June 09, 2019

IS இயக்கத்தையும், புலிகளையும் ஒருபோதும் ஒப்பிடவே முடியாது

- Mano Ganesan -

"முஸ்லிம்கள் ஜஎஸ்காரர்களை காட்டிக்கொடுத்தார்கள். தமிழர்கள் புலிகளை காட்டிக்கொடுக்கவில்லை".

ஆகவே, முஸ்லிம்கள்தான் நாட்டு பற்றாளர்கள் என சில முஸ்லிம் அரசியல்வாதிகளும், முஸ்லிம்களை கவருகிறோம் என நினைத்து சில சிங்கள அரசியல்வாதிகளும் பேசுகிறார்கள்.

இப்படி பேச வேண்டாம் என முஜிபுர் ரகுமானையும் (ஐதேக), பிமல் ரட்நாயக்கவையும் (ஜேவிபி) சமீபத்தில் ஒரு சிங்கள டீவி அரசியல் நிகழ்வின் போது நான் சொன்னேன்.

இது தமிழர்களையும், முஸ்லிம்களையும் மூட்டி விடும் முட்டாள் கருத்து.

ஏதோ இந்நாட்டில் தமிழ், முஸ்லிம் மக்கள் மட்டுமே தவறு செய்து விட்டார்கள் என்றும், பெரும்பான்மை சிங்களம் தவறே செய்யவில்லை என்ற எண்ணத்தையும் ஏற்படுத்தும் கருத்து.

மற்றபடி புலிகள் போராட்டத்தின் போது தமிழரான ஒட்டுக்குழுக்கள் புலிகளை காட்டிக்கொடுக்கவில்லையா? மேலும் நாங்கள் காட்டிக்கொடுத்தோம் என்று கூறிதான் முஸ்லிம்கள், பேரினவாதிகளிடமிருந்து தப்ப வேண்டுமா?

உண்மையில், இன்று புலிகள் இராணுவரீதியாக தோற்கடிக்கப்பட்டு விட்டாலும் கூட, அந்த இயக்கம் தோன்றியதற்கான காரணங்கள் இன்னமும் தோற்கடிக்கப்படவில்லை என்பதே உண்மை.
இந்தியா கொண்டு வந்த 13ம் திருத்தம் கூட இன்னமும் இங்கே முழுமையாக அமுலாகவில்லை.

அடுத்தது, ஜஎஸ் என்பது வெளிநாட்டு இயக்கம். அது இலங்கையில் குண்டை வெடித்து இலங்கை மக்களை கொன்றதை நியாயப்படுத்தவே முடியாது. ஐஎஸ் வன்முறை ஒரு போராட்டம் மாதிரி தெரியவில்லை.

ஒரே நாளில் ஏழு குண்டுகளை வெடித்து விட்டு வெளிநாட்டில் இருந்து ஒருவர் விளங்காத பாஷையில் உரிமை கோருகிறார். இதற்கும், இலங்கைக்கும் என்னய்யா சம்பந்தம்?

ஆகவே ஐஎஸ் வன்முறை இலங்கையில் ஒரு போராட்டம் கிடையாது. இலங்கையில் குண்டு வெடித்த அந்த ஐஎஸ் வன்முறையின் பின்னணி காரணங்களை எவரும் இன்னமும் அறியவில்லை.

புலிகளின் வன்முறை தொடர்பாக அபிப்பிராய பேதங்கள் இருந்தாலும் கூட, புலிகளின் போராட்ட காரணிகள் பகிரங்கமானவை. அவை நியாயமானவை. புலிகளின் போராட்டமே இலங்கையில் மாகாணசபையையாவது தர இலங்கை அரசை நிர்பந்தித்த பிரதான காரணமாக அமைந்தது என்பதை குறைந்தபட்சம் நேற்றைய, நாளைய வடக்கு கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களாவது மனதில் கொள்ள வேண்டும்.

ஆகவே ஐஎஸ் இயக்கத்தையும், புலிகளையும் ஒருபோதும் ஒப்பிடவே முடியாது.

"சுவர்க்கத்தில் 72 கன்னியர் கிடைப்பார்கள்" என்பதெல்லாம் பகுத்தறிவு ஏற்கும் காரணமா? இதையும் புலிகளின் போராட்ட காரணங்களையும் ஒப்பிட முடியுமா?

ஆகவே இப்படி ஒப்பிட்டு பேசி, "முஸ்லிம்கள் காட்டிக்கொடுத்தார்கள்"எனக்கூறி, பேரினவாத மனதை குளிரவைத்து, நியாயப்படுத்தி காலத்தை வீணடிக்காமல் பேரினவாதத்தை துடைத்தெறிய முன்வந்து போராட வேண்டும்.

6 கருத்துரைகள்:

இவன் கிறுக்கனா இல்ல கிறுக்கன் மாதிரி நடிக்கிறானா? ஏன்யா லூசு புலிகளின் துப்பாக்கியில் இருந்து பூவா வந்து விழுந்தது, அனுராதபுரத்தில் அப்பாவி பௌத்த பக்தர்களை கொலை பண்ணியதெல்லாம் பயங்கரவாதத்தில வராதா? ஏன் புலிகளால் சாத்வீக வழியில் தங்கள் கொள்கைகளை முன்னெடுக்காமல் போனது?

