Header Ads



கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை, தரமுயர்த்த ரணில் வாக்குறுதி - ஹரீஸ் என்ன செய்ய போகிறார்?

கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை உடனடியாக தரமுயர்த்துவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று -19- தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் வாக்குறுதியளித்துள்ளார்.

இது தொடர்பான வாக்குறுதிகள் பலமுறை ரணிலால் வழங்கப்பட்டுள்ள நிலையில், இன்று மாவை சேனாதிராசா மற்றும் ஞா.சிறிநேசன் ஆகிய இருவரிடமும் ரணில் இந்த வாக்குறுதியை வழங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று நாடாளுமன்ற கட்டட தொகுதியில் நடந்த சந்திப்பின்போதே, குறித்த வாக்குறுதியை பிரதமர் ரணில் வழங்கினார்.

வரும் செவ்வாய்க்கிழமையோ, அல்லது அதற்கடுத்து வரும் செவ்வாய்க்கிழமையோ அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பிக்கவுள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை கடந்த சில மாதங்களிற்கு முன்னர் அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்க பிரதமர் தயாரானபோது, முஸ்லிம் காங்கிரஸ் அதை எதிர்த்தது.

இந்நிலையில் இம்முறை முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸை சேர்ந்த யாரும் அமைச்சரவையில் இல்லாத நிலையில், அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பிப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க வாக்குறுதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

6 comments:

  1. பொறுத்தது போதும் அனைவரும் மீண்டும்,மஹிந்தவுக்கு ஆதரவலிப்பதை தவிர வேறு வழியில்லை.இந்த நாய்களின் ஆட்டம் வர வர அதிகரிக்கிறது.இதை அடக்க வேண்டுமானால்,Muslim கள் அனைவரும் மஹிந்தவை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வர வேண்டும்,இப்போதைக்கு இதை தவிர வேறு சிறந்த வழியில்லை.

    ReplyDelete
  2. கல்முனையில் தமிழர் பகுதியை தரம் உயர்துவதால் ஹாரிஸின் வயிறு எரிவதேன்?

    ReplyDelete
  3. என்னை பொறுத்தவரை அப்படி புதிய நகர சபை ஒன்று வருவது வரவேற்கத்தக்க விடயம் தானே ஏனெனில் ஒவ்வொரு இடம் அபிவிருத்தியடையவும் மற்றும் புதிய புதிய வேலைவாய்ப்புகள் என்பன உருவாகின்றன.

    ReplyDelete
  4. தரம் உயர்த்துவது பிரச்சினை இல்லை . தரம் உயர்த்தும் போது கூடவே எல்லையையும் பிரிக்க சொல்லுவார்கள் அதனான் பிரச்சினை .

    ReplyDelete
  5. abdul இது வரவேற்க தக்க கருத்து.

    ReplyDelete

Powered by Blogger.