Header Ads



ஊடகங்கள் எங்களது, குடும்பத்தை கொன்றுவிட்டன - ஷாபியின் மனைவி

பயங்கரவாதிகளால் முழு முஸ்லிம் சமூகமே பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக தடுத்து வைக்கப்பட்டுள்ள குருநாகல் வைத்தியசாலையின் வைத்தியர் ஷாபியின் மனைவி தெரிவித்துள்ளார்.

தனது கணவர் கைது செய்யப்பட்டமையை அடுத்து தமது குடும்பம் அகதி நிலையில் வாழ்ந்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுமார் 4000 சிங்கள பௌத்த பெண்களுக்கு கருத்தடை சிகிச்சைகளை மேற்கொண்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் எனது கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதில் உண்மையில்லை. ஊடகங்களே எங்களது குடும்பத்தை கொன்று விட்டன என்று வைத்தியரின் மனைவியான வைத்தியர் - இமாரா ஷாபி தெரிவித்துள்ளார்.

தனது கணவர் நிரபராதி என்று நிரூபிக்கப்பட்டாலும் பழைய இடத்தில் தொடர்ந்தும் பணியாற்ற முடியுமா? என்பதில் ஐயம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை வைத்தியர் ஷாபி தொடர்பில் தாம் பெற்று கொண்ட சாட்சியங்களை குற்றப்புலனாய்வு பிரிவினர் எதிர்வரும் 27ஆம் திகதியன்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ள என்பது குறிப்பிடத்தக்கது.

4 comments:

  1. Dr. Mrs. Shafi, you should file the case in international Human Rights court against the Sinhala Newspaper who published first time, Monks & Others...

    ReplyDelete
  2. Leave this Sinhala Racist terror country and settle in one respectable country. All the best good Luck.

    ReplyDelete
  3. mrs doctor pls you must go hight court

    ReplyDelete
  4. Mrs. Safi you don't need this Buddhist extremist contry. You dint do your services for this Sinhala terrorist country. you boycott your services to this thugs you go out of this country.

    ReplyDelete

Powered by Blogger.