Header Ads



தமிழ் - முஸ்லிம் நல்லுறவின், அரசியல் புவியியல்

- வ.ஐ.ச.ஜெயபாலன் -

இனங்களுக்கிடையிலான நல்லுறவு இராஜதந்திரத்தில் சிக்கலான பகுதி பெரும்பாலும் புவியியல் சார்ந்ததாகும். இதற்க்கு இலங்கையும் புறநடையில்லை. இலங்கையிலும் தமிழர் முஸ்லிம்கள் நல்லுறவு சிக்கலில் அரசியல் புவியியல் பிரச்சினைகளே பெரும்தடையாக உள்ளது. 

இலங்கை தமிழர் முஸ்லிம்கள் அரசியல் புவியியலை சிக்கலாக்கிய பிரச்சினைகள் 


1,கிழக்கில் தமிழ் முஸ்லிம் உறவு நெருக்கடிகள் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களால் மேலும் தீவிரபட்டுள்ளது. 


2. முஸ்லிம்கள் நிலதொடற்ச்சியற்ற ஊர் பிரதேசங்களில் வாழ்வது. 

3.1முஸ்லிம்களைப் பொறுத்து அம்பாறை மாவட்டத்தில் மட்டும் அதிக நிலத் தொடர்பும் செறிவும் அமைந்துள்ளமை. ஆனால் அம்பாறையில்  தமிழர் நிலத் தொடர்பும் செறிவும் குறைந்துள்ளமை. இத்தகைய ஒருசீரற்ற தன்மைகளால் பிரதேச செயலகம் பிரதேச சபை அலகுகள் பிரிப்பது தொடர்பான சிக்கல்கள். 
3.2 கல்முனை தெற்க்கு தமிழ் பிரதேச சபை சிக்கல் இன்னும் முழுமையாகத் தீராத பகுதியாக உள்ளது. எனினும் மூதூர் பிரதேச சபை பகிர்வே எதிர்கால புவியியல் மோதல் புள்ளியாகவும் உள்ளது. 
.
அரசியல் சார்ந்து தமிழரும் முஸ்லிம்களும் கிழக்கு மாகாணத்தைப் பொறுத்து மரபு சார்ந்த  மாகாண மட்ட மாவட்ட மட்ட சிந்தனையில் இருந்து விடுபட்டு த்ம் தம்து ஊர்கள் சார்ந்த இன அலகுகள் மட்டத்தில் சிந்திக்க நிர்பந்திக்கப்பட்டுள்ளனர். இப்புதிய சூழல் உருவானதற்க்கு வடகிழக்கு இணைப்பு அடிப்படையிலான சமரச தீர்வு தோற்றுப்போனதே காரணம். அடிப்படையில் வடகிழக்கு இணைக்கபட்டதுபோலவே பிரிவுக்கும் இந்துசமுத்திர மட்ட அரசியலே மூலகாரணமாக உள்ளது.

இலங்கையின் இன மதப்புவியியல் தவிர்க்க முடியாத வகையில் சீன செல்வாக்கு மண்டலமாகவும் இந்தியா மேற்குலக அணிகளதும் செல்வாக்கு மண்டலமாகவும் பிழவுபட்டு வருகிறது. கண்டிய சிங்களவர் மத்தியிலும் கரையோர சிங்களவர் மத்தியிலும் தமிழர் மலையக தமிழர் மத்தியிலும் இந்த செல்வாக்கு மண்டலம்பற்றிய புரிதலும் நிலைபாடும் ஓரளவுக்கு தெளிவாகி வருகிறது. முஸ்லிம்கள் நிலைபாடு பற்றி அனுமானிக்க முடியவில்லை. ஹிஸ்பில்லாவின் அண்மை பேச்சு மூன்றாவது செல்வாக்கு மண்டலம் பற்றி குறிப்பிடுகிறது. ஆனால் நடைமுறையில் மூன்றாவது செல்வாக்கு மண்டல அரசியலுக்கான வாய்ப்புகள் இல்லை அல்லது இன்னும் உருவாகவில்லை என்றே தோன்றுகிறது. 


2.

