Header Ads



Dr ஷாபி மீது தீர்வுக்காண, அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் முன்வரவில்லை


அரசாங்க  வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உறுப்பனர்கள் தொழில்சார் பிரச்சினைகளுக்கு தீர்வுக்காணாமல் அரசியல் நோக்கங்களுக்காக செயற்படுவதாக  சுகாதார அமைச்சர்  ராஜித சேனாரத்ன் குற்றஞ்சாட்டியுள்ளார். 

அரசாங்க வைத்திய அதிகாரிகள் மன்றத்தை சேர்ந்த வைத்தியர்களுக்கும் சுகாதார அமைச்சருக்கும் இடையிலான விசேட கலந்துரையாடலொன்று இன்று சுகாதார அமைச்சில்  இடம்பெற்றது. 

இந்த கலந்துரையாடலில் வடக்கு , கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் வைத்தியர்கள் கலந்துக்கொண்டிருந்தனர். இதன்போது பல்வேறு பிரச்சினைகளை அமைச்சிரடம் முன்வைத்துள்ளளது.  அந்த பிரச்சினைகளுக்கு சாதகமான தீர்வையும் அமைச்சர்  ராஜித சேனாரத்ன வழங்கியுள்ளதாக சுகாதார அமைச்சு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த கலந்துரையாடலின் போது  அமைச்சர்  அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கதின மீது அமைச்சர் இவ்வாறு குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும் வைத்தியர்களுகான சேவைக்கால மேலதிக நேரக் கொடுப்பனவை ஆறு மணித்தியாலம் வரை பெற்றுக்கொடுக்கவும், சம்பள கொடுப்பனவுகளில் காணப்படும் பிரச்சினைக்கு தீர்வுக் காணல், வைத்தியர்களின் இடமாற்றம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளதோடு அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயற்பாடுகளினால் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலைகாரணமாக வைத்தியர்களின் இடமாற்றத்ததை  முறையாக மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

குருணாகலை வைத்தியசாலையின் வைத்திய ஷாபிமீது  முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு தீர்வுக்காண அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் முன்வரவில்லை என்று  தேசிய முஸ்லிம் வைத்தியர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அதேபோன்று வைத்தியர்களின்  பிரச்சினைகள் தொடர்பிலும்  விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது .  

No comments

Powered by Blogger.