Header Ads



என்னை கொலைசெய்ய 25 மில்லியன் ஒப்பந்தம் செய்யப்பட்டு, அசிட் வீசவும் முயற்சிக்கப்பட்டது - கரு

கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் இடம்பெற்ற அரசியல் மாற்றத்தின்போது என்மீது அசிட் வீச்சு தாக்குதல் நடத்துவதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டன. அதற்கும் அப்பால் என்னைக் கொலை செய்வதற்காக ரூபா 25 மில்லியனுக்கான ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

பத்திரிகை ஒன்றுக்கு அவர் வழங்கிய பிரத்தியேக செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

1965ஆம் ஆண்டு முதல் 1972 வரையிலான காலப்பகுதியில் இராணுவத்தில் இருந்த பொது நான் பூநகரி மற்றும் இயக்கச்சி இராணுவ முகாம்களில் பணியாற்றியிருந்தேன். அக்காலத்தில் யுத்தம் இருக்கவில்லை. பூநகரி முகாம் சிறியவொரு தகரக் கொட்டிலாகவே இருந்தது.

நாட்டின் மொத்த இராணுவ எண்ணிக்கையும் 8 ஆயிரமாகவே இருந்தது. இக்காலத்தில் வெளியாரின் அத்துமீறல்களையும் கடத்தல்களையும் கட்டுப்படுத்துவதும், பொருட்கள் களவாடப்படுவதை தடுப்பதுமே எமது கடமையாக இருந்தது. அப்பிரதேசத்தில் உள்ள தமிழர்கள் மிகவும் அன்பானவர்கள். அவர்களும் நாங்களும் உணவுப் பொருட்களைக் கூட பரிமாற்றிக்கொள்வோம். அந்தளவுக்கு உறவுகள் இருந்தன.

இலங்கை நாடாளுமன்றம் உலகத்தில் உள்ள உன்னதமான சபைகளுள் ஒன்றாக உள்ளது. ஆனால் ஒரு சிலரின் செயற்பாடுகளால் இந்த உயரிய சபையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது.

கடந்த ஒக்டோபரில் முன்னெடுக்கப்பட்ட ஆட்சி மாற்றம் இலங்கை போன்ற ஜனநாயக நாடொன்றில் நிகழ்ந்தமை மிகவும் கவலைக்குரியதாகவுள்ளது. அதனால் தான் எனக்கு ஜனநாயகத்தின் பக்கமாக செயற்பட வேண்டிய நிலைமை ஏற்பட்டது.

இச்சமயத்தில் சபையில் மிளகாய்த்தூள் விசப்பட்டது. எனக்கு அசிட் வீசுவதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டன. அதற்கும் அப்பால் என்னைக் கொலை செய்பவதற்காக ரூபா 25 மில்லியனுக்கான ஒப்பந்தம் யெ்யப்பட்டிருந்தது என குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. MR, KARU ! SPEAKER, NEENGAL EIN POLISIL
    MURAIPAADU SHEIYAMAL, 9 MAAZANGAL KALITHU, PATHIRIHAIKU
    MURAI IDUHIREERHAL.

    ReplyDelete

Powered by Blogger.