அன்றில் இருந்து இன்றுவரை தமிழ் முஸ்லிம் உறவை நிர்ணயிப்பதில் தமிழரைப் பொறுத்து அம்பாறை மாவட்ட தமிழர் நலன்கள் முக்கிய இருந்து வருகிறது என உறுதியாகச் சொல்ல முடியும். அதுபோல முஸ்லிம்களைப்பொறுத்து மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம்களின் நலன்கள் தமிழ் முஸ்லிம் நல்லுறவை தீர்மாளிக்கும் முக்கிய அடிப்படையாக உள்ளது. இதனை தமிழரும் முஸ்லிம்களும் உணர்தல் வேண்டும்.
.
வன்னியில் உயிரைப் பணயம் வைத்து புலிகளுடன் முஸ்லிம்கள் தொடர்பாக நான் தர்கம் செய்த எல்லா தருணங்களிலும் அவர்கள் தந்த வாக்குறுதிகளின் சுருக்கம் “அம்பாறையில் முஸ்லிம்கள் தமிழர்களைத் தாக்கினால் மட்டும் நாம் வடகிழக்கில் முஸ்லிம்களை தாக்குவோம். ” என்பதாகவே அமைந்தது. இது அவர்கள் நிலைபாடு பற்றிய கூற்று. அதனை மாற்றமின்றி அப்படியே முஸ்லிம் தலைவர்களுக்கு சொல்லவேண்டியது என் பொறுப்பாய் இருந்தது. இதுதான் போராளிகளால் தங்கள் நிலைபாடு என்று சொல்லப்பட்டது என்பதை நான் தோழர் தலைவர் அஸ்ரப்புக்கும் ஏனைய சில முஸ்லிம் தலைவர்களுக்கும் அறிவித்திருக்கிறேன். அன்றில் இருந்து இன்றுவரை ஈழ மலையக தமிழர்களது முஸ்லிம்கள் பற்றிய நிலைபாட்டை நட்ப்பைத் தீர்மானிப்பதில் அம்பாறை மாவட்ட தமிழர் நலன்கள் அடிப்படையாக உள்ளது என உறுதியாகச் சொல்ல முடியும்.
.
எதிர்காலத்தில் தமிழர்களும் முஸ்லிம்களும் சிந்தித்து பொறுப்புடன் கையாள வேண்டிய இனமுறுகல் பகுதிகள் இரண்டு. அவை 
1. கல்முனை 
2. மூதூர் பிரதேச செயலகப் பிரிவுகள் ஆகும். எனவே தமிழ் முஸ்லிம் நல்லுறவை விரும்புகிறவர்கள் இந்த இரண்டு சிக்கல்களையும் சுமூகமாக விடுவிப்பது தொடர்பாக ஆய்வுக் கருத்துக்களை உருவாக்க முன்வரவேண்டும். 
.
3
வடகிழக்கு இணைப்பு தமிழரின் இணைந்த தேசிய இன அடையாளப் பிரச்சினையாக உள்ளது. இலங்கை அடகிலும் அமைந்த சிதறிய புவியியல் இருப்பில் கிழல்லில் மட்டுமே ஒப்பீட்டு ரீதியான இணைவும் செறிவும் அமைந்துள்ள சூழலில் கிழக்கு முஸ்லிம் அடையால அரசியலிலும் முக்கியமான மாகாணமாகும். அதனால் வடகிழக்கு இணைப்பை கிழக்கு முஸ்லிம்கள் எதிர்க்கிறார்கள். எனினும் விருபத்துக்கு மாறாக முஸ்லிம்களை இணைக்க தமிழருக்கு நியாயமில்லை. அதுபோலவே போராடி வடகிழக்காய் இணைந்த தமிழ் தேசிய இனத்தை பிரிக்கவும் முஸ்லிம்களுக்கும் நியாயமில்லை. இந்த சிக்கல் தீரும் வகையில் மட்டுமே தீர்வுகள் உருவாக்கப்பட வேண்டும். 
 .
1987ல் இருந்தே வடகிழக்கு இணைப்பு தமிழர் பிரச்சினைக்கு தீர்வாக இந்தியாவும் மேற்க்கு நாடுகளும் ஏற்றுக்கொண்ட ஏற்பாடாகவே உள்ளது. eனினும் கடந்த காலங்களில் சம்பந்தப் பட்ட நாடுகள் முஸ்லிம்களின் அபிலாசைகள் கருத்தில் கொள்ள வில்லை என்பது உணரப்படவேண்டும். இணைந்த வடகிழக்கு தமிழர் பிரச்சினைக்கான தீர்வின் அடிப்படை என்கிற கருத்து இந்தியாவிலும் மேற்குலகிலும் வலுப்பெற்றது. அத்தகைய ஒரு தீர்வுக்கு இலங்கையின் சிங்கள ஆட்ச்சியாலர்கள் தயாராக இருக்கவில்லை. அதனால் இலங்கை அரசை நிர்பந்தித்து வடகிழக்கு இணைந்த  ஒரு தீர்வை உருவாக்கவே 1987ல் இந்திய படைகள் இலங்கைக்கு வந்தது
.
இலங்கயில் இந்திய அமைதிப் படையினர் வலுவான இணைந்த வடகிழக்கை கட்டி எழுப்பவே விரும்பினார்கள்.  திருகோணமலையில் சிங்கள குடியேற்றங்கள் இந்திய நடவடிக்கையால் அகற்றபடுதல் ஆரம்பித்தது. 
.
வடகிழக்கு இணைப்பை நடைமுறைப் படுத்தியபோதும் புலிகள் இந்தியாவை ஏற்கவில்லை  புலிகள் இந்தியாவை எதிர்த்தமையே வடகிழக்கு இணைப்புக்கு முதல் ஆப்பாக அமைந்தது. எனினும் 2006ல் ஜெனீவா பேச்சுவ்வார்த்தையை முறித்து மேற்க்கு நாடுகளையும் புலிகள் பகைக்கும்வரை மேற்க்கின் அழுத்தத்தை மீறி இலங்கை அரசினால் வடகிழக்கு இணைப்பை துண்டிக்க முடியவில்லை. இதுதான் சர்வதேச நிலைபாடுகளின் வரலாறு. 
.
புலிகள் 2006ல் ஜெனீவா பேச்சுவார்த்தைக்கு ஒத்துளைக்காமல்  மேற்குடனும் பகைத்தனர். அதன் பின்னர்தான் வடகிழக்கு இணைப்பு துண்டிக்கபட்டது. இன்று நிலமை வேறு. இந்தியாவும் மேற்க்கு நாடுகளும் தமிழர் கூட்டமைப்பும் யு.என்.பியும் சேர்ந்து வடகிழக்கில் சீனா பாகிஸ்தான் எந்த வகையிலும் தலையிடாதவாறு அழுத்தம் கொடுத்து வருகின்றன. இது நீண்டகால தன்மைகொண்ட ஏற்பாடாகும்.

