July 12, 2019

இலங்கை முஸ்லிம்களின் இதயம் 3 ஆக உடைகிறது - சாய்ந்தமருதுக்கு தனிப்பிரதேச செயலகம் கிடைக்கிறது


இலங்கை முஸ்லிம்களின் இதயம் என வர்ணிக்கப்படும் கல்முனை நகரம், மிகவிரைவில் 3 ஆக பிரிக்கப்படவுள்ளதாக அறிய வருகிறது

தமிழர் தரப்புக்கு ரணில் வழங்கியுள்ள வாக்குறுதி மற்றும் கல்முனை தமிழ் பிரதேச செயலகம் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட குழு முன்வைக்கவுள்ள சிபாரிசுகளுக்கு அமைய கல்முனை 3 துண்டுகளாக உடைக்கப்படவுள்ளது.

தமிழர் தரப்பு கோருகின்ற தனிப்பிரதேச செயலகம் அவர்களுக்கு வழங்கப்படுவதுடன் , சாய்ந்தமருதுக்கும் தனிப்பிரதேச செயலகம் வழங்கப்படுமெனவும் அறிய வருகிறது.

அதேவேளை கல்முனை 3 ஆக பிரிக்கப்படுவதால் அந்நகரின் பலம் குன்றிப் போகுமென கவலை வெளியிடப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

8 கருத்துரைகள்:

the following will be remembered in Muslims in srilanka history:
athaullah
rizad badiudeen
shiraz meerasahib
sainthamaruthu traders and mosque federation

1964ம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டம் உடைந்தபோது தமிழர்கள் கவலைப்பட்டிருப்பார்கள்.அக்கரைப்பற்று ஆலையடி வேம்பு பிரிவினையின்போது முஸ்லிம்கள் கவலைப்பட்டார்கள். ஆனால் இந்த பிரிவினைகள் இல்லாவிட்டாம் மக்களிடையே பிரிவும் போதலும் அதிகரித்திருக்கும். கல்முனை பிரிகிறது அல்ல பிரச்சினை. மக்களை 30 வருடங்களாக மோதல்நிலையில் வைத்திருந்த சூழல் நீக்கபட்டுள்ளது. நல்லிணக்கத்துக்கான வாய்புகள் அதிகரிக்கும். அதுதான் முக்கியம். நிலம் பிரிவதை நல்லிணக்க வாய்பாக்கும் மனோபவமே ஆரோக்கியமானதாகும். ஆரோக்கியமற்ற வெடிகொழுத்தி கொண்டாடும் மனோபாவம் கண்டனத்துக்குரியது.

சாய்ந்தமருது மக்கள் சற்று சிந்தியுங்கல்.நீங்களும்,கல்முனையானும் Muslim கள்தான்.இரண்டு ஊரிலும் உள்ளவர்கள் அதிகமாக திருமணமனங்கலில் தொடங்கி அனைத்து விடயங்களிலும் பின்னி பிணைந்து உள்ளீர்கள்.எனவே தமிழருக்கும் உங்களுக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும்.எனவே யாராக இருந்தாலும் ஊர் எனும் பெயரை தள்ளி வைத்து விட்டு Muslim எனும் சகோதரத்துவத்தை பற்றி சிந்தியுங்கல் எம்மை முதலில் எமது பலவீனத்தை பயன்படுத்தி பிரிக்கும் சூழ்ச்சியினை புரிந்து கொள்ளுங்கள்.பிரித்து விட்டு எம்மை அழிக்க முயலும் ஓநாய்களின் திட்டத்துக்கு சாய்ந்தமருது மக்கள் பலியாக வேண்டாம்.

கல்முனையை 25 பிரிவுகளாக வேண்டுமென்றாலும் கீறிக் கிழிங்க. எப்படிக் கிழிக்கப் போறீங்க. அதுதான் மிக முக்கியம்.

