Header Ads



குற்றமற்றவர் என உறுதியான பின்னரும் Dr ஷாபி, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருப்பது ஏன்...?

குருணாகல் போதனா வைத்தியசாலையின் பிரசவ மற்றும் மகப்பேற்று பிரிவின் வைத்தியர் சேகு ஷியாப்தீன் மொஹமட் ஷாபிக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள கருத்தடை விவகாரம் தொடர்பிலான குற்றச்சாட்டு குறித்து இதுவரை சாட்சிகள் வெளிப்படுத்தப்படவில்லை என்று சாட்சி சுருக்கங்கள் அடங்கிய அறிக்கை ஊடாக குற்றப்புலனாய்வுப் பிரிவு இன்று குற்றவியல் நீதீமன்ற நீதிபதிக்கு அறிவித்தது.

அத்துடன் வைத்தியர் ஷாபிக்கு எதிராக முன்வைக்கப்பட்ட பயங்கரவாத அடிப்படைவாத அமைப்புக்களுடன் தொடர்புகளைப் பேணியதாக தெரிவிக்கப்பட்ட விடயமும் உண்மைக்குப் புறம்பானது என விசாரணைகளில் உறுதியாகியுள்ளதாக சீ.ஐ.டி நீதிமன்றுக்கு அறிவித்தது.

வருமானத்தை மீறிச் சொத்து சேர்த்தமை தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றின் ஊடாக நிதி பெற்றமை தொடர்பில் மேலதிக விசாரணைகளுக்காக இரு தனியார் வங்கிகளில் விரிவான அறிக்கையை பெற்றுக் கொள்ளவும் சி.ஐ.டி நீதிமன்ற உத்தரவை பெற்றுக் கொண்டது.

இதேவேளை வைத்தியர் சாபிக்க எதிராக பயங்கரவாதிகள் மற்றும் தௌஹீத் ஜமாஅத் அமைப்புடன் தொடர்பு உள்ளதாகக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்து. அது தொடர்பில் நாம் விரிவாக விசாரித்தோம். அவ்வாறான தொடர்புகள் வைத்தியர் ஷாபிக்கு உள்ளதா என்பது குறித்து தேசிய உளவுத்துறை , பயங்கரவாத புலனாய்வு பிரிவு , முப்படை, அதிரடிப்படை உள்ளிட்ட பயங்கரவாதிகள் தொடர்பாக ஆராயும் நிறுவனங்களிடம் அறிக்கை கோரினோம். அவர்கள் அனைவரும் வைத்தியர் ஷாபிக்கு அவ்வாறான எந்த தொடர்பும் இல்லை என அறிக்கை அளித்துள்ளனர். குருணாகல் பொலிஸார் இந்த விடயத்தில் சரிவர விசாரணைகளை செய்ய வில்லை என்பதும் அவர்களது விசாரணைகளில் குளறுபடிகள் உள்ளதையும் அது சார்ந்த எமது விசாரணைகளில் வெளிப்படுத்தப்படுள்ளது.

இதேநேரம் வைத்தியர் ஷாபி சட்டவிரோதமாக சொத்து சேர்த்தமை தொடர்பில் உள்ள குற்றச்சாட்டு குறித்து விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. வைத்தியர் ஷாபிக்கு 14 அசையா சொத்துக்கள் உள்ளன. அவற்றின் மொத்த பெறுமதி சுமார் 5 கோடியே 30 இலட்சம் ரூபாவாகும். அவரது மொத்த மாத வருமானம் சுமார் 19 33,000 ரூபா.

வைத்தியர் ஷாபி 37 மில்லியன் ரூபா பெறுமதியான முதலீடுகளையும் செய்துள்ளார். வைத்தியர் என்ற ரீதியில் தனக்கு கிடைத்த வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரங்கள் இரண்டை 12 மில்லியன் ரூபாவுக்கு விற்பனை செய்ததாக அவர் கூறுகிறார். தனது சொத்துக்கள் , அவற்றை உழைத்த விதம் தொடர்பில் விரிவாக வாக்குமூலம் தந்துள்ளார். இவற்றில் சந்தேகத்துக்கு இடமான விடயங்கள் இதுவரையில் கண்டறியப்படவில்லை.

எனினும், இந்திய அரேபியர் ஒருவருடன் தொட்புப்பட்டு அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றின் பணம் பெற்றமை தொடர்பிலான விடயம் தொடர்பில் தொடரந்து விசாரணைகள் நடக்கின்றன. அதற்காக அந்த அரச சார்பற்ற நிறுவனத்தின் சார்பில் அமானா, கொமர்ஷியல் வங்கிகளில் உள்ள இரண்டு வங்கி கணக்குகள் தொடர்பில் முழுமையான அறிக்கையைச் சமர்பிக்க அவ்வங்கிகளுக்கு உத்தரவிடுமாறு வேண்டுகின்றோம். (உத்தரவு பிறப்பிக்கப்பட்டது)

இந்நிலையில், இது வரையான விசாணைகளின் அடிப்படையில் வைத்தியர் ஷாபியை தொடர்ந்தும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைப்பது நியாயமானதாகத் தெரியவில்லை. எனவே அது தொடர்பில் நாம் பாதுகாப்பு செயலாளரை தெளிவுபடுத்தவுள்ளோம் எனக் குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்தது.

3 comments:

  1. தெளிவாக தெரிந்து விட்டது குற்றமற்றவர் என்பது.

    ReplyDelete
  2. மாசா அல்லாஹ் - நீதியையும் நாட்டில் சமாதானத்தையும் நிலைநாட்ட உதவிய CID இனருக்கு எமது மனமாரந்த நன்றிகள் பல உரித்தாகும்.

    ReplyDelete
  3. Ordinary Sri Lankans are very clear minded people. There are something wrong in the environment. Have to discover where the mistakes crop-up.

    ReplyDelete

Powered by Blogger.