Header Ads



மேல் மாகாண ஆளுநர், முசம்மிலிடம் CID விசாரணை

(எம்.எப்.எம்.பஸீர்)

பம்பலபிட்டி, சோர்பரி கார்ட்ன் பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து சுமார் 1120 இற்கும் அதிகமான மூன்று வகை தோட்டக்களை வீடொன்றிலிருந்து சட்ட விரோதமாக அகற்றி மறைத்து வைத்தமை தொடர்பில் மேல் மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முசம்மிலிடம் சி.ஐ.டி. விசாரணைகளை முன்னெடுத்துள்ளது. 

இது தொடர்பில் அவரிடம் வாக்கு மூலம் பதிவு செய்துள்ள சி.ஐ.டி.யின் சமூக கொள்ளை தொடர்பிலான விசாரணைப் பிரிவு , அது தொடர்பில் கைது செய்யப்பட்ட ஆளுநர் ஏ.ஜே.எம். முசம்மிலுக்கு மிக நெருக்கமான அரூஸ் எனும் சந்தேக நபரையும், கொள்ளுபிட்டி பொலிஸ் நிலையத்தின் கான்ஸ்டபிள் ஒருவரான இந்திக பண்டார என்பவரையும் இன்று சந்தேக நபர்களாக கொழும்பு நீதிவான் நீதிமன்றில் சி.ஐ.டி. ஆஜர் செய்தது. 

இதன்போது அவ்விருவரையும் தலா ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணைகளில் செல்ல கொழும்பு மேலதிக நீதிவான் தனுஜா ஜயதுங்க அனுமதி வழங்கினார். 

வெடிபொருட்கள் கட்டளைச் சட்டம் மற்றும், தண்டனை சட்டக் கோவையின் கீழ் இவ்விருவரும் இன்று மன்றில் ஆஜர் செய்யப்பட்டிருந்த நிலையிலேயே அவர்களுக்கு  பிணை வழங்கப்பட்டது. இந் நிலையில் அவ்விருவரும் ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிறன்று சி.ஐ.டி.யில் கையெழுத்திட வேண்டும் எனவும் நீதிவான் இதன்போது உத்தரவிட்டிருந்தார்.

1 comment:

  1. இவர வெளியேற்ற உண்ணாவிரதம் நடக்குமா?

    ReplyDelete

Powered by Blogger.