Header Ads



பயங்­க­ர­வா­தத்­தை வேரோடு இல்­லா­தொ­ழிக்க, மத்­ர­ஸாக்கள் முனைப்­புடன் செயற்­படும் என உறு­தி­ய­ளிக்­கிறோம்

மத்­ர­ஸாக்­களில் உள்ள பாடத்­திட்­டங்கள் அனைத்தும் இந்­நாட்டின் சட்­ட­திட்­டங்­க­ளுக்கு உட்­பட்­டவை. அவற்றில் பயங்­க­ர­வா­தத்தைத் தூண்டும் அல்­லது போதிக்கும் எத்­த­கைய விட­யங்­களும் இல்லை என்­பதை உறு­தி­யா­கவும் பொறுப்­பு­டனும் கூறிக்­கொள்­கிறோம். இலங்­கையில் பயங்­க­ர­வா­தத்­தையும் அதன் சிந்­த­னை­யையும் வேரோடு இல்­லா­தொ­ழிக்க மத்­ர­ஸாக்கள் முனைப்­புடன் செயற்­படும் என உறு­தி­ய­ளிக்­கிறோம் என அரபுக் கல்­லூ­ரி­களின் அதி­பர்கள் மற்றும் நிர்­வா­கி­களின் மாநாட்டில் தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது. அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை, முஸ்லிம் பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் மற்றும் அகில இலங்கை அரபுக் கல்­லூ­ரிகள் ஒன்­றியம் என்­பன இணைந்து நேற்று முன்­தினம் தெஹி­வளை முஹியதீன் ஜும்ஆ பள்­ளி­வா­சலில் அரபுக் கல்­லூ­ரி­களின் அதி­பர்கள், நிர்­வா­கி­க­ளுக்­கான மாநாடு நடை­பெற்­றது. சுமார் 950 பேருக்கு மேற்­பட்டோர் கலந்து கொண்ட இம்­மா­நாட்­டிலே மேற்­கு­றிப்­பிட்ட தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்­டது. மாநாட்டில் மேலும் பல தீர்­மா­னங்கள் நிறை­வேற்­றப்­பட்­டன. அத்­தீர்­மா­னங்­க­ளா­வன,

