Header Ads



எந்த பகுதியிலும் இனவாத வன்முறை, ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள் - ரணில் வேண்டுகோள்

நாட்டில் எந்தவொரு பிரதேசத்திலும் இனவாத வன்முறையொன்று இடம்பெறாமல் பார்த்துக் கொள்ளுமாறு மாவட்ட செயலாளர்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன் எனவும், எங்காவது ஒரு சம்பவம் இடம்பெற்றாலும் நாட்டின் சுற்றுலாத்துறைக்கு அது பாரிய பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

பொசோன் பண்டிகையை முன்னெடுப்பதற்காக, அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படவுள்ள நடவடிக்கைகள் குறித்து விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று (07) அலரிமாளிகையில் பிரதமர் தலைமையில் நடைபெற்றுள்ளது. இதில், கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே பிரதமர் இதனைக் கூறியுள்ளார்.

நாட்டை சாதாரண நிலைக்குக் கொண்டு வரவேண்டுமாயின் அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். அத்துடன், நிருவாக நடவடிக்கைகளும் சீரடைய வேண்டும். இந்த இரண்டும் நடைபெறாத நிலையில் நாடு சாதாரண நிலைக்கு வந்துள்ளது என அறிவிப்புச் செய்ய முடியாது.

கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாத குண்டு வெடிப்பின் பின்னர் நாட்டின் சுற்றுலாத்துறை பாரிய வீழ்ச்சியைக் கண்டுள்ளது. வெளிநாடுகள் எமது நாட்டுக்கு வருவதற்கான தடையைப் பிறப்பித்துள்ளன. இதனால், நாட்டிலுள்ள சுற்றுலாப் பயணிகளும் வெளியேறிச் சென்றுள்ளனர். சில ஹோட்டல்களில் அறைகள் வெறுமையாக காணப்படுகின்றன.

இந்த நிலையை மாற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது. தற்பொழுது பல நாடுகள் தடைகளை நீக்கியுள்ளன. ஐரோப்பிய நாடுகள் பல விரைவில் தடைகளை நீக்கவுள்ளன. உண்மையில் நாட்டில் ஐ.எஸ்.ஐ.எஸ். பிரச்சினை முடிவடைந்துள்ளது என்பதை சர்வதேசம் ஏற்றுக் கொண்டுள்ளது.

இருப்பினும், சர்வதேசத்துக்கு இன்னுமொரு பிரச்சினையுள்ளது. அதுதான் இனவாத  மோதல்கள்  நாட்டில் ஏற்படும் என்ற சந்தேகம். இதனால், மாவட்ட செயலர்களிடம் விசேட வேண்டுகோள் ஒன்றை விடுகின்றேன். தமது மாவட்ட செயலக எல்லைக்குள் இன வன்முறைகள் நடைபெற இடமளிக்க வேண்டாம். ஒரு சம்பவம் இடம்பெற்றாலும், மீண்டும் சுற்றுலாப் பயணிகளின் வருகை வீழ்ச்சியடைய முடியும் எனவும் பிரதமர் கேட்டுக் கொண்டார்

7 comments:

  1. When you were in-charge for law and order ministry, you were unable to punish sinister of violence at Kandy, Digana, and Ampara after you failed to protect Muslim from the mobs while curfew was imposed. Now you are trying to control violence using Divisional secretariat. Please review your statement in a practical existence.

    ReplyDelete
  2. When you were in-charge for law and order ministry, you were unable to punish sinister of violence at Kandy, Digana, and Ampara after you failed to protect Muslim from the mobs while curfew was imposed. Now you are trying to control violence using Divisional secretariat. Please review your statement in a practical existence.

    ReplyDelete
  3. பிரதமரின் இந்த வேண்டுகோள் வரவேற்கத்தக்கது, ஆனால் அது உள்காயம் உள்ள புண்ணுக்கு பிளாஸ்டர் ஒட்டுவதுபோன்ற ஒரு நடவடிக்கை என்பது தோன்றுறது. இனவாதம் பிடித்த வெறியர்களும் துவேசம் பிடித்த குண்டர்களும் நாடளாவ இருக்கின்றனர், ஆனால் பரவாயில்லை, பொருளாதாரத்தை மேன்படுத்துவதை மாத்திரம் இலக்காகக் கொண்டு இவர்களை முன்னே வராமல் பார்த்துக்கொள்ளுங்கள் எனத தெரிவிப்பது போல் தெரிகிறது.

    ReplyDelete
  4. Not only tourism pm.
    You have to go home with your party.last attack was done by govt champika sponsored.
    1000%sure. After the attacked govt blame mR party.
    All of you same

    ReplyDelete
  5. Ranil has wake up from his Coma.........

    ReplyDelete
  6. கலவரம் ஏற்படுத்தும் நபர்களுக்கு பொது மன்னிப்பும்,பிணையும் வழங்கி வெளியே விட்டு விட்டு.படித்த அரசு ஊழியர்களை மீது குற்றம் சுமத்தும் ஒரே நாடு இலங்கைதான்

    ReplyDelete
  7. You Mosalaya Get out of Parliament everything will be fine.
    Also there are Many Mosalaya's In Our Parliament...

    ReplyDelete

Powered by Blogger.