாதிபதியை சந்திப்பதற்கான ஏற்பாடுகளை பைசர் முஸ்தபா எம்.பி முன்னெடுத்துள்ளதுடன், பிரதமருடனான சந்திப்பிற்கும் ஏற்பாடுகள் இடம்பெறுவதாக அறிய வருகிறது.  

10ஆயிரம் பிக்குமார்களின் பங்களிப்புடன் எதிர்வரும் 7ஆம் திகதி கண்டியில் நடைபெறும் பிக்குமார் மாநாடு இஸ்லாமிய அடிப்படை வாதத்தையும் அனைத்து மக்களுக்கும் ஒரே சட்டத்தையும் வலியுறுத்தி நடத்தப்படவுள்ளதாக பொதுபல சேன அறிவித்துள்ளது. இதேவேளை இந்த மாநாடு தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு கண்டி உலமா சபை அறிவித்துள்ளது.

1 comment:

  1. கிழக்கு முஸ்லிம் செய்யும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்காக கிழக்கு முஸ்லிம்களுக்கு அடிப்பது தான் நியாயம், ஆனால் தெற்கு முஸ்லிம்களை தண்டிப்பது தவறு,

    ReplyDelete

Powered by Blogger.