Header Ads



அசத்தியத்தை தோற்க்கடித்த, சத்தியத்தின் கதை


ஹிரு TV :- “பதுளை நகரில் வாளுடன் வியாபாரி ஒருவர் கைது! அவர் தேசிய தவ்ஹீத் ஜமாஅத்தின் (National Tawheed Jamath-NTJ)உறுப்பினர்”.

(பயங்கர இசைப்பின்னணியில் கைது செய்யப்பட்டவரின் ஆடம்பர வீடு காட்டப்படுகிறது. சந்தேக நபரின் முகத்தை மறைத்து கலந்துரையாடுதல் நடக்கிறது” அந்த உருவத்திற்குரியவர் “ ஶ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத்தை (SLTJ)சேர்ந்த பர்சான் இங்கு ஜும்மா நடத்தினார்” எனக்கூறுகிறது.

தறையில் வாளை இழுத்துக்கொண்டு செல்லும் காட்சி மற்றும் அந்த உருவத்தை கைது செய்து அழைத்துச்செல்லும் காட்சி TVயில் காட்டப்படுகிறது).

நாமெல்லாம் “ISIS காரன் பிடிபட்டுட்டான் தொலைஞ்சு போகட்டும் நாய் என்று பெருமூச்சு விட்டோம்.”

பதுளை பொலிசார் குறிப்பிட்ட வியாபாரியுடன் சேர்த்து அந்த அமைப்பின் செயலாளர் உட்பட உறுப்பினர் ஒருவரையும் கைது செய்து பதுளை நீதிமன்றில் ஆஜர்படுத்தி 14 நாட்கள் விளக்க மறியல் வைத்தனர்.

அவர்கள் NTJ பயங்கர வாதிகள் என்பதால் பதுளை நீதவான் நீதிமன்ற எந்தச்சட்டத்தரணிகளும் அவர்கள் சார்பாக மன்றில் அவர்களுக்காக வாதாட முன்வரவில்லை.

“ஒருவர் குற்றவாளியென நிரூபிக்கும் வரை சுற்றவாளியென என கருதப்பட வேண்டும்” எனும் சட்டத்தின் அடிப்படையே தெரியாத ஊடகங்கள் சொல்வதை அப்படியே ஏற்றுக்கொள்ளும் மூளையைப்பயன்படுத்தாமல் முன்னானை பயன்படுத்தும் தொழில் தர்மம் தெரியாத ஜென்மங்கள் இந்தச்சட்டத்தரணிகள்.

திகனையைப்போன்று அம்மக்கள் எம்மை அழைத்தனர்.”பொதுபல சேனாவின் கோட்டை “ எந்த லோயரும் வாரானுகளில்லை” பயமாக இருக்கிறது” வாருங்கள் வழக்காடுங்கள். தொலைபேசி அழைப்புக்கு மேல் அழைப்பு.

குறிப்பிட்ட இடத்திற்கு சென்று வழக்குப்பேசுகிறோமோ இல்லையோ அது வேற விடயம்.அப்பாவிகளை பயமுறுத்தும் அந்த “பயங்கரசக்தி” என்ன? என்பதை நேரடியாக பார்ப்பதில் எனக்கும் எனது மனைவிக்கும் எம்முடன் இணைந்து செயற்படும் எமது சட்டத்தரணிகள் குழுவுக்கும் (Fast & First Team) சரியான விருப்பம்.ஏனெனில் ஒரு சரியான முஸ்லிம் பயப்பட மாட்டான் கவலைப்படவும் மாட்டான் என்பது இஸ்லாத்தின் அடிப்படை .அது எப்போதும் உற்சாகப்படுத்திக்கொண்டேயிருக்கும்.

குறித்த தினம் பதுளை நீதிமன்றில் ஏனைய சிங்கள சட்டத்தரணிகள் வேற்றுக்கிரகனவாசிகளை போல எம்மைப்பார்த்துக்கொண்டிருக்க நானும் எனது மனைவியும்  (ஹபாயாவுடன்) மன்றில் தோன்றினோம்.

பொலிசார்:- (பதுளை நீதவான் சமிந்த கருணாரட்னவிடம்)

“உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்களுடன் சம்பந்தப்பட்டவர்கள் என சந்தேகப்படுகின்ற தேசிய தவ்ஹீத் ஜமாஆத்தின் (NTJ)உறுப்பினர்கள் இவர்கள்.பதுளை நகரில் பல பள்ளிகள் இருக்கின்ற போது மாதம் ரூ.180,000/=க்கு ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தொழுது வருகிறார்கள். (காட்டிக்கொடுத்தவர்கள் யார் என்பது வாசகர்களுக்குப் புரிகிறதா?).

