Header Ads



Dr சாபியை விடுவிக்க முயற்சி, முஸ்லிம் அரசியல்வாதிகள் குரோதமாக பேசும்போது அதுபற்றி யாரும் குரல் கொடுக்கவில்லை

புலனாய்வுப் பிரிவினர் குற்றவாளிகளை பாதுகாக்கின்றனர் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் -26- கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்…

குருணாகல் மருத்துவர் சஹாப்டீன் சாபியை விடுதலை செய்வதற்காக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் முயற்சித்து வருகின்றனர்.

குற்றப் புலனாய்வுப் பிரிவின் சில அதிகாரிகள் இவ்வாறு செயற்பட்டு வருகின்றனர்.

குற்றப் புலனாய்வுப் பிரிவு குற்றவாளிகளை பாதுகாக்கும் ஒர் மத்திய நிலையமாக மாறியுள்ளது. நான் கூறுவது பொய்யென்றால் அதனை நிரூபிக்க வேண்டும்.

அஸ்கிரி பீடாதிபதி இனவாதத்தை தூண்டுவதாக அரச சார்பற்ற நிறுவன செயற்பாட்டாளர் பாக்கியசோதி சரவணமுத்து முறைப்பாடு செய்துள்ளார்.

எனினும், சிவாஜிலிங்கம், விக்னேஸ்வரன் மற்றும் முஸ்லிம் அரசியல்வாதிகள் உள்ளிட்டவர்கள் ஏனைய மதங்கள் மீது குரோத உணர்வைத் தூண்டி பேசும் போது யாரும் அது பற்றி குரல் கொடுக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

4 comments:

  1. உங்களிடமிருந்து பழகிக் கொண்டவர்கள் தான். முள்ளை முள்ளால் தானே எடுக்க வேண்டும்.

    ReplyDelete
  2. First they have to put u in Jail...then all problems solved....

    ReplyDelete
  3. என்னய்யா இது சின்னப்புல்ல தனமா இருக்கு

    ReplyDelete
  4. கள்ளப்பாஸ்ட்போர்ட் வைத்துள்ள உன்னையும் டிப்லோமடிக் பாஸ்ட்போர்ட் சட்ட விரோதமாக வைத்திருக்கும் உனது மனைவியும் சிறையில் செல்லாது காப்பாற்றியதும் இந்த புலனாய்வுத் துறை என்பதை மக்கள் அவ்வளவு அவசரமாக மறந்துவிடவில்லை. படு துவேசம் பிடித்த இனவாதியையும் அவனைச் சேர்ந்தவர்களையும் அழித்து நாசமாக்குமாறு நாம் அனைவரும் அல்லாஹ்விடம் பிரார்த்தனைசெய்வோம்.

    ReplyDelete

Powered by Blogger.