Header Ads



ஆகஸ்ட் 15, 16 முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க கோரிக்கை

முஸ்லிம்களின் ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தினத்தை முன்­னிட்டு அர­சாங்­கத்­தினால்வழங்­கப்­படும் விடு­மு­றையைத் தொடர்ந்து மேலும் இவ்­வா­ரத்தில் காணப்­ப­டும வியாழன் மற்றும் வெள்ளி 15, 16 ஆம் திகதி ஆகிய இரு நாட்­க­ளிலும் முஸ்லிம் பாட­சா­லைகளுக்கு விடு­முறை வழங்க நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு கோரி கல்வி அமைச்சர் அகி­ல­விராஜ் காரி­ய­வ­சத்­துக்கு முஸ்லிம் சமய கலா­சார மற்றும் தபால்­துறை அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்­துள்ளார்.

கடி­தத்தில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது;

ஆகஸ்ட் 12 ஆம் திகதி முஸ்­லிம்­களின் ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தை முன்­னிட்டு அர­சாங்கப் பாட­சாலை 13 ஆம் திகதி வரை­யிலும் விடு­முறை வழங்­கப்­பட்­டுள்­ளது. மறுநாள் 14 ஆம் திகதி போயா விடு­முறை தினத்தைத் தொடர்ந்­து­மீண்டும் 15 மற்றும் 16 ஆம் திக­தி­களில் வியாழன், வெள்­ளிக்­கி­ழமை ஆகிய இரு நாட்­க­ளிலும் பாட­சாலை நட­வ­டிக்கை இடம்­பெ­ற­வுள்­ளது.

பெருநாள் விடு­மு­றை­யுடன் குறித்த 15, 16 ஆம் திக­தி­களில் தூர இடங்­களில் உள்ள ஆசி­ரி­யர்கள் விடு­மு­றையைப் பெற்­றுக்­கொள்­வ­தற்­கான முயற்­சி­களில் ஈடு­ப­டுவர். மேலும் மாண­வர்­களின் பாட­சாலை வரவும் மிகவும் குறைந்து காணப்­ப­டு­வ­தற்­கான வாய்ப்­புகள் உள்­ளன. இதனால் ஆகஸ்ட் 15, 16 ஆகிய இரு நாட்­க­ளையும் விடு­முறை தினங்­க­ளாக ஆக்­கித்­த­ரு­மாறு தூர இடங்­க­ளி­லுள்ள ஆசி­ரி­யர்­களும், பெற்­றோர்­களும் எம்­மிடம் வேண்­டுகோள் விடுத்­துள்­ளனர்.

எனவே ஆகஸ்ட் 15, 16 ஆம் திக­தி­களில் வழங்­கப்­படும் விடு­முறை தினங்­களை எதிர்­வரும் ஆகஸ்ட், செப்­டெம்பர் மாதங்­க­ளி­லுள்ள சனிக்கிழமை நாளில் பாடசாலை இடம்பெறுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் கல்வி அமைச்சிடம் அமைச்சர் ஹலீம் மேலும் கோரிக்கையினை விடுத்துள்ளார்.

vidivelli 

1 comment:

  1. முஸ்லிம் சமூகத்தின் கல்வி முன்னேற்றம் ஒருபக்கம்வைத்துவிட்டு அவர்களின் விடுமுறை பற்றி மாத்திரம் தான் இந்த அரசியல் வாதிகளுக்குத் தெரிகின்றது. எத்தனை முஸ்லிம் பாடசாலைகளில் ஒழுங்காக ஆசிரியர்கள் கற்பிப்பதில்லை. உரிய பாடங்களுக்கு ஆசிரியர்கள் இல்லை. குறைந்தபட்சம் கழிவறைகள் மிகவும் மோசமான தரத்தில் இருக்கின்றன.பெரும்பாலான முஸ்லிம்பெண் பிள்ளைகள் கழிவறைசெல்வதில்லை. சிறுவயதிலேயே சிறுநீரக செயலிழப்புக்கு மாணவர்களே காரணமாக இருக்கின்றனர். இதுபற்றிபொதுவாக பாடசாலை நிர்வாகத்துக்கும் கவலையில்லை. இதுபற்றி ஆராய்ந்து எங்கள் மாணவர்களுக்கு கற்றல் பணியில் சுமுகமாக ஈடுபட வழியமைக்க ஏதாவது உறுப்படியான திட்டங்கள் இட்டு செயல்பட்டால் எமது சமூகத்தின் கல்வி முன்னேற்றத்துக்கும் உங்கள் கபுறுக்கும் ஏதாவது தேடிக்கொள்ளலாம் என்பது பற்றி சற்று சீரியஸாக சிந்திக்குமாறு சோனக அரசியல்வாதிகளை கேட்டுக்கொள்கின்றேன்.

    ReplyDelete

Powered by Blogger.