அமைதியாகவிருக்கும் இந்த பதுளை நகரத்தை அழிப்பதற்கு கிழக்கு மாகாணத்திலுள்ள ISIS தீவிரவாதிகளுடன் திட்டம் தீட்டி அதனை நடைமுறைப்படுத்தும் ஆலோசனை செய்யும் போது இவர்கள் கைது செய்யப்பட்டனர்......(பேனை பெரிச்சாளியாக்கும் வேலையை கண கட்சிதமாக செய்து கொண்டிருந்தனர் ).

சத்தியம்(உண்மை) எது?

பொலிசார் சொல்லும் குற்றச்சாட்டுக்களும் இவர்களுக்கும் எந்தவித சம்மந்தமில்லையென்பது குற்றவாளி கூட்டிலிருந்த எமது சகோதரர்களான அஹ்லான்,நிசாம் மற்றும் யஹ்யாகான் ஆகியோரின் முகங்களில் காணப்பட்ட ஈமானிய வெளிச்சங்கள் எமக்கு கூறிக்கொண்டிருந்தன.

நாம் :-பொலிசார் கூறுவது அப்பட்டமான பொய் அவர்கள் நீதிமன்றில் சமர்ப்பித்தருக்கும் B அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் “சிலோன் தவ்ஹீத் ஜமாத்தைச்சேர்ந்தவர்கள் என டைப் செய்து வைத்துக்கொண்டு வாயால் ஊடகங்கள் சொல்வதை கேட்டுக்கேட்டு பாடமாக்கிய தேசிய தவ்ஹீத் ஜமாஆத் (NTJ) உறுப்பினர்கள் என நீதவான் உங்களைஉசிப்பேத்துகின்றனர்.

ஒரு வருடத்திற்காக CTJ சென்றருக்கு கொடுத்த ௹.180,000/= ஐ ஒரு மாதத்திற்கான வாடகையாக உயர்த்திக்காட்டுகின்றனர் .

இலங்கை பிரஜைகள் அனைவரும் தமது சமயத்தை தனியாகவோ கூட்டாகவோ பின்பற்றுவதற்கு அரசியலமைப்பில் உரிமை வழங்கப்பட்டுள்ளது.என சாராமாறையாக உண்மைகளை உரத்துக்கூறிய போது அந்நேரத்தில் தலையைக்குணிந்த பொலிசார் நேற்று வரை (7/06/2019)தலை நிமிரவில்லை.

பல சட்டவிதிகளை போலிசார் மீறி செயற்பட்டுள்ளனர் என்பதை எடுத்துக்கூறி PTA மற்றும் பொதுமக்கள் பாதுகாப்புச்சட்டங்களின் கீழ் வழக்கிட போலீசாருக்கு போதிய சான்றுகள் இல்லையென அப்பாவிகளை பிணையில் விடுவித்தோம் அல்ஹம்துலில்லாஹ்.

43 நாட்களாக உள்ளேயிருந்த சகோதர்கள் வெளியே வந்து என்னை கட்டித்தளுவி எமக்காக துஆ செய்தார்கள்.

அஹ்லான் வெளியே வந்ததும் கேட்ட கேள்வி “அந்த மஹியங்கனை லேடியை விட்டுட்டாங்களா? “
பக்கத்தில் நின்றவர்கள் “இந்த சேரும் மேடமும் தான் அவவை காப்பாத்தி விட்டார்கள் “ என்றனர். 
அவரின் சமூகப்பற்றைக் கண்டு அல்லாஹ்வை புகழ்ந்தோம்.
.
மூன்று சகோதரர்களும் “நாங்கள் நிரபராதிகள்  என்பதை காட்டுவதற்கு சமூக ஊடகங்களில் எமது போட்டோக்களை போடுங்கள் “ என்றனர்.அவர்களின் வேண்டுகோள் இத்தால் நிறைவேற்றப்படுகிறது. 

சட்டத்தரணி சறூக் -0771884448

11 comments:

  1. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. Alhamdhulillah ! a meritorious deed with audacity.

    ReplyDelete
  3. Alhamdhulillah ! a meritorious deed with audacity.

    ReplyDelete
  4. உங்கள் அனைவருக்கும் அல்லாஹ் அருள்புரிவானாக.

    ReplyDelete
  5. Masha Allah, you are doing a great job for our community Sir. Zarook. People like you should come forward for leadership positions in our community even in politics.

    ReplyDelete
  6. Dear my brother Sarook sir. Allah bless you and your wife, protect your whole life with good health. Gudgment day insha'Allah your family may got direct Jannathul Firthous.
    .

    ReplyDelete
  7. சட்டத்தரணி சறூக் அவர்களே, உங்களது துணிச்சலும் மக்கள் மீதான அக்கறையும் மிகவும் சிறப்பானது. இந்த பொய் வழக்கு போடும் பொலிஸுக்கு தகுந்த பாடம் புகட்ட தக்கதாக நட்ட ஈடு கோரி வழக்கு போட முடியாதா?

    ReplyDelete
  8. அல்ஹம்துலில் லா

    ReplyDelete

Powered by Blogger.