Header Ads



எடுத்ததற்கெல்லாம் உலமா சபையை, விமர்சனம் செய்வதை தவிர்ப்போம்...!

எல்லா சமூகத்தினராலும் அவரவர்களின் சமயத் தலைவர்களுக்கென தனி மதிப்பும் மரியாதையும் வழங்கப்படும்போது முஸ்லிம்களின் மார்க்க தலைமையான உலமாசபைக்கு மாத்திரம் முஸ்லிம்களினாலேயே பலத்த விமர்சனமும், தேவையற்ற குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்படுவது கவலைக்குரியதாகும். உண்மையில் ஏனையவர்களைவிடவும் சமூகம் தொடர்பாக அதிக பொறுப்புணர்வோடு செயற்படுபவர்கள் இந்த உலமாசபை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இதை எங்களைவிடவும் மாற்று மதத்தவர்கள் நன்கறிந்து வைத்துள்ளனர்.

முஸ்லிம்கள் பாதுகாப்பு ரீதியாக மிகவும் அச்சுருத்தலுக்குள்ளாகி இருக்கும் இந்த இக்கட்டான காலத்தில் சமூகப் பாதுகாப்பு தொடர்பாக மிகவும் கவலையோடும், பிரார்த்தனையோடும் 24 மணிநேரமும் தங்களாலான சகல முயற்சிகளையும் செய்து கொண்டே இருக்கின்றனர். அலுத்கம தொடக்கம் மினுவாங்கொடை வரையில் இடம்பெற்ற வன்முறைகளின்மூலம் மீண்டுமொரு முறை இனக்கலவரத்தை ஏற்படுத்தி முஸ்லிம்களை அடியோடொழிக்க எத்தனிக்கும் சில கடும்போக்கு வாதிகளின் பல சதித்திட்டங்கள் முறியடிக்கப்பட்டதில் இவர்களின் பங்களிப்பு அளப்பெரியது.

தற்போது உலகம் பூராகவும் பேசப்படும் வரலாற்று முக்கியத்துவமிக்க சம்பவமாக வர்ணிக்கப்படும் முஸ்லிம் அரசியல்வாதிகளின் ஒற்றுமைக்கு பிரதான வழிகாட்டியும் இவர்கள்தான் என்பது எத்தனை பேருக்கு தெரியும்? ஞானசார தேரர் காலக்கெடு விதித்த அன்றைய தினமே கட்சி கொள்கையாலும் கருத்து முரண்பாட்டாலும் பிரிந்திருந்த அனைத்து முஸ்லிம் அரசியல்வாதிகளையும் அவசரஅவசரமாக அழைத்து சமூகப் பாதுகாப்புக்காக அனைவரும் ஒன்றிணைய வேண்டியதன் அவசியத்தை மிகவும் உருக்கமாக வேண்டிக் கொள்ளப்பட்டதன் விளைவே இன்றைய ஒற்றுமையாகும். இருந்தும் நடைமுறைப் பிரச்சினை கருதி இதுவரை இது தொடர்பாக பகிரங்கப்படுத்தவில்லை. அத்தோடு இவர்களின் செயற்பாடுகள் இறை திருப்தியையும், சமூக நலனையும் மாத்திரம் நோக்காக கொண்டிருப்பதனால் விளம்பரங்களோ ஆரவாரமோ கொண்டதாக இருப்பதில்லை. மீடியாக்களில் மாத்திரம் தகவல்களை எதிர்பார்க்கும் பலருக்கு இவர்களின் செயற்பாடுகள் சென்றடைவதுமில்லை.

இதன் காரணமாகவே இவர்கள் மீதான விமர்சனமும், அவமதிப்பும் (கற்றவர்களால்கூட) தொடர்ந்த வண்ணமுள்ளன.

எனவே இந்நிலை மாற வேண்டும். அரயல்வாதிகளை விமர்சனம் செய்வதுபோல் எடுத்ததற்கெல்லாம் உலமா சபையையும் விமர்சனம் செய்வதை தவிர்க்க வேண்டும். அவர்களின் பணியை அவர்களால் முடிந்தவரை சிறப்பாக செய்கின்றனர். அல்லாஹ்விடத்தில் அவர்களுக்கென உயர்ந்த அந்தஷ்த்துண்டு என்பதையும் மறந்துவிடக் கூடாது.

நளீம் றம்சாத்.

7 comments:

  1. ஓரளவு முன்னேற்றம் உண்டு விமர்சனம் செய்தமையால் தான் அந்த முன்னேற்றம் ஏற்பட்டிருக்கும். அமைச்சர் மங்கள தனது மதகுருமார்கள் செய்யும் தவறுகளைச் விமர்சனம் செய்யும் போது சரி கண்ட எமக்கு சுய விமர்சனம் செய்யும் போது ஏன் கசக்கிறது. விமர்சனம் தான் ஒரு சமூகத்தைச் சீரமைக்க உதவும். அது ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். அதனையே கற்றவர்கள் செய்கிறார்கள்.

    ReplyDelete
  2. RIGHT TO REPLY, Insha Allah.
    Brother Naleem Ramzath (நளீம் றம்சாத்.),
    "The Muslim Voice" respects your kind request, but "The Muslim Voice" feels that it is the duty of "The Muslim Voice" to place facts before the Muslim readers/Muslim Umma in Sri Lanka concerning the matters affecting the Muslim community at large. Here is a reminder of some facts for your kind consideration, Insha Allah.
    The ACJU – Rizvi Mufthi has still NOT answered the question raised by “The Muslim Voice” regarding their relationship with the Mahinda Rajapaksa regime during 2005 -1015. The ACJU received a large block of land in Colombo 12 from former President Mahinda Rajapaksa when they were politically flirting with the UPFA/SLFP government and no one knows what happened to this block of state land that the ACJU got from Mahinda.
    The ACJU and Rizvi Mufthi should answer the questions raised by “The Muslim Voice” before he replys BBS. “The Muslim Voice” has been asking this/these questions many times before this too.

