July 01, 2019

200 மில்லியன்கள் இந்துக்கள் இருந்தாலும், ஒரு நாடு இல்லாத நிலை - மட்டக்களப்பு மேயர் கவலை

ஆவணப்படுத்தல் இல்லாத காரணத்தினால் நாங்கள் அனைத்தையும் இழந்து வருகின்றோம் என மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் மூன்று பழமை வாய்ந்த ஆலயங்களின் புகழ்பாடும் அருள் நிறை பதிகம், இறுவெட்டு வெளியீட்டு நிகழ்வு இன்று மட்டக்களப்பில் நடைபெற்றுள்ளது.

மட்டக்களப்பு எல்லை வீதி சிந்தாமணிப்பிள்ளையார் ஆலயத்தின் நிர்வாகத்தின் ஏற்பாட்டில் இந்த இறுவெட்டு வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிகழ்வு எல்லை வீதியில் உள்ள மாநகரசபை மண்டபத்தில் சிந்தாமணிப்பிள்ளையார் ஆலயத்தின் கே.உதயகுமார் தலைமையில் நடைபெற்றுள்ளது.

இந்த நிகழ்வில் கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர், முனைக்காடு ஸ்ரீநாகலிங்கேஸ்வரர் ஆலயம், மட்டக்களப்பு சிந்தாமணிப்பிள்ளையார் ஆலயம் ஆகியவை தொடர்பில் பாடப்பட்ட இறுவெட்டு இதன்போது அதிதிகளினால் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.

இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் கருத்து தெரிவிக்கையில்,

உலகத்தில் ஆதிமொழி தமிழ், ஆதிமதம் இந்து மதம். ஆனால் எங்களுக்குள் இருந்த போட்டிகள் காரணமாக வரலாறுகளை தொலைத்தும் 200மில்லியன்கள் இந்துக்கள் இருந்தாலும் எங்களுக்கென்று ஒரு நாடு இல்லாத நிலையிலேயே நாங்கள் இருக்கின்றோம்.

தற்போது விஞ்ஞானிகளினால் கண்டுபிடிக்கப்படும், கூறப்படும் விடயங்கள் எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எமது மெய்ஞானிகளால் கூறப்பட்ட விடயங்களாகும்.

பல விடயங்களை யூதர்களும், அமெரிக்கர்களும் எங்களிடம் இருந்து திருடிச்சென்று தற்போது தங்களது வெளியீடுகளாக வெளிக்கொணர்கின்றனர்.

எமது மதம்தான் உலகத்திற்கு கலை, கலாசாரம், பண்பாடு, அறிவியல், மெய்யியலை உலகுக்கு அறிமுகப்படுத்தியது. இன்றும் எமது பல அறிவியல்கள் விஞ்ஞானிகளுக்கு சவாலாகவுள்ளது. தஞ்சை பெரும்கோயில் உட்பட பல இடங்கள் அவ்வாறு உள்ளது.

இவையெல்லாம் இழந்து போனதற்கு பல காரணங்கள் இருக்கின்றது. முக்கியமாக நாங்கள் ஒன்றையும் ஆவணப்படுத்துவதில்லை. ஆவணப்படுத்துவதையும் வெளிப்படுத்துவதில்லை.

நாங்கள் அனைத்தையும் மூடி மூடிவைத்ததன் காரணமாக பல விடயங்களை நாங்கள் இழந்துவிட்டோம். இலங்கையினை எடுத்துக்கொண்டால் இங்கும் நாங்கள்தான் ஆதிக்குடிகள்.

இராவணன் பரம்பரை நாங்கள்தான். ஆனால் தற்போது அதனை வேறு ஒரு பரம்பரையும் தங்களது என சொந்தம் கொண்டாடும் நிலையேற்பட்டுள்ளது.

அகஸ்தியர் இங்கு தனது பல்கலைக்கழகத்தினை நடாத்தியிருக்கின்றார். இது ஏழாயிரம் வருடங்களுக்கு முன்னர் நடந்திருக்கின்றது.

