Header Ads



றிஸ்வி முப்திக்கு பதிலளிக்க, வாய்ப்பு கோருகிறது பொதுபலசேனா

பாரா­ளு­மன்ற விசேட தெரி­வுக்­கு­ழுவின் முன்­னி­லையில் சாட்­சி­ய­ம­ளித்த உலமா சபையின் தலைவர் பொது­ப­ல­சேனா அமைப்பைப் பற்­றியும் ஞான­சார தேரர் பற்­றியும் பொய்ச்­சாட்­சியம் வழங்­கி­யி­ருக்­கிறார். அது பொய்ச் சாட்­சியம் என்­பதை நிரூ­பிப்­ப­தற்கு பாரா­ளு­மன்ற விசேட தெரி­வுக்­கு­ழுவின் முன்­னி­லையில் சாட்­சி­ம­ளிப்­ப­தற்கு நேரம் ஒதுக்கித் தரு­மாறு பொது­ப­ல­சேனா அமைப்பு சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரி­ய­வி­டமும் பாரா­ளு­மன்ற செய­லா­ள­ரி­டமும் கோரிக்கை விடுத்­துள்­ளது.

தெரி­வுக்­குழு முன்­னி­லையில் சாட்­சி­ய­ம­ளிப்­ப­தற்கு சந்­தர்ப்பம் வழங்­கு­மாறு பொது­ப­ல­சேனா அமைப்பு சபா­நா­ய­க­ருக்கும் பாரா­ளு­மன்ற செய­லா­ள­ருக்கும் கடி­தங்­களை அனுப்பி வைத்­துள்­ளது.

உலமா சபையின் தலைவர் ஐ.எஸ். அமைப்பு இலங்­கையில் வேரூன்­று­வ­தற்கு பொது­ப­ல­சே­னாவின் வெறுப்புப் பேச்­சுக்­களே காரணம் என்று குற்றம் சுமத்­தி­யுள்ளார். பொது­ப­ல­சேனா அமைப்பு 2012 இலே உரு­வாக்­கப்­பட்­டது. ஆனால் இதற்கு முன்பே அடிப்­ப­டை­வாதம் இலங்­கையில் வேரூன்­றி­யி­ருந்­தது. இவ்­வாறு பொய் வாக்கு மூலங்­களை வழங்கும் உலமா சபையின் தலைவர் முஸ்லிம் சமூ­கத்தை வழி நடத்­து­வ­தற்குத் தகு­தி­யற்­றவர். முஸ்லிம் சமூகம் ஐ.எஸ். அமைப்­புடன் மாத்­தி­ர­மல்ல உலமா சபையின் தலைவர் தொடர்­பிலும் எச்­ச­ரிக்­கை­யாக இருக்கவேண்டும் என பொதுபலசேனாவின் நிறைவேற்றுப் பணிப்பாளர் டிலன்த விதானகே ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.1

2 comments:

  1. அரச ராணுவத்திற்கும் நீதித்துறைக்கும் பணிவுடன் வேண்டுகோள் விடுக்கின்றோம் மீண்டும் மீண்டும் இந்த பொதுபலசேனாவை கருத்துக்கள் திணிக்க செய்ய வேண்டாம் அவர்களின் கருத்துக்களும் அவர்களின் அட்டூழிய அனாச்சார காரியங்களும் முஸ்லிம்களின் மன உளைச்சலை அன்று முதல் இன்று வரை ஆக்கிரமித்தன அதனால் இந்த பயங்கரவாதம் உருவாகி இருக்க வாய்ப்பு இருக்கின்றது ஏனென்றால் அந்த நேரம் இந்த பொதுபலசேனாவின் வேலைகளினால் அடாவடித்தனத்தை எல்லாம் முஸ்லிம்களுடைய மனசும் உடைந்து சுக்கு நூறாய் மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்தோம். என்பதை இந்த அரசும் ராணுவத்தினரும் விளங்கிக்கொள்ளவேண்டும் ராணுவத்தினர் முக்கியமாக இந்த தீவிரவாத கும்பலுக்கு அடிபணிய வேண்டாம் எல்லா சிறுபான்மையினருக்கும் நீதியாகவும் நியாயமாகவும் நீதித்துறையும் ராணுவத்தினரும் செயற்பட வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கின்றோம் மீண்டும் மீண்டும் இந்த கடும்போக்குவாத கும்பல் பொதுபலசேனா கருத்துக்கள் சொல்லுவதற்கு இடமளிக்கக்கூடாது அவர்கள் ஓர் கடும்போக்குவாதிகள் என்பதை மீண்டும் உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கின்றோம். எந்த தீவிரவாதம் எந்த கடும்போக்குவாதமுன் இந்த நாட்டுக்கு தேவை இல்லை ராணுவத்தினரும் நீதித்துறையும் நடுநிலையாக நீதியாக செயற்பட வேண்டும் என்பதே எல்லா மக்களின் எதிர்பார்ப்பும். அதுதான் நாட்டின் நலத்திற்கு நன்மை பயக்கும் எந்த கடும் போக்கு வாதிகளையும் கருத்து சொல்ல விடுவது தடை செய்யப்படுதல் வேண்டும் அவர்களின் கருத்தின்படி தான் இந்த தீவிரவாதம் உருவாகி இருக்கும் என்பதை எல்லா முஸ்லிம்களும் உணர்கின்றார்கள். அந்த நேரத்தில் மன உளைச்சலுக்கு ஆளான ஒரு சிலர் தீவிரவாதத்தின் குதித்திருக்கிறார்கள். இதை அரசும் ராணுவத்துடன் இணைந்து செயற்படுதல் வேண்டும் கடும்போக்குவாதிகள் பொதுபல சேனா போன்ற மற்றும் சில அமைப்புகளுக்கு இடமளிக்கக்கூடாது இதில் முகங்களைப் பார்க்க வேண்டாம் அவர்கள் பேசும் பேச்சை அவதானியுங்கள் அவர்களை தடுத்து சரியான வழிகாட்டலில் செயற்பட செய்ய வேண்டும் இல்லையெனில் 30 வருட பயங்கரவாதத்தை ஒழித்ததில் எந்த அர்த்தமும் இல்லாமல் போய்விடும் மீண்டும் மீண்டும் பயங்கரவாதம் உருவாகிக்கொண்டே இருக்கும் இப்படியான பயங்கரவாத செயற்பாட்டைத் தூண்டும் அவர்களை இந்த அரசு அனுமதித்தால்..தமிழ் பேசும் இந்து மக்களின் போராட்டம் எப்படி ஆரம்பித்தது என்பதை ஆராய்ந்து பாருங்கள் இப்படியான இனவாத பேச்சும் அட்டூழியங்களும் காரணமாகவே அவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி சிங்கள கடும் போக்குவாதிகளின் இந்த நாட்டில் வாழ முடியாது என்ற கட்டத்திலேயே அவர்கள் போராட்டத்தை கையிலெடுத்து தனிநாடு கேட்டார்கள் இதே போன்று இந்த பொதுபலசேனாவும் இதைப் போன்ற பல அமைப்புகளும் இப்பொழுது உருவாக்கி வருகின்றது இதை நாட்டு நீதித்துறையும் ராணுவத்தினரும் சரிவர கண்காணிக்க வேண்டும் என்று பணிவுடன் வேண்டுகோள் விடுக்கின்றோம்..

