June 20, 2019

கண்டியிலிருந்து, கல்முனைக்கு (இது ஒரு செய்தியல்ல, மூட்டப்படும் பெரும் தீ)

கல்முனையில், தமிழ் மக்கள் பெரும்பான்மை கொண்ட பிரதேசத்தினை உள்ளடக்கி இருக்கும் உப பிரதேச செயலகத்தினை தரமுயர்த்தி , கல்முனை மாநகர சபையிலிருந்து விடுவித்து சுயமாக இயங்க ஆவண செய்ய வேண்டுமென அப்பிரதேச தமிழ் மக்கள் நீண்டகாலமாக கோரி வருகின்றனர் .இதே போல்தான் சாய்ந்த மருது முஸ்லிம் மக்களும் தமக்கான தனி பிரதேச செயலக கோரிக்கையை முன்வைத்து தொடர்ச்சியாக ,கல்முனை மாநகர சபையின் கட்டுப்பாட்டிலிருந்து ,தமது பிரதேசத்தை சுயாதீனமாக்க வேண்டும் என்கின்றனர்.

அடிப்படையில் இவ்விரு கோரிக்கைகளும் நிர்வாக , பரிபாலண அதிகாரத்தினை அம்மக்கள் கோரும் விடயம்தான்,ஆனால் கல்முனை உப பிரதேச செயலகக் கோரிக்கை தமிழ் மக்களின் கோரிக்கையாக இருப்பதாலும்,அக்கோரிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என சொல்லும் தரப்பாக முஸ்லிம்கள் உள்ளதாலும் இந்த விவகாரம் தமிழர் முஸ்லிம் முரண்பாடாக நிலவி வருகிறது.

இப்போது அது மேலும் ஒரு புதிய பாரிமாணத்தினையும், இன்றைய அரசியல் விளைவுகளோடு கொண்டு வந்து சேர்த்திருக்கிறது.முஸ்லிம் விரோத சிங்கள இனவாதத்தரப்பும் எரியும் நெருப்பில் எண்ணெய் வார்க்கும் கதையாக களத்தில் குதித்திருக்கிறது.

கல்முனை விகாரதிபதி கோரிக்கையாளர்களுடன் சேர்ந்து உண்ணாவிரதமிருக்க, அவர்களுக்கு ஆதரவாக மட்டு விகாரதிபதியும், முஸ்லிம் அமைச்சர்களின் பதவிகளை மூன்று நாள் அரைகுறை உண்ணாவிரதமிருந்து காலி பண்ணிய கடும்போக்கு இனவாத அத்துரலிய தேரரும் இப்போது களத்தில்.

“விடுவான சுல்தான் “எனும் போர்வையில் இந்த உண்ணாவிரதத்துக்கு எதிராக கல்முனை முஸ்லிம் தரப்பின் ஒரு பகுதியினரும் இப்போது உண்ணாவிரதத்தில் .மொத்தத்தில் கல்முனை இப்போது உண்ணாவிரத பூமி.அத்துடன் தமிழ் முஸ்லிம் இன முரண்பாட்டின் கொதிநிலை மையம் கொண்டுள்ள மண்.

கல்முனை தமிழ் பிரதேச ,சாய்ந்தமருது முஸ்லிம் பிரதேச செயலகங்களுக்கான அந்தந்த பிரதேச மக்களின் கோரிக்கையை மறுப்பதற்கும், அதனை தடுப்பதற்கும் கல்முனை முஸ்லிம்களுக்கு எந்த உரிமையும் இல்லை.அவர்களுக்கு இருக்கும் உரிமை தங்களுக்கு உரித்தான வளங்களை , பிரதேச சபை எல்லை வகுப்பின் வழியாக கபளீகரம் செய்து விடக்கூடாது என்கிற நிலைப்பாடு மட்டுமேயாகும்,

இன்றைய நிலையில் ,கல்முனையை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற முஸ்லிம் அரசியல் தலைமைகளுக்கும்,கல்முனை முஸ்லிம் சிவில் சமூகத்திற்கும் முக்கிய பொறுப்புள்ளது.தீர்க்கமான முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்.இது கதை பேசும் நேரமல்ல.

