June 22, 2019

முஸ்லிம்களுக்கு கிடைப்பதை ஆயுதமுனையில் பறித்தவர்கள், உண்ணாவிரதம் இருப்பது வேடிக்கையானது

- Dr.Yoosuff Asfaque -

1. அம்பாறை மாவட்டத்தில் 19 பிரதேச செயலகமும் கல்முனை உபபிரதேச செயலகமுமாக மொத்தம் 20 செயலகம் உள்ளது. அதாவது சராசரியாக 100/20 =5%ற்கு ஒரு செயலகம் என்றால் 17% தமிழ் மக்களுக்கு 3 அல்லது 4 செயலகமே இருக்க வேண்டும். ஆனால் அவர்களுக்கு 4 முழு செயலகமும் ஒரு உபசெயலகம் மேலதிகமாகவும் இருக்கும் போது அதனையும் தரமுயர்த்தி 5 ஆக ஆக்கக்கோரி அபத்தமாக உண்ணாவிரதமிருப்பது அநியாயம் இல்லையா?? 

மேலும் 45% முஸ்லிம்களுக்கு 9 செயலகம் இருக்க வேண்டும். ஆனால் 8 செயலகம்தான் உள்ளது. சனத்தொகை விகிதாசாரப்படி முஸ்லிம்களுக்கு கிடைக்க வேண்டியதை ஆயுதமுனையில் தட்டிப்பறித்தது மட்டுமல்லாமல் அதை தரமுயர்த்த போராடி அநியாயத்திற்கு குடைபிடிக்கும் அக்கிரமத்தை எங்காவது காண முடியுமா? இந்த அநியாயத்திற்கு அவர்கள் சூட்டியுள்ள போலி குற்றச்சாட்டு : சகல உபசெயலகமும் தரமுயர்த்தப்பட்டுள்ளதாம் கல்முனையைத்தவிர. சகல உபபிரதேச செயலகமும் சட்டபூர்வமாக உருவாக்கப்பட்டது, கல்முனை உபபிரதேச செயலகத்தை தவிர எனும் உண்மையை கூறுவதில்லை அவர்கள்.

சட்டபூர்வமான திருமணத்தில் பிறந்த குழந்தைக்கு தாய்தகப்பனை உள்ளடக்கிய சட்டபூர்வமான பெயரை வைக்கலாம். தாய்தகப்பன் தெரியாம சட்டவிரோதமாக பிறந்த குழந்தை அதே பெயரை எதிர்பார்க்க முடியுமா? ( இதை ஒரு உவமையாக உண்மை நிலையை தெளிவு படுத்த மட்டுமே கூறுகிறேன். வேறு எந்த அர்த்தத்திலும் கூறவில்லை).

2. நாவிதன்வெளியிலும் காரைதீவிலும் முறையே 36% உம் 40% உம் உள்ள முஸ்லிம்களுக்கு தனியான பிரதேச செயலகம் வழங்க முடியாது, ஆனால் கல்முனையில் 30% ஆக உள்ள தமிழ் மக்களுக்கு தனியான செயலகம் வழங்க வேண்டும் என்று போராடுவது அநியாயம் இல்லையா??

3. பிரதேச செயலகம் வழங்குவதற்கு சனத்தொகை நிர்ணயம் இல்லை. யாழ்ப்பாணத்தில் உள்ள Delft எனும் பிரதேச செயலகத்தின் சனத்தொகை அண்ணளவாக 4000, அம்பாறை மாவட்ட லகுகலயின் சனத்தொகை 8500. அவ்வாறிருக்கையில் ஏன் அண்ணளவாக தலா 9000 முஸ்லிம் சனத்தொகையைக் கொண்ட நாவிதன்வெளிக்கும் காரைதீவுக்கும் தனியான முஸ்லிம் சபை வழங்க முடியாது??

4. தற்போதுள்ள கல்முனை உபபிரதேச செயலகம் இலங்கையின் வரலாற்றில் எங்கும் இல்லாத இரு உண்மைகளைக் கொண்டது.

a) ஆயுத முனையில் புலிகளால் சட்ட விரோதமாக பிரிக்கப்பட்டு பின்னர் திருட்டு வழியில் உயிர்ப்பிக்கப்பட்ட உண்மை

b) தேங்காய் பூவும் பிட்டும் போல பிரிக்க முடியாத அளவிற்கு இரண்டறக்கலந்த தமிழ் முஸ்லிம் மக்கள் பரம்பலை கொண்ட கல்முனையில் இன அடிப்படையில் அமைந்த ஒரே ஒரு உபபிரதேச செயலகம் இது. இச்செயலகத்தை தரமுயர்த்தினால் எல்லை பிரிக்கப்பட வேண்டும். ஆனால் இங்கே எல்லைப் பிரிவு சாத்தியமே இல்லை.

5. கல்முனை பல நூற்றாண்டு வரலாறு கொண்ட முஸ்லிம் சமூகத்தின் பாரம்பரிய தலைநகரம். இதனை உடைத்து நகரத்தைக் கைப்பற்றுவது இவர்களின் மறைமுக சதித்திட்டம். கல்முனையில் சிறுபான்மையாக வாழும் தமிழ் மக்களுக்கு முஸ்லிம்களின் தலைநகரை துண்டாடுவது நியாயமானால் யாழ்ப்பாணம், வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு நகரங்களிலும் முஸ்லிம்கள் கணிசமான அளவு வாழ்கிறார்கள். எனவே அவற்றையும் உடைத்து முஸ்லிம்களுக்கு தனியான சபை வழங்க முன்வராததேன். ஏன் இந்த இனரீதியான பாராபட்சம்??

6. இதற்கிடையில் இனரீதியாக பிரதேச செயலகம் பிரிப்பது சட்ட விரோதம். இது தொட‌ர்பான வழ‌க்கு மேல்நீதிமன்றில் நடைபெற்றுக் கொண்டு இருக்கையில் இதனை தரமுயர்த்த கோருவது அப்பட்டமான சட்ட விரோதம்.

7. அநியாயங்களையும், கலவரம் போன்ற சூழலையும் தவிர்த்து அமைதியை நிலைநாட்டவே அவசரகாலச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் அவ்வமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் மேல்நீதிமன்றில் இருக்கும் வழக்கை மீறி உண்ணாவிரதம் மூலம் வழக்கை உதாசீனம் செய்து செயலகத்தை தரமுயர்த்தக் கோருவது எந்த நாட்டிலாவது நடைபெறுமா. கல்முனை உபபிரதேச செயலகத்தில் மட்டும்தான் இவ்வாறான சட்டவிரோத உண்ணாவிரதம் நடைபெறும். அதாவது வழக்கின் தீர்ப்பு வருமுன் அதனை மீறவலியுறுத்தும் உண்ணாவிரதமிது என்றால் அது மிகையாகாது.

4 கருத்துரைகள்:

Sattavirothamaha pirantha Mukkuvanda peikkuttikku sila inavatha,pasisavatha mottaihalum thunai pohinrathu.
Eanda Singala mottihala Pirabharan kettathu ponru eelatthai piritthu mukkuvanukku tharai varkalame.

என் அறிவிற்கு எட்டியவகையில் சாய்ந்தமருது பிரிந்து சென்றமை துரதிருஷ்டமானது. அது நியாமில்லாதபோது இன்னொரு நியாயமில்லாத விடயத்தைச் செய்ய வேண்டியுள்ளது.

hOW Many DS office in Batticaloa

why thoppur division forgotten???????????

Post a Comment