    ReplyDelete
  2. அரச ராணுவத்திற்கும் நீதித்துறைக்கும் பணிவுடன் வேண்டுகோள் விடுக்கின்றோம் மீண்டும் மீண்டும் இந்த பொதுபலசேனாவை கருத்துக்கள் திணிக்க செய்ய வேண்டாம் அவர்களின் கருத்துக்களும் அவர்களின் அட்டூழிய அனாச்சார காரியங்களும் முஸ்லிம்களின் மன உளைச்சலை அன்று முதல் இன்று வரை ஆக்கிரமித்தன அதனால் இந்த பயங்கரவாதம் உருவாகி இருக்க வாய்ப்பு இருக்கின்றது ஏனென்றால் அந்த நேரம் இந்த பொதுபலசேனாவின் வேலைகளினால் அடாவடித்தனத்தை எல்லாம் முஸ்லிம்களுடைய மனசும் உடைந்து சுக்கு நூறாய் மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்தோம். என்பதை இந்த அரசும் ராணுவத்தினரும் விளங்கிக்கொள்ளவேண்டும் ராணுவத்தினர் முக்கியமாக இந்த தீவிரவாத கும்பலுக்கு அடிபணிய வேண்டாம் எல்லா சிறுபான்மையினருக்கும் நீதியாகவும் நியாயமாகவும் நீதித்துறையும் ராணுவத்தினரும் செயற்பட வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கின்றோம் மீண்டும் மீண்டும் இந்த கடும்போக்குவாத கும்பல் பொதுபலசேனா கருத்துக்கள் சொல்லுவதற்கு இடமளிக்கக்கூடாது அவர்கள் ஓர் கடும்போக்குவாதிகள் என்பதை மீண்டும் உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கின்றோம். எந்த தீவிரவாதம் எந்த கடும்போக்குவாதமுன் இந்த நாட்டுக்கு தேவை இல்லை ராணுவத்தினரும் நீதித்துறையும் நடுநிலையாக நீதியாக செயற்பட வேண்டும் என்பதே எல்லா மக்களின் எதிர்பார்ப்பும். அதுதான் நாட்டின் நலத்திற்கு நன்மை பயக்கும் எந்த கடும் போக்கு வாதிகளையும் கருத்து சொல்ல விடுவது தடை செய்யப்படுதல் வேண்டும் அவர்களின் கருத்தின்படி தான் இந்த தீவிரவாதம் உருவாகி இருக்கும் என்பதை எல்லா முஸ்லிம்களும் உணர்கின்றார்கள். அந்த நேரத்தில் மன உளைச்சலுக்கு ஆளான ஒரு சிலர் தீவிரவாதத்தின் குதித்திருக்கிறார்கள். இதை அரசும் ராணுவத்துடன் இணைந்து செயற்படுதல் வேண்டும் கடும்போக்குவாதிகள் பொதுபல சேனா போன்ற மற்றும் சில அமைப்புகளுக்கு இடமளிக்கக்கூடாது இதில் முகங்களைப் பார்க்க வேண்டாம் அவர்கள் பேசும் பேச்சை அவதானியுங்கள் அவர்களை தடுத்து சரியான வழிகாட்டலில் செயற்பட செய்ய வேண்டும் இல்லையெனில் 30 வருட பயங்கரவாதத்தை ஒழித்ததில் எந்த அர்த்தமும் இல்லாமல் போய்விடும் மீண்டும் மீண்டும் பயங்கரவாதம