 
.
ஒருவேளை தீர்ட்வுத் திட்டத்தில் இந்தியாவும் மேற்குலகமும் விலகி இருந்து 13வது திருத்த அடிப்படையை நிர்பந்திக்காத சூழல்கூட உருவாகலாம். அத்தகைய சூழலில் புதிய தீர்வுப் பொதி உருவாகும். புதிய தீர்வுப்பொதி வடக்குடன் இணையாத வடகிழக்கு முஸ்லிம் வட்டார அலகுகளும் வடக்குடன் இணைந்த வடகிழக்கு தமிழ் வட்டார அலகுகளும் என அமையும் வாய்ப்புகளே உள்ளது. 
.
இத்தகைய சூழல் உருவானால் முஸ்லிம் அலகுகள் நிபந்தனைகளின் அடிப்படையில் தமிழருடனோ சிங்களவருடனோ இணைய வாய்ப்பு உருவாகும். அல்லது சிங்கள அரசுடன் போராடி இணக்கத்தை பெற்று நிலத்தொடர்பற்ற முஸ்லிம் மாகாணமாக மேம்படவும் வாய்புள்ளது.
.
முஸ்லிம் அலகுகளும் தமிழ் அலகுகளும் மாவட்ட அதிகாரப் பகிர்வோடு இணையும் தீர்வுப்பொதியே இரு தரப்புக்கும் கிடைக்கக்கூடிய சிறந்த தீர்வுப் பொதியாக அமையும் என்பது எனது நம்பிக்கை. எனினும் முஸ்லிம்கள் அலகுகள் சுதந்திரமாக எடுக்கும் எந்த தீர்வையும் நான் ஆதரிப்பேன்.

No comments

Powered by Blogger.