Header Ads



திசர பெரேராவை முதலில் துடுப்பெடுத்தாட, வலியுறுத்தி மரத்தில் ஏறியபடி போராட்டம்.

இலங்கை அணிக்காக மீகொடப் பகுதியை சேர்ந்த ஒருவர் வித்தியாசமான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்.

தற்போது இடம்பெற்று வரும் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி சார்பில் திசர பெரேராவை முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்க வேண்டுமென வலியுறுத்தி மீகொட பகுதியைச் சேர்ந்த  நபர் ஒருவர் மரத்தில் ஏறியபடி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்.

இந்நிலையில் குறித்த நபர் இன்று காலை 8.45 மணியளவில் மரத்தில் ஏறிய அவர் தனது போராட்டத்திற்கு முடிவு தெரியும் வரை தான் மரத்திலிருந்து இறங்கப்போவதில்லை எனத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,

“நான் மீகொட பகுதியிலிருந்து வருகிறேன் இன்று காலை 8.45, 9 மணியளலில் இந்த மரத்தில் ஏறினேன்

தற்போது இடம்பெற்று வரும் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் எமது இலங்கை அணி சார்பில் திசர பேரேரா முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்க வேண்டும்

எமது அணி தொடர்ந்து தோல்வியுற்று வருவதை எம்மால் பார்த்துக் கொண்டு இருக்க முடியாது. இங்குள்ளவர்களுக்கு இலகுவான முறையில் எல்லா வேலைகளையும் செய்து கொள்கின்றார்கள்.

நாங்களும் இந்த நாட்டில் வரி செலுத்துகின்றோம் எனவே இவற்றை கேட்பதற்கு எமக்கு உரிமை உள்ளது.

எனவே விளையாட்டுத் துறை அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ மற்றும் இங்கிலாந்தின் இலங்கை அணி முகாமையாளருடன் கதைத்து தனக்கு முடிவு ஒன்றைக் கூற வேண்டும். அவர்களிடமிருந்து முடிவு வரும் வரை நான் போராட்டத்தை  கைவிட மாட்டேன் எனத் தெரிவித்தார்.

இதன் போது ஊடகவியலாளர் ஒருவர், அவர்களிடமிருந்து பதில் வராவிட்டால் என செய்வீர்கள் எனக் கேட்ட போது,

அதற்கு பின் எதுவும் செய்ய முடியாது. எமது இலங்கை அணிக்காக நான் எதையும் செய்வேன் என தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. முட்டாள் வேசிட மகன்...

    ReplyDelete
  2. இந்தியா பைத்தியம் இங்கேயும் வந்து விட்டது

    ReplyDelete

Powered by Blogger.