Mano is making sense.. we can't compare ISIS with LTTE, Actions of Tamils against Muslim and Actions of Muslim is the bacdrop of LTTE vs Actions of Tamils in the current backdrop..

ஜயா மனோ இரண்டும் கொலைகார இயக்கம்.இரண்டும் தற்கொலை குண்டுதாரிகலை பயன்படுத்தும் இயக்கம்,இரண்டும் சிறுவர்களை கடத்தி பலவந்தமாக போரில் ஈடுபடுத்தும் இயக்கம்,அதிகமாக வங்கி கணக்குகள்,ஆயுதம்,போதை பொருள் வியாபாரம் பண்ணும் இரண்டும் பாசிச,மாபியா கும்பல்,மத வழிபாட்டு தலங்கள் மீது தற்கொலை குண்டு,துப்பாக்கி சூடு நடத்தி மக்களை கொல்லும் இயக்கம்,(காத்தான்குடி பள்ளி,தலதா மாளிகை,மாத்தறை போர்வை பள்ளிவாயல்,அரந்தலாவ தேரர்கல் கொலை/சில உதாரணம்),பொது மக்களை சொந்த ஊர்களில் இருந்து பலவந்தமாக துரத்தி அங்கும் இங்கும் அகதிகளாக அலைய வைக்கும் இரண்டு இயக்கமும், அடுத்த நாடுகளின் மீதும்,அடுத்த நாட்டு பிரதமர்,அரசியல் வாதிகளை இரண்டு இயக்கமும் கொல்லும்.இறுதியாக தாம்மால் போரிட முடியாமல் போகும் போது பொது மக்களை குறுகிய நிலப்பரப்பில் பணயக் கைதிகளாக தடுத்து வைத்து மனித கேடயங்கலாக்கி அந்த அப்பாவி மக்களையும் அழிய விட்டு தாமும் அழிந்து நாசமாய் போகும்.இரண்டு இயக்கமும் இந்த நூற்றாண்டின் அரக்கர்கள்,நாய்கள்,மிருகங்கள்,மனித இரத்தம் குடித்த பிசாசுகல்.ஜயா அமைச்சரே எனது பதிவில் உள்ள பாசிச,தீவிர வாதத்தை புலிகள் செய்யவில்லை என உங்களால் மறுக்க முடியும்? அப்படி மறுப்பீர்கலானால் நீங்கள் கடந்த 37 வருடங்கள் கோமாவில் இருந்திருக்க வேண்டும்.அல்லது மனசாட்சி இல்லாத மனிதனாக இருக்க வேண்டும்.இன்னும் நிறைய பட்டியல் உள்ளது இரு தீவிர,பாசிச நாய்கலினை பற்றி ஆனால் நேரம் போதவில்லை.

Mr. Mano you are telling the Truth.
ISIS terrorist not like LTTE. NO Comparison...
These People are trying to separate Hindu Muslims (Tamils).

ஐே.வி.பி. செய்யாத கொலைகளா? ஐே.வி.பி.யை காட்டிக்கொடுத்த சிங்கள மக்களை இரக்கம் இல்லாமல் கொலைசெயதவர்கள் தான் இந்த 'பிமல் ரட்நாயக்க ' போன்றவர்கள். முஜிபுர் ரகுமானின் ஆட்கள் செய்யாத மதவாத பிரச்சாரமா? மதத்தின் மீது சத்தியம் செய்து விட்டு இரவோடு இரவாக துரோகம் செய்பவர்கள். இவர்களுக்கு வரலாறு சொல்லி புரிய வைக்க இயலாது. இவர்கள் உடன் சிங்களத்தில் பேசி சாதிப்பது எல்லாம் வீண் விரயம். 9 பேர் ஓடிட் டினம் என்று பந்தா காட்டுபவர்கள் முஸ்மில் விடயத்தில் அமைதி காப்பது ஏன்? அவர் என்ன தமிழரா? அனுபவித்தவர்கள் ஓடிவருவார்கள் விரைவில். தியாகத்தை பற்றி இவர்களுக்கு விளங்கப்படுத்த முடியாத அளவுக்கு மூடர் கூட்டம் இவர்கள். நன்றி

ஐே.வி.பி. செய்யாத கொலைகளா? ஐே.வி.பி.யை காட்டிக்கொடுத்த சிங்கள மக்களை இரக்கம் இல்லாமல் கொலைசெயதவர்கள் தான் இந்த 'பிமல் ரட்நாயக்க ' போன்றவர்கள். முஜிபுர் ரகுமானின் ஆட்கள் செய்யாத மதவாத பிரச்சாரமா? மதத்தின் மீது சத்தியம் செய்து விட்டு இரவோடு இரவாக துரோகம் செய்பவர்கள். இவர்களுக்கு வரலாறு சொல்லி புரிய வைக்க இயலாது. இவர்கள் உடன் சிங்களத்தில் பேசி சாதிப்பது எல்லாம் வீண் விரயம். 9 பேர் ஓடிட் டினம் என்று பந்தா காட்டுபவர்கள் முஸ்மில் விடயத்தில் அமைதி காப்பது ஏன்? அவர் என்ன தமிழரா? அனுபவித்தவர்கள் ஓடிவருவார்கள் விரைவில். தியாகத்தை பற்றி இவர்களுக்கு விளங்கப்படுத்த முடியாத அளவுக்கு மூடர் கூட்டம் இவர்கள். நன்றி

Post a Comment