கல்முனையில் தமிழர்களுக்கு 1000 வருடங்களுக்கு முற்பட்ட வரலாறு உள்ளது எனவும் முஸ்லிம்களுக்கு 392 வருட வரலாரே உள்ளது எனவும் வரலாற்று ஆய்வாளர் திருச்செல்வம் ஐயா
தென்கிழக்கு இலங்கையின் பண்டைய வரலாறு ( அம்பாறை மாவட்ட வரலாறு )எனும் புத்தகத்தில் ஆதாரங்களோடு எழுதியுள்ளார்.

நாங்கள் முன்னோக்கிச்சிந்திக்கவேண்டும் முஸ்லீம் சகோதரர்களே, நாளொன்று பிறக்கும்போது சனத்தொகையும் அதிகரிக்கின்றது, அவர்களது தேவையும் மாறுகிறது அதிகரிக்கின்றது, நேற்றிருந்த தீர்வு இன்று தோற்றுப்போய்விடுகின்றது, சாய்ந்தமருதிட்கு தனிப்பிரிவு கொடுக்காது தள்ளிப்போட்டுவந்திருக்கலாம் ஏனெனில் அவள் உங்கள் அம்மாவிட்குப்பிறந்த தங்கை, அவ்வாறல்ல இவள் அயல்வீட்டு அக்காவிட்க்குப்பிறந்த தங்கை, அவள் கேட்டவுடன் கொடுத்துவிட்டு சேர்ந்திருப்பதுதான் கௌரவமும் மனிதாபிமானமும், புதிய கல்முனையைக்கட்டியெழுப்புவதில் என்னபிரச்சினை, இனிவரப்போவது உங்களுக்கு 100% சொந்தமான கல்முனை, எத்தனையோ அபிவிருத்திகள் செய்யலாம், எத்தனையோ நாடுகளின் உதவியினைப்பெறலாம், இதனைசெய்யமுடியாத தலைவர்களைப்புறம்தள்ளுங்கள் அதட்குரிய தலைவர்களைத்தெரியுங்கள், முன்னோக்கிச்செல்லும் அறிவுரைகளைத்தேடுங்கள், இதுஒன்றும் பலஸ்தீனியபூமியல்ல தமிழர்கள் ஒன்றும் இஸ்ரேலியர்களுமல்ல, நாங்கள் கடந்தகாலங்களில் விட்டதவறுகளைத்தேடிப்பாருங்கள், வியாபாரஸ்தலங்கள், பொதுச்சந்தை, கல்முனை மாநகரசபையென்பவற்றில் தீர்மானமெடுப்பதில் பங்குபற்றுவதில் என சமஉரிமை தமிழ் மற்றும் சாய்ந்தமருது சமூகத்திட்க்குக்கொடுத்தோமா? கொடுத்திருந்தால் இதுவந்திருக்குமா? இதனைவிட எத்தனையோமடங்கு அவிபிருத்திகண்டிருக்குமே? நமது மகள் பருவவயதடைந்தவுடன் அவளுக்குக்கல்யாணம்செய்து சந்தோசமாக தனிவீடுகட்டி தனிக்குடித்தனமனுப்புவதில்லையா? அல்லது தங்களுடன் எவ்வளவுக்கலாம் அவளை வைத்திருக்கமுடியும் கல்யாணம் கட்டிக்கொடுக்காது இனியும்கலம்தாழ்த்தாது முன்னோக்கிச்செல்லுவோம், எல்லாம் நல்லதர்க்கெனப்பயணிக்கப்பழகுவோம்

பகுத்தரிவாலன் 😃😃😂😂

Srilankan போன்று சிந்திக்கிறவர்கள்தான் இன்று தமிழருக்கும் முஸ்லிம்களுக்கும் தேவைப்படுகிறார்கள். அம்பாறை முஸ்லிம்கள் மத்தியில் Srilankan போன்றவர்கள் அதிகரித்தால் மட்டும்தான் முஸ்லிம்களின் கனவான தென்கிழக்கு மாவட்டத்தை சாத்தியமாக்க முடியும். Hats off Srilankan

Post a Comment