Header Ads



பேஸ்புக் அறிமுகம் செய்யவுள்ள 'லிப்ரா' டிஜிட்டல் பணம்

லிப்ரா எனும் டிஜிட்டல் கரன்சியை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது சமூக ஊடக நிறுவனமான பேஸ்புக்.

குறுஞ்செய்தி அனுப்பவது எவ்வளவு சுலபமோ, அந்த அளவுக்கு பணத்தை சேமிப்பபது, அனுப்பவது மற்றும் செலவு செய்வதை இது சுலபமாக்கும். ஒரு ஸ்மார்ட் ஃபோனும், இணைய வசதியும் இருந்தால் போதும் என்கிறது அந்த நிறுவனம்.

இந்த டிஜிட்டல் பணத்தின் பரிமாற்றத்துக்கு சிறிய அளவிலான கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகெங்கும் வங்கி கணக்கு இல்லாத 170 கோடி மக்கள் மற்றும் அவர்கள் பணப் பரிமாற்றம் மேற்கொள்ள செய்யும் செலவுகள் ஆகியவை பற்றி இந்த திட்டம் பற்றிய அறிக்கையில் ஃபேஸ்புக் விவரித்துள்ளது.

இந்த டிஜிட்டல் பணப் பரிமாற்றம் நடைமுறைக்கு வரும்போது வங்கிக் கணக்கு இல்லாதவர்களை மட்டுமல்லாது, அந்தந்த நாடுகளின் அடையாள அட்டைகள் இல்லாதவர்களை சரிபார்ப்பது ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு கடினமானதாக இருக்கும்.

ஊபெர், மாஸ்டர் கார்ட் மற்றும் பேபால் ஆகிய நிறுவனங்களும் இத்தகைய முயற்சியில் ஈடுப்பட்டுள்ளன.

ஏற்கெனவே உள்ள பிட்காயின் உள்ளிட்ட டிஜிட்டல் கரன்ஸிகளை ஆய்வு செய்துள்ளோம். லிப்ரா அவ்வாறாக இருக்காது என்கிறது ஃபேஸ்புக்.

பிட்காயின் போல் மெய்நிகர் பணமாக இல்லாமல் லிப்ரா உண்மையான சொத்துகளை கொண்டு சுதந்திரமாக மேலாண்மை செய்யப்படும்.

No comments

Powered by Blogger.