2019 ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி நடை­பெற்ற பயங்­க­ர­வாத தற்­கொலைக் குண்டுத் தாக்­கு­தல்­களை இம்­மா­நாடு வன்­மை­யாகக் கண்­டிக்­கி­றது.
இத்­தாக்­கு­தல்­களில் உயி­ரி­ழந்­த­வர்­களின் குடும்­பங்­க­ளுக்கு ஆறுதல் கூறு­வ­துடன் காய­முற்­ற­வர்கள் விரைவில் குண­ம­டைய பிரார்த்­திக்­கிறோம்.
சாந்தி, சமா­தானம், சக­வாழ்வு ஆகிய உயர் குணங்­களை ஊக்­கு­விக்கும் இஸ்­லாத்­துக்கும் பயங்­க­ர­வா­தத்­துக்கும் எவ்­வித தொடர்பும் இல்லை என்­பதை இம்­மா­நாடு உறு­தி­யாகக் கூறிக் கொள்­கி­றது.
இந்த தாக்­கு­தல்­க­ளுக்கு நேர­டி­யாக மற்றும் மறை­மு­க­மாக கார­ண­மாக இருந்­த­வர்கள் அனை­வ­ருக்கும் உயர்ந்த பட்ச தண்­ட­னையை வழங்க வேண்டும்.
குரு­நாகல், புத்­தளம், கம்­பஹா ஆகிய மாவட்­டங்­களில் முஸ்­லிம்­க­ளுக்­கெ­தி­ராக மேற்­கொள்­ளப்­பட்ட இன­வாதத் தாக்­கு­தல்­க­ளையும் இம்­மா­நாடு வன்­மை­யாகக் கண்­டிக்­கி­றது. அதே­வேளை அதில் ஈடு­பட்­ட­வர்­க­ளுக்கு உரிய தண்­ட­னை­களை வழங்க வேண்டும் என சம்­பந்­தப்­பட்ட அதி­கா­ரி­க­ளிடம் வேண்­டு­கிறோம்.
பயங்­க­ர­வாத தாக்­கு­த­லுடன் சம்­பந்­தப்­பட்­ட­வர்­களைக் குறு­கிய காலத்தில் கைது செய்து நாட்டின் பாது­காப்பை உறுதி செய்ய உரிய நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்ட நாட்டின் ஜனா­தி­பதி, பிர­தமர், அர­சாங்கம், பாது­காப்பு தரப்­பி­னர்­க­ளுக்கு இம்­மா­நாடு நன்­றி­களைத் தெரி­வித்துக் கொள்­கி­றது. மேலும் பயங்­க­ர­வாதத் தாக்­கு­தலை அடுத்து கைது செய்­யப்­பட்­டுள்ள அப்­பா­வி­களை அவ­ச­ர­மாக விடு­விக்க அர­சாங்கம் ஆவணம் செய்ய வேண்டும்.
மத்­ர­ஸாக்­களில் உள்ள பாடத்­திட்­டங்கள் அனைத்தும் இந்­நாட்டின் சட்­ட­திட்­டங்­க­ளுக்கு உட்­பட்­டவை என்­ப­தையும் அவற்றில் பயங்­க­ர­வா­தத்தைத் தூண்டும் அல்­லது போதிக்கும் எத்­த­கைய விட­யங்­களும் இல்லை என்­பதை உறு­தி­யா­கவும், பொறுப்­பு­டனும் கூறிக் கொள்­கிறோம்.
இலங்­கையில் பயங்­க­ர­வா­தத்­தையும் அதன் சிந்­த­னை­யையும் வேரோடு இல்­லா­தொ­ழிக்க மத்­ர­ஸாக்கள் முனைப்­புடன் செயற்­படும் என்­ப­தற்கு இம்­மா­நாடு பொறுப்­புடன் உறு­தி­மொ­ழி­ய­ளிக்­கி­றது.
இந்­நாட்டில் மத்­ர­ஸாக்கள் தொடர்பில் நிலவும் தப்­ப­பிப்­பி­ரா­யங்­களைக் களைந்து இனங்­க­ளுக்கு மத்­தியில் புரிந்­து­ணர்­வையும் சக வாழ்­வையும் ஏற்­ப­டுத்த மத்­ர­ஸாக்கள் முன்­நின்று செயற்­படும்.
ஆயிரம் வரு­ட­கால வர­லாற்றில் முஸ்­லிம்கள் இந்­நாட்டின் நலன் விரும்­பி­க­ளா­கவும் சமா­தா­னத்தைப் பேணு­ப­வர்­க­ளா­கவும் ஐக்­கி­யத்­தோடு வாழ விரும்­பு­ப­வர்­க­ளா­கவும் இருந்து வந்­துள்­ளார்கள் என்­ப­தையும் இவ்­வா­றான தீவி­ர­வாத செயற்­பா­டு­க­ளுக்கு துணை போக­வில்லை என்­ப­தையும் கூறிக் கொள்­கிறோம். அத்­தோடு எதிர்­கா­லத்­திலும் இவ்­வாறே முஸ்­லிம்கள் இருப்போம் என்பதை உறுதியாகக் கூறிக் கொள்கிறோம்.
நாட்டின் ஊடகங்கள் செய்திகளை வழங்குவதில் பொறுப்புணர்ச்சியுடன் நடந்து கொள்வதுடன் ஊடக தர்மத்தை பேண வேண்டும் என இம்மாநாடு வேண்டிக் கொள்கிறது.
இன ஐக்கியத்தையும், சமூக நல்லிணக்கத்தையும் தொடர்ந்தும் இந்நாட்டில் பேணுவதற்கு அரசாங்கம், பாராளுமன்ற உறுப்பினர்கள், மதத்தலைவர்கள், சிவில் சமூகம், இன, மத, மொழி வேறுபாடின்றி தொடர்ந்தும் அயராது உழைக்க வேண்டும் என வேண்டிக் கொள்கிறோம்.
-Vidivelli

No comments

Powered by Blogger.