    This is "NOT DECRYING". The ACJU-The Halal Accreditation Council (Guarantee) Limited has "DEFAULTED" nearly 2 million Muslims in Sri Lanka, especially with regards to the pig oil presence certification of the imported and distributed/marketed milk powder in Sri Lanka. The ACJU-The Halal Accreditation Council (Guarantee) Limited has commited the "BIGGEST CRIME" under "ISLAMIC FAITH/BELIEF" of committing the Muslims using these Milk poder to "HARAM" a religious crime that cannot be pardoned, except with the mercy of God AllMighty Allah. The ACJU-The Halal Accreditation Council (Guarantee) Limited has commited the "BIGGEST CRIME" against the Sri Lankan Muslims just for "MONEY" and "FINANCIAL" gains. DEFINITELY A HIGH POWDERED OFFICIAL PROBE ON THE ACJU-The Halal Accreditation Council (Guarantee) Limited has to begin with immediate effect. A strong appeal has to be made by the Muslim community to President Maithripala Sirisena to conduct a probe on the ACJU, Insha Allah. It is time up that the Sri Lankan Muslims should stand up and face reality about this group of "DECEPTIVE" and "HOODWINKING" Ulema in Sri Lanka.
    The RTI (Right To Information Act) has to be used to expose the "ILL WEALTH" these guys have amazed by this type of false and currupt deeds.
    Very soon, the privileges of the RIGHT TO INFORMATION BILL/ACT may induce Anti-Muslim Buddhist clergy and Extreme Nationalist elements, to use the law to probe into the earnings of the ACJU and make them become “TRANSPARENT” in their dealings.
    Noor Nizam - Convener "The Muslim Voice".

    ReplyDelete
  3. முஸ்லிம் பெயர்தாங்கிய தூரநோக்கற்ற விவேகம் குறைந்த தம்மை மற்றவர்களிலிருந்து வேறுபட்டவர்களாகவும், பேரறிவாளர்களாகவும் போலியாகக் கருதிக்கொண்டிருக்கும் பலர் எடுத்ததற்கெல்லாம் பாரதூரமான விமர்சனங்களை கடும் சொற்களாலும், காத்திரமற்ற விதத்திலும் வெளியிட்டு தமது பலவீனத்தைப் பகிரங்கப்படுத்துகின்றார்கள். அவர்கள் திருந்திக்கொள்ள வேண்டும் ஏனென்றால் பிற சமூகத்தினர் இப்பிரயோகங்களை சமூகம் சார்ந்த கலாசாரமாகக் கருதி மதிப்பிறக்கம் செய்கின்றார்கள். பண்பாடு, ஒழுக்கம், தூய சிந்தனை என்பவற்றை விமர்சனம் செய்ய முன்னர் கருத்தில் எடுக்கவேண்டும்.

    ReplyDelete
  4. நல்லது இஸ்லாத்தின் பெயரால் புதிதாக நுளைகின்ற எல்லா இயக்கங்களையும், ஜம்மியத்துல் உலமா சபை கட்டுப்படுத்த வேண்டும் என்பதுதான் அதிகமான முஸ்லிம்களின் வேண்டுகோளாகும்.புதிது புதிதாக இயக்கங்களை இறக்குமதி செய்து தேவையில்லாத சட்டங்களை பிரச்சாரம் செய்து வருமானம் சம்பாதிக்கும் தொழிலாக இதை செய்கின்றார்கள். இவ்வாறான விஷயங்கள் மார்க்கம் சம்மந்தமாக இருந்தாலும் முஸ்லிம்கள் மத்தியில் பிளவுகளையே ஏற்படுத்தி இருக்கின்றது. எனவே இவற்றையெல்லாம் தடுத்து நிறுத்தி உலமா சபை சொல்கின்ற இஸ்லாமிய கொள்கைகளை மாத்திரம் கடைப்பிடித்து வாழ்ந்தால் போதுமானது. இதைத்தான் ஏனைய மதத்தவர்களும் விரும்புகிறார்கள்.அன்நிய ஆட்சியின் கீழ் வாழுகின்ற சிறுபான்மை முஸ்லிம்களுக்கு இதுதான் ஆரோக்கியமான முறையாகும்.

    ReplyDelete
  5. Okay Sir, onda ketkalama. Arasukku manitha urimai meethana pirachinai vantha pothu Arasukku atharavaha Janeeva senra intha mullakkal, ottu mottha muslim society itku Singala payangaravathihalalum Singala Arasangatthalum perum pirachinai vantha pothu ean ivarhal Sarvathesam senru emathu pirachinai kalai sollathu kundu sattikkul kuthirai oattikkondirukkirarhal? Ithu Patti emakku theluvu thevai.

    ReplyDelete
  6. Okay Sir, onda ketkalama. Arasukku manitha urimai meethana pirachinai vantha pothu Arasukku atharavaha Janeeva senra intha mullakkal, ottu mottha muslim society itku Singala payangaravathihalalum Singala Arasangatthalum perum pirachinai vantha pothu ean ivarhal Sarvathesam senru emathu pirachinai kalai sollathu kundu sattikkul kuthirai oattikkondirukkirarhal? Ithu Patti emakku theluvu thevai.

    ReplyDelete
  7. Don't consider about the useless criticism. But take attention only on meaningful criticism

    ReplyDelete

Powered by Blogger.