அதற்கு முன்பாகவே இங்கு தமிழர்கள் இருந்திருக்கின்றார்கள். ஆவணப்படுத்தல் இல்லாத காரணத்தினால் நாங்கள் அனைத்தையும் இழந்து வருகின்றோம்.

மட்டக்களப்பு மான்மியம் என்ற நூல் எழுதப்பட்டுள்ளது. அதில் மட்டக்களப்பு மக்கள் அண்மையில் குடியேறிய மக்கள் என்று எழுதப்பட்டுள்ளது. அக்காலத்தில் இருந்த அறிஞர்கள், புத்திஜீவிகள் அன்று அதனை தடுக்கவில்லை.

அதன் காரணமாக இன்று இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுள்ள 2030ஆம் ஆண்டினை நோக்கிய அபிவிருத்தி இலக்கு என்னும் நூலில் அந்த வசனம் முன்னிலைப்படுத்தப்படுகின்றது.

எமது சரித்திர விடயங்களில், எமது பாரம்பரியங்களை பேணிப்பாதுகாக்கின்ற விடயங்களில் நாங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

இந்த நாட்டினை மதவெறியர்களின் தளமாக மாற்றும் கையிலான நடவடிக்கைகளை சிலர் மேற்கொண்டு வருகின்றனர்.

மதம் எங்களை வழிநடத்துகின்ற ஒரு சக்தியாகும். நாங்கள் மதவெறியர்களாக மாறக்கூடாது. மதமாற்ற விடயங்கள் பல வழிகளில் நடைபெறுகின்றது.

அதற்கு காரணம் எமது இந்து மத சமூகமும் தமது மக்களை சரியாக வழிநடாத்தாமையும் ஒரு காரணமாக அமைகின்றது.

அண்மையில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களில் பலர் இந்துக்களாக இருந்தவர்களாக இருக்கின்றனர். எதிர்காலத்தில் நாங்கள் மதமாற்றங்களை தடுக்கவேண்டும்.

10 கருத்துரைகள்:

இந்தியா, பூட்டான், நேபாளம், மொறீயியஸ் தீவு ஆகிய இந்து நாடுகள் or இந்து பெரும்பாண்மையாக வசிக்கும் நாடுகள் சார்.
உங்களுக்கு இவைகளை “நான்” சொல்லித்தர வேண்டியுள்ளது

இந்தியா, நேபால் இந்துக்கள் அல்லவா? உங்கள் கருத்து தமிழர்களுக்கு என்று இருந்தால் மிகச்சரியாகும் அத்துடன் ஒன்றை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள் நாம் மனிதர்கள் நல்லொலுக்கத்துடன் வாழ இடம் இருந்தால் போதுமானது., இனத்துக்கும்,மதத்துக்கும்,மொழிக்கும் பிரதேசங்களாகவும், நாடுகளாகவும் பிரித்து நிம்மதியை இழக்கச் செய்து விட்டார்கள் 50 வருடங்களுக்கு முன்பு ஆப்பிரிக்கர்கள் நிம்மதியாக இருந்தார்கள் என்பதை எமது வாழ்வில் கண்டோம் ஆனால் இப்போ படிப்படியாக இழந்து கொண்டிருக்கிறார்கள்

What a joke 😃😂😂😂 ஜயா,போட்டி இருக்க வேண்டும் ஆனால்,பொறாமை இருக்க கூடாது.பொறாமை இருந்தால் இருந்த சில விடயங்கலும் அழிந்து போகும்.

ஐயா, தாங்கள் வரலாற்றினை நன்கு படித்து புரிந்து வைத்துள்ளீர்கள். பெரும் மகிழ்ச்சி. அரசியலாளர்களின் ஒரே தொழில் மக்களை ஒற்றுமையாக வைத்திருப்பதுதான். இதே பாதையில் செல்லும்போது கடவுளின் அனுசரணையும் தங்களுக்குக் கிடைக்கும்.மக்களுக்கு பிழையான தகவல்களைக் கொடுக்க வேண்டாம். கீழ்வரும் நாடுகளில் இந்துக்கள்தான் பெரும்பான்மையினர். இன்னும் பல நாடுகளில் இந்துக்கள் ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்திகளாகத் திகழ்கின்றனர்.
Countries with hindu majority are:
1. India - 80%
2. Nepal - 82%
3. Bir tawil - 60%
4. Mauritus - 64%
5. Fiji - 66%
6. Guyana - 60%
7. Suriname - 67%
8. Trinidad & tobago - 46%
9. Bali - 84%
10. North sentinel - 100%

