Header Ads



முஸ்லிம் அரசியல் தலைமைகளின், அடுத்த இலக்கு என்ன..?

அடுத்து இடம்பெறவுள்ள முஸ்லிம் அரசியல் நிகழ்ச்சி நிரல்கள்.....

1. JVP உடனான பேச்சுவார்த்தைகள்
2. TNA உடனான பேச்சுவார்த்தைகள்
3. மலையக கட்சிகளுடனான பேச்சுவார்த்தைகள்
4. மேல் மாகாண மக்கள் முன்னணியுடனான பேச்சுவார்த்தைகள்
5. பௌத்த மகா சங்கங்களுடனான பேச்சுவார்த்தைகள்
6. கார்டினல் மல்கம் ரன்ஜித்துடனான பேச்சுவார்த்தைகள்
7. எதிர்க்கட்சி தலைவருடனான சந்திப்பு
8. வெளிநாட்டு பிரதிநிதிகளுடனான சந்திப்பு

இவர்களுடனான பேச்சுவார்த்தைகள் மற்றும் சந்திப்புக்களில் முஸ்லிம்களின் பாதுகாப்பு, வீனான கைதுகள், சிறையடைப்பு, விடுதலை, திட்டமிட்ட குடிமனைகள் மற்றும் பொருளாதார நிலைகள் மீதான தாக்குதல், மத நிறுவனங்கள் மற்றும் பள்ளிவாயல்கள் மீதான தாக்குதல் போன்ற விடயங்கள் பற்றி பேசப்படவுள்ளன.

மேற்கூறப்பட்ட விடயங்களை எதிர்காலத்தில் கையாள்வது தொடர்பிலும், அவற்றில் மேற்கூறப்பட்ட தரப்பினர்களின் ஒத்துழைப்பு மற்றும் ஆதரவு என்பன தொடர்பாகவும் பேசப்படவுள்ளன.

குறிப்பாக பதவிகளை விடவும், முஸ்லிம்கள் இந்த நாட்டில் பாதுகாப்பாகவும் சுதந்திரமாகவும் வாழ்வதும், இயல்புநிலைக்கு திரும்புவதுமே, முஸ்லிம் அரசியல் தலைமைகளின் முக்கிய நோக்கம் என்பது தெளிவாக உணர்த்தப்படவுள்ளது.

இவற்றில் நமது தலைமைகள் வெற்றி பெறவும் நமது சமூகம் நன்மையடையவும் அல்லாஹ்வை பிரார்த்தியுங்கள்.

A.L.Thavam

7 comments:

  1. நன்றி திரு. எஎல். தவம். இன்றைய காலக்கட்டத்தில் முஸ்லிம்கள் சிந்திக்க விவாதித்து முடிவெடுக்க வேண்டிய சில அடிப்படைகளை உங்கள் பதிவில் முன்வைத்துள்ளீர்கள். முஸ்லிம் அறிஞர்கள் இந்த விவாதத்தை முனெடுத்துச் செல்லவேண்டும். பதவி விலகிய அமைச்சர்கள் கருத்தரங்கு மாநாடுஎன கூடி முஸ்லிம்கள் எந்த கட்ச்சியில் அணியில் இருந்தாலும் முஸ்லிம் மக்களின் குறைந்த பட்ச்ச கோரிக்கைகள் முஸ்லிம் மக்கள்மீது வைக்கபடும் அடிப்படைவாதம் தனிச் சட்டம் உட்பட்ட கேழ்விகள் தொடர்பாககுறைந்தபட்ச்ச பொது நிலைபாடு ஒன்றை உருவாக்க வேண்டும்.

    ReplyDelete
  2. காலம் கடந்தாலும்,மிகச் சரியான திட்டம்.இனவாதிகலுக்கு செருப்படி.இதே அனைத்து Muslim அரசியல் வாதிகளும் இறுதியாக ஜெனிவாக்கும்,ஜரோப்பிய யூனியன்,நேட்டோ தலைமைக் காரியாலயங்கல்.இலங்கைக்கு உதவி வழங்கும் அரச மற்றும் அரச சார்பற்ற அமப்புக்கலின் பிரதி நிதிகலையும் சந்திப்பது மிகவும் அவசியமானது.

    ReplyDelete
  3. இந்த முஸ்லிம் அரசியல்வாதிகள்,களத்தில் இறங்க முன்பு சர்வதேச அரசியல் நிபுணர்களிள் ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் பெற்றுக்கொள்ள வேண்டும். இந்த அரசியல் காரணமான எதிர்காலத்தில் முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளவேண்டிவரும் சாதக,பாதக காரணிகளை சரியாகக் கவனத்தில் கொள்ளப்படவேண்டும்.

    ReplyDelete
  4. மறுபடியும் அமைச்சுகளை எடுக்க மாட்டார்களே.

    ReplyDelete
  5. INNUM ONRAI SHERTHUKOLLUNGAL. WALAMAI POL MATHIYA KILAKKU NADUHALUKKU SHENRU,INDA ARASHANGATHUKU PICHAI KELUNGAL.

    ReplyDelete
  6. எமது அரசியல் தலைமைகள் மிகவும் அவதானமாகக் கையாளவேண்டிய அணுகுமுறைகளை முன்னெடுப்பதுடன், கடந்தகால தமிழ்த்தலைமைகள் விட்ட தவறுகளினை படிப்பினையாகக்கொள்ளவேண்டும், எடுத்தவுடன் ஐக்கியநாடுகள் சபையென்ற அணுகுமுறை உள்நாட்டிலிருந்து இப்பிரச்சினையில் முஸ்லிம்களுக்கு ஆதரவளிக்கும் சிங்கள மக்களின் ஆதரவினை மழுங்கடித்துவிடும், இப்பிரச்சினைக்கு நடுநிலையான சிங்களமக்களினையும் அரவணைத்துச்செல்வதனூடாகவே நீண்டகால வெற்றியினைப்பெறமுடியும், ஏனெனில் நாங்கள் சேர்ந்துவாழவேண்டிய சகோதர சமூகங்களாக சிங்கள தமிழ் சமூகங்கள் காணப்படுகின்றன அவர்களின் 90 % க்கு மேற்படட மக்கள் இதனை ஆதரிக்கவில்லை, ஆகவே இறுதியாகநாடவேண்டிய இடமாகவே ஐக்கியநாடுகள்சபை இருக்கவேண்டும், ஏனெனில் அது தீர்வு தரும் சபயல்ல

    ReplyDelete

Powered by Blogger.