June 27, 2019

அபாயா என்ற வார்த்தை, தந்திரமாக தவிர்ப்பு - புதிய சுற்றுநிருபத்தில் மறைந்திருக்கும் அபாயம்


இன்று 27.06.2019 வெளிடப்பட்ட சுற்று நிருபம் சம்பந்தமாக.......

ஒரு மாத கால அயராத முயற்சியின் விளைவாக, அரச பழைய சுற்றுநிருபத்திற்கு எதிராக குரல்கள் இயக்கத்தினால் அடிப்படை உரிமை மீறல் வழக்கானது இன்று -27- உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. 

அதேவேளை எமது சமூகத்தை சேர்ந்த பலரின் விடா முயற்சியின் பலனாக இன்றைய தினமே புதிய சுற்றுநிருபமும் வெளிவந்துள்ளது. அல்ஹம்துலில்லாஹ்….

எமது சமூகத்தின் ஆடை சம்பந்தமான பிரச்சினைகள் அனைத்தும் முடிவுக்கு வந்து விட்டதா என்ற கேள்வி இங்கு முக்கியமானது. சட்டரீதியில் பார்ப்பின் ‘இல்லை’ என்பதே அதற்கான விடையாகும். ஏனெனில் புதிய சுற்றுநிருபத்தில் ‘அபாயா’ என்ற வாசகம் தந்திரமாக தவிர்க்கப்பட்டு பெண்களின் உடை தொடர்பில் ‘சாரி, ஒசரி அல்லது கண்ணியமான ஆடை’ என்பதாக வரையறுக்கப்பட்டுள்ளது. 

1. இங்கு ‘கண்ணியமான ஆடை’ என்பதை யார் முடிவு செய்வது? 

2. ஒரு அரச அதிகாரியொருவர் வேண்டுமென்று ‘அபாயா’ ஐ கண்ணியமான ஆடையல்ல என தன்னிச்சையாக தீர்மானம் எடுப்பின் அதற்கான தீர்வு என்ன? 

3. அவ்வாறான தான்தோன்றித்தன நடிவடிக்கைகளுக்கான இடைவெளியை இந்த சுற்றுநிருபம் உள்ளடக்கியுள்ளதல்லவா?

4. ‘ஒசரி’ ஐ போன்று ‘அபாயாவை’ ஒரு சமூகத்தின் கலாச்சார ஆடையாக ஏற்பதனை தடுப்பதற்கான சிந்தனையின் இன்னொரு வடிவம் தான் இப்புதிய சுற்றுநிருபத்தின் உள்ளடக்கம் என்ற சந்தேகம் யாருக்கும் எழவில்லையா?

5. ‘அபாயா’ ஐ அணிவது எமது பெண்களின் அடிப்படை ஆடை உரிமை, என்பதனை விஷேடமாக உறுதிப்படுத்தும் ஏதாவது சட்டரீதியான ஆவணம் அல்லது தீர்மானம் ஏதாவது இந்நிமிடங்கள் வரை எமது சமூகத்திடம் இருக்கின்றதா?

இதற்கான சட்டத்தீர்வு இரண்டு முறைகளில் தான் வர முடியும். 

1) ‘கண்ணியமான ஆடை’ என்ற போர்வையில் அபாயாவை உள்ளடக்குவதனை விட்டுவிட்டு நேரடியாகவே ‘அபாயா’ அல்லது அதற்கொத்த வாசகங்களை கொண்ட சுற்றுநிருபத்தை கொண்டுவர அழுத்தங் கொடுத்தல் அல்லது 

2) அபாயா அணிவதை தடுத்தமையானது எமது பெண்களின் அடிப்படை ஆடை உரிமையை மீறியுள்ளது என்ற நீதிமன்ற தீர்ப்பொன்றினை வழக்கொன்றினூடாக பெறுதல்.

9 கருத்துரைகள்:

NOTHING TO ARGUE IN THIS BUT DON'T FAIL TO FILE THE CASE IN HIGH COURT, IF THE COURT GIVEN THE JUDGEMENT LIKE FRANCE IT WILL BE MORE VALUABLE DOCUMENT FOR OUR FUTURE

நிச்சயமாக அபாயா என்ற வாசகத்தை சேர்க்க வேண்டும்.

still racism on this affares......

சவுதியில் இருக்கிற நினைப்பு. iv ம் சரத்தில் தெளிவாக கூறப்பட்டுள்ளது.

இக்குறிப்பினை எழுதியவரின் கூற்று 200% சரியானதும் முற்றுமுழுவதும் ஏற்றுக் கொள்ளக்கூடியதுமாகும். அபாயா அணிந்தும் அலுவலகங்களுக்குச் செல்லமுடியும் என்ற வெளிப்படையான சுற்றுநிரூபத்தினை (Clear Circular) பொது நிர்வாக அமைச்சு வெளியிடும்வரை அல்லது உயர்நீதிமன்றம் அல்லது இலங்கை மனித உரிமை ஆணையகம் தீர்ப்பளிக்கும் வரை இந்த போராட்டம் முறுவுறுத்தப்படவே கூடாது. நல்லதோரு நரித் தந்திரம்.

இது விடயத்தில் அல்லாஹ் போதுமானவன் இங்கு கண்ணியமான ஆடை என்று மட்டும் (ஏனையவையும், ஒசரி ,சாரி) தவிர்த்து எழுதப்பட்டு இலங்கை நான்கு இன மக்களின் மதங்களுக்கு உட்பட்ட கண்ணியமான ஆடை என்று வரும்போது சிறந்த இளையவர்களை (செஸ் பார்வைகள் இல்லாமலான இளைஞனர்களை )உருவாக்கலாம்.

யாழ் முஸ்லிம் இணையத்தில் சமீப காலமாக முஸ்லிம் பெயரில் மறைந்து கருத்துக் கூற வந்திருக்கும் அநாமதேயங்கள் பற்றி கவனமாக இருங்கள். நடித்து நயவஞ்சகம் செய்வர் என்பதைக் கவனத்தில் எடுக்கவும். எப்படியெல்லாம் துவேஷம் பேசலாம் என்று காத்திருக்கும் கயவர்கள் ஏற்கனவே உள்ளனர்.

Justice Ali நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை மேல Suhaib என்கிற பெயரில் நயவஞ்சகமாக முஸ்லிம்களை உரிமைகளை எதிர்க்கும் ஒரு அடிவருடியை கவனித்து வாருங்கள் அவனுடைய உண்மை முகம் புரியும்.

ஒரு மனினுக்கு எந்த விடயத்தில் செருக்கு,ஆணவம் இருந்தாலும் அவனுக்கு நிம்மதி இல்லை. அது மதச் செருக்கு, இனச் செருக்கு, பிரதேசச் செருக்கு எதுவாக இருந்தாலும் சரியே. ஒருவர் ஒரு நாயை அருவருப்புடன் பார்த்ததுடன் தனது ஆடையையும் உயர்த்திக்கொண்டு சென்றாராம். நாய் சொன்னதாம் உன் ஆடையில் எனது அழுக்குப்பட்டால் கழுவி விடலாம் என் மீது பட்ட உனது செருக்குப் பார்வையை ஏழு கடல்கள் கொண்டு கழுவினாலும் சுத்தமாகாது என்று.....

Post a comment