Header Ads



அரையிறுதி வாய்ப்பு யாருக்கு...? 3 இடத்திற்கு 5 அணிகள் போட்டி


இந்த உலக கோப்பை கிரிக்கெட்டில் இலங்கை, தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், ஆப்கானிஸ்தான் அணிகள் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து வெளியேறி விட்டன.

நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணி மட்டுமே (14 புள்ளி) கம்பீரமாக அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைத்துள்ளது. இன்னும் 6 லீக் ஆட்டங்கள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில் மீதமுள்ள 3 அரைஇறுதி இடத்திற்கு 5 அணிகள் முட்டி மோதுகின்றன. இந்த இடியாப்ப சிக்கலில் யார்-யாருக்கு எப்படி வாய்ப்பு என்பதை பார்க்கலாம். 

இந்தியா: 7 ஆட்டத்தில் ஆடி 5 வெற்றி, ஒரு தோல்வி, ஒரு முடிவில்லை என்று 11 புள்ளியுடன் உள்ள இந்திய அணி ஏறக்குறைய அரைஇறுதிக்கு வந்தது மாதிரி தான். கடைசி இரு லீக்கில் (வங்காளதேசம் மற்றும் இலங்கைக்கு எதிராக) ஒன்றில் வெற்றி பெற்றாலும் சிக்கலின்றி அரைஇறுதியை எட்டி விடலாம். இரண்டில் தோற்றாலும் ரன்ரேட்டை குறையாமல் பார்த்துக் கொண்டால் ஆபத்து இல்லை.

இங்கிலாந்து: 10 புள்ளிகளுடன் (5 வெற்றி, 3 தோல்வி) உள்ள இங்கிலாந்து அணி கடைசி லீக்கில் நியூசிலாந்தை (3-ந்தேதி) தோற்கடித்தால் எந்த கணக்கீடும் இன்றி அரைஇறுதி சுற்றை அடையலாம். மாறாக தோற்றால் மற்ற அணிகளின் முடிவுக்காக காத்திருக்க வேண்டி இருக்கும். அதாவது பாகிஸ்தான், வங்காளதேச அணிகள் தங்களது கடைசி கட்ட ஆட்டங்களில் தோற்க வேண்டும்.

பாகிஸ்தான்: 9 புள்ளியுடன் (4 வெற்றி, 3 தோல்வி, ஒரு முடிவில்லை) உள்ள பாகிஸ்தான் அணி கடைசி லீக்கில் வங்காளதேசத்தை (5-ந்தேதி) நசுக்க வேண்டும். அதோடு இங்கிலாந்து அணி, நியூசிலாந்திடம் ‘சரண்’ அடைய வேண்டும். இவ்வாறு நிகழ்ந்தால் மட்டுமே பாகிஸ்தானால் அரைஇறுதிக்கு வர முடியும். ரன்ரேட்டில் பின்தங்கி (-0.792) இருப்பது பாகிஸ்தானுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

நியூசிலாந்து: இதுவரை 11 புள்ளிகள் எடுத்துள்ள நியூசிலாந்து அணி கடைசி லீக்கில் இங்கிலாந்தை வென்றால் போதும். தோற்றாலும் வலுவான ரன்ரேட்டுக்கு பங்கம் வராமல் கவனித்துக் கொள்ள வேண்டும்.

வங்காளதேசம்: 3 வெற்றி, 3 தோல்வி, ஒரு முடிவில்லை என்று 7 புள்ளியுடன் உள்ள வங்காளதேசத்துக்கு அரைஇறுதி கனவு நனவாக வேண்டும் என்றால் அதிர்ஷ்ட தேவதையின் கருணையும் அவசியமாகும். வங்காளதேச அணி எஞ்சிய இரு லீக்கிலும் முன்னாள் சாம்பியன்கள் இந்தியா, பாகிஸ்தானை உருட்ட வேண்டும். நியூசிலாந்து அணி, இங்கிலாந்தை காலி செய்ய வேண்டும். இத்தகைய முடிவுகள் கச்சிதமாக அமைந்தால் வங்காளதேசம் டாப்-4-க்குள் நுழையும்.

3 comments:

  1. Aus-India-NZ-Eng will be in for Semi finals.

    Pak-Bang-Afcan will be kicked out

    ReplyDelete
  2. சின்ன திருத்தம் இலங்கை அணிக்கும் இன்னும்வாய்ப்பு உன்டு

    ReplyDelete
  3. சின்ன திருத்தம் இலங்கை அணிக்கும் இன்னும்வாய்ப்பு உன்டு

    ReplyDelete

Powered by Blogger.