Header Ads



ஹிஸ்புல்லாவின் கருத்து முஸ்லிம்களை தூண்டி, விடுவதாககூறி பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு

கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, காத்தான்குடி பிரதேச முஸ்லிம்கள் மத்தியில் வெளியிட்ட கருத்து ஒன்றுக்கு எதிராக பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

பௌத்த தகவல் மையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அங்குனுகல்ல சிறி ஜினாநந்தா தேரர் உட்பட, சிங்கலே அமைப்பின் உறுப்பினர்கள் இந்த முறைப்பாட்டை பதிவு செய்தனர்.

இது தொடர்பில் அங்குனுகல்ல தேரர் கூறுகையில்;

“காத்தான்குடியில், பொது மக்கள் மத்தியில் உரையாற்றிய ஹிஸ்புல்லா; இலங்கையில் மாத்திரமே முஸ்லிம்கள் சிறுபான்மையாக உள்ளனர் என்றும், ஆனால் உலகில் பெரும்பான்மையாக இருக்கின்றனர் என்று கூறியதோடு, அதனால் இலகுவாக எம்மை அடக்கிவிட முடியாது என்றும் தெரிவித்திருந்தார்.

இந்தக் கருத்து முஸ்லிம் மக்களை தூண்டி விடுவதாக அமைந்திருந்தது.

இதற்கு எதிராகவே நாங்கள் முறைப்பாடு செய்தோம்” என்றார்.

3 comments:

  1. Yes he is right. Get loss!

    ReplyDelete
  2. Hmmm...appa ungada petchukkellam entha policela muraippadu seyrathu?

    ReplyDelete
  3. He told the fact. For that also police complain.I dont understand from which jungle these people are coming from.

    ReplyDelete

Powered by Blogger.