Header Ads



சண்டித்தனம் செய்த, ரதன தேரர் - நீதிமன்றத்தை நாடுகிறது CID

நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரருக்கு எதிராக நீதிமன்றத்தில் முறைப்பாடு செய்ய குற்றப் புலனாய்வு திணைக்களம் தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது.

குருணாகல் போதனா வைத்தியசாலையின் மருத்துவர் சிஹாப்தீன் ஷாபி மீது சுமத்தப்பட்டுள்ள குடும்ப கட்டுப்பாடு தொடர்பான குற்றச்சாட்டு குறித்து விசாரித்து வரும் அதிகாரிகளுக்கு அச்சுறுத்தும் வகையிலான அழுத்தங்களை கொடுத்து, தடையேற்படுத்தியமை தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தும் அதிகாரிகளுக்கு அழுத்தங்களை ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்தும் ஊடகங்களில் கருத்துக்களை வெளியிட்டு வந்த ரதன தேரர், வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்ட தினத்திற்கு முதல் நாள் குருணாகல் பிரதேசத்திற்கு சென்றிருந்துடன், இந்த சம்பவத்தை அறிவியல் ரீதியாக உறுதிப்படுத்தக் கூடாது, சமூக அறிவியல் ரீதியாக உறுதிப்படுத்த வேண்டும் எனக் கூறி இனவாத ரீதியான கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

அத்துடன் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகளுக்கு பிள்ளைகள் இருக்கின்றனர் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் என்று அச்சுறுத்தும் வகையில் பேசியதாக கூறப்படுகிறது.

தனது ஆதரவாளர்களுடன் நேற்று குருணாகல் நீதவான் நீதிமன்ற வளாகத்திற்குள் சென்றிருந்த அத்துரலியே ரதன தேரர், குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் திசேராவின் தோளில் தட்டி அச்சுறுத்தும் வகையில், “ உலகமும் இதனை பார்த்துக் கொண்டிருக்கின்றது” எனக் கூறியுள்ளார்.

வழக்கு விசாரணைகள் முடிவடைந்த பின்னர் ஊடகங்களிடம் பேசிய அத்துரலியே ரதன தேரர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் திசேராவை பகிரங்கமாக சாடியிருந்தார்.

இவ்விதமாக அத்துரலியே ரதன தேரர், தொடர்ந்தும் விசாரணை அதிகாரிகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் அழுத்தங்களை கொடுப்பதால், அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் முறைப்பாடு செய்ய குற்றப் புலனாய்வு திணைக்கள் தீர்மானித்துள்ளது.

4 comments:

  1. apadyo avana pidichu siraia podunka

    ReplyDelete
  2. Who is this notorious monk? arrest him for all consummate lies he made in the media.

    ReplyDelete
  3. இப்படி வேறு இனத்தை சார்ந்த மதகுருமார் நடந்து கொண்டால்,அவரின் தற்போது என்னவாகியிருக்கும்?

    ReplyDelete
  4. இவனுக்குத் தேசியப்பட்டியல் கொடுத்த ரணில்தான் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இது ரணிலின் கடமை

    ReplyDelete

Powered by Blogger.