அவர் வாய் தவறி சொல்லிவிட்டார்.இந்துக்கல் என.அவர் சொல்ல வந்தது தமிழர்கள் என.ஏனெனில் இந்துக்கல் தமிழ் மொழி இந்துக்கலை கனக்கே எடுப்பதில்லை.இலங்கை தமிழருக்காக தமிழ் நாட்டை தவிர இந்தியாவின் வேறு மாநிலங்களில் இருந்தோ அல்லது மேலே உள்ள சிலரின் அட்டவனையில் உள்ள நாடுகளில் இருந்தோ எந்த வித ஆதரவும் வரவே இல்லை என்பது முக்கிய விடயம்.

உள்ளதும் ஒரு நாடு நேபாள், அவனுக கூட மத சார்பற்ற நாடுன்னு சொல்லிட்டான், அப்புறம் ajan, ஈழ பிரதமர்ன்னு ருத்திர குமார் குறுக்கு மறுக்கால ஒடுபட்டு திரிஞ்சாரே அவர்ட்ட கேட்கலாமே எங்கைய்யா அந்த நாடு இருக்குன்னு...! 😜😜

யார் இவரா அரபு மொழியை தன் கண்ணில் படக்கூடாது என தீர்மானம் போட்டவராச்சே மதம் பிடிச்ச இந்த ஆள் மேயர்(?)

அப்படின்னா நேபாளத்துக்கு போங்க.

@Rizard, உங்களுக்கு 2012 யிலிந்து சுத்திசுத்தி அடிவிழுகிறது, தொடர்ந்து விழும். இது தவிர ரோகினியா முஸ்லிம்கள், குஜராத், காஷ்மீர், சிரியா என்று பல பல....முஸ்லிம் கொலைகள்...
இவைகளைகளுக்கு எதிராக முஸ்லிம்நாடுகள் என்ன செய்தன?, முட்டாள்களால் என்ன செய்ய முடியும்?

தமிழர் பிரச்சனை at least ஜெனிவா தீர்மானம்கள் வரையாவது உள்ளது. மற்றய ஆதரவுகள் இல்லாமல் எப்படி இவ்வளவு வரையாது முடிந்தது?

@ajan, முஸ்லிம்களுக்கு உலகம் முழுக்க பிரச்சனை இருப்பது அவர்களின் செல்வத்தாலும் வியாபரத்தாலும் தான், இலங்கை இந்தியா போன்ற நாடுகளின் சவூதி தொழிலாளர்களை கேட்டுப்பார், பின்லாடன் கம்பனியில் வேலை செய்வதையே பெருமையாக சொல்வார்கள். அந்த பின்லாடன் குழுமத்தின் தலைமகன் தான் ஒசாமா பின்லாடன். கேடு கெட்ட காலம் தீவிரவாதியாக போய்விட்டான். இப்படித்தான் உலகம் முழுக்க முஸ்லிம்கள் குறி வைக்கப் படுகிறார்கள். தவிர வல்வெட்டித்துறையில் தோணியில் கள்ளக் கடத்தல் செய்து விட்டு உழைக்க தெரியாமல் கூப்பன் அரிசியும் சேனைக் கிழங்கும் தின்னக் கூட வக்கில்லாமல் மேலுக்கு சட்டை கூட வாங்கிப் போட ஆண்மையில்லாமல் தீவிரவாதம் நடத்தவுமில்லை, அடுத்தவன் சதிக்கு ஆளாகினார்கள். குத்தரிசியும் வெட்டு மீனும் ஓசியில கேட்டு ஆயுதம் தூக்கிய ஆட்களை பார்த்து பேசு. உங்களுக்கெல்லாம் மேலுக்கு சட்டை போட விட்டது எவ்வளவு பெரிய தவறு என்று முழு இலங்கைக்கும் தெரியும்.

Post a comment