ஏன் இந்த விவகாரத்தினை தொட்டு நாங்களும் பேச வேண்டி இருக்கிறதென்றால் இன்று இந்த விவகாரம் கல்முனை எல்லையையும் தாண்டி, ஒட்டு மொத்த நாட்டு விவகாரமாக மாறிவிட்டுள்ளது.
நாங்கள்தான் ஆள வேண்டுமென மார்தட்டுபவர்களிடம் கேட்க இருக்கும் கேள்விகளில் ஒன்று, இந்த இனவாத ஆளும் குழுமமும் அதைத்தானே சொல்கிறது என்பதைத்தான்.

Fauzer Mahroof

5 கருத்துரைகள்:

கல்முனை விவகாரம் இன்று நேற்று தோன்றிய பிரச்சினைஅல்ல.
நீண்ட நாட்களாக அப்பிரதேச அரசியல்
தலைவர்களாலும் அதிகாரிகளாலும்
தோற்றுவிக்கப்பட்ட ஒன்று.இவர்களெல்லாம் அங்கு தங்களுக்கு ஏற்படுகின்ற தனிப்பட்ட
காரணங்கள்,அநுபவங்கள் ஆகியவற்றிற்கு இனவாத,மதவாத,
பிரதேசவாத சாயங்களை பூசிக்கொண்டு பிரிவினைக்கு வித்திட்டு அதைவளர்த்தெடுத்து இன்று
அது நாலாபக்கமும் வியாபித்துள்ள
நிலையில் கூப்பாடு போட்டு கொக்கரித்துக்கொண்டிருப்பதில் என்ன பயனை நாம் காணமுடியும்.சாதாரண மக்கள் இவைகளை கண்டு
கொள்வதே இல்லை.அவர்களுக்கு
யார் அங்கு அதிகாரத்தில் இருந்தாலும் எல்லோரையும்,எல்லா
பிரதேசங்களையும் சம கண்கொண்டு
பார்க்கக்கூடிய நிர்வகிக்கக்கூடிய நீதி
செலுத்தக்கூடிய அதிகாரிகளும்,அரசியல் தலைமைகளும் தான்தேவை .அவ்வாறான அதிகாரிகளையும் அரசியல்வாதிகளையும் மக்கள் இனம்
கண்டால் இன்று நடைபெறுகின்ற
பிரிவினைவாதம் இவ்வாறு தளைத்தோங்கி இருக்காது. ஆனால்
கல்முனை நிர்வாகமும் அரசியலும்
அதில் தோல்வி அடைந்துவிட்டது.
மூவின சமூகங்கள் வாழ்கின்ற இந்தப்
பிரதேசத்திலே குறிப்பாக தமிழ்,
முஸ்லீம் மக்களை கூடுதலாக கொண்ட
இப்பிரதேசத்தில் இன ரீதியான அரசியல் கட்சிகளை தோற்றுவித்து அவைகளை பிரதிநிதித்துவப்படுத்தி தங்கள் தங்கள்
இனத்துக்காக மட்டும் குரல் கொடுத்து
அவர்களின் வாக்குகளைப் பெற்று
அடுத்த தேர்தலிலும் வெற்றிவாகை
சூடவேண்டும் என கங்கணம் கட்டிக்
கொண்டு காய் நகர்த்தி செயல்படும் அரசியல் தலைமைகளால் கல்முனையை எவ்வாறு ஒன்றாக ஒற்றுமையாக நியாயமாக நீதியாக
ஆட்சி செய்யமுடியூம்?இவற்றுக்கெல்லாம் துணை போகின்ற
படித்தவர்கள் சமயக்குரவர்கள் சமூகசேவையாளர்கள் அதிகாரிகள்
உள்ளூர் தலைமைகள் ஏன் புத்திஜீவிகள்என்று நாம் கண்டவர்களும் இதே அரசியலையும்
இதே நிர்வாகிகளையும் ஆராதித்தால்
கல்முனை பிரிபடாமல் என்ன செய்யும்?
இது போதாது என்று இன்று சாய்ந்தமருதுவுக்கும் ஒரு தனியான
உள்ளூராட்சிசபை என்ற ஒரு கோரிக்கை வலுப்பெற்று விட்டது.
அதை அவர்களிடம் இருந்து அகற்ற
முடியாத அளவுக்கு அந்த பிரதேச வாதம் வளர்வதற்கும் இதே அரசியலும்
அதிகாரமும்தான் காரணம்.கல்முனையை ஆண்டவர்கள்
விட்ட தவறுகளும் ஓரவஞ்சனையான
செயற்பாடுகளும்தான் அந்த மக்களை
இன்நிலைக்கு தள்ளியுள்ளது என்பதில்
மாற்றுக்கருத்துக்கள் இருக்க முடியாது.
இருந்தும் கல்முனை மாநகரம் என்ற
ஒரு பாரிய பிரதேசம் வெறும் இன,மத
பிரதேசவாதங்களில் சிக்குண்டு சுக்கு
நூறாக உடைய எத்தனிப்பதை எம்போன்றவர்களால் ஏற்றுக்கொள்வோ ஜீரணிக்கவோ
முடிய வில்லை.இதில் மக்கள்தான்
சிந்திக்க வேண்டும்.காலம்தான் பதில்
சொல்ல வேண்டும் என்று இதை விட்டு
விடமுடியாது. தற்போது இதற்கான முடிவு உடன் எட்டப்படவேண்டிய சூழல்
உருவாகியுள்ளது. இப்பிரச்சினை கல்முனையையும் தாண்டி நாலாபக்கமும் வியாபித்து பாரிய அழிவுகளையும் அட்டகாசங்களையும்
உருவாக்குவதற்கான சந்தர்பங்களை
ஏற்படுத்துவதில் இனவாத சக்திகள்
முனைப்புக்காட்ட தொடங்கிவிட்டன.
எனவே மூவினத்திலுமுள்ள நன்மக்கள்
விரைந்து செயற்பட்டு இதற்கான நியாயத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்படுவதோடு, கல்முனை தமிழ்
மக்களின் மனக்குறைகள் தீர்கப்பட
வேண்டியதும் இங்கு கவனிக்கப்பட
வேண்டிய ஒன்றாகும்.ஆனால் இவ்வாறான போராட்டங்கள் சமூக அமைப்புக்களால்,பொதுவான அமைப்புக்களால் தொடங்கப்படாமல்
அரசியல் வாதிகளாலும்,இனவாதிகள்
என இனம்காணப்பட்டவர்களாலும்
தொடங்கப்ட்டு அவர்களின் நிகழ்ச்சி
நிரலுக்கு இதை வழிநடாத்த முற்படுவதுதான் இந்த நாட்டின் தலை
விதியாக மாறுவதை அனுமதிக்க முடியாது என்பதும் உணரப்பட வேண்டும்
U.L.A.Hassen
Ex .Assit.Director of Planning
Divisional secretariat
Kalmunai

why don't you think, the Tamils of the region refusing to be with Muslims in a small DS division while they are fighting to make North-East for their rule, are they forgot, there are more than 01 million Muslims? isn't it funny and impossible?

absolutely correct Hasen Sir

தோழமைக்குரிய Fauzer Mahroof அவர்களுக்கு. இனவாதிகள் ஊர்வாதிகளுக்கு மத்தியில் நியாயமான மனித்தின் குரலாக உங்கள் பதிவு நம்பிக்கை தருகிறது. இது எப்பவோ முடிந்த காரியம்.

நண்பர் பௌசர், சாய்ந்தமருது ஏற்கனவே பிரதேச செயலகம் பெற்று விட்டார்கள் தற்போது கேட்பது பிரதேச சபையாகும். கல்முனை வடக்கு கேட்பது பிரதேச செயலகமாகும். எதிர் காலத்தில் பிரதேச சபை கேட்பார்கள். முன்மாதிரி இங்கேயே இருக்கல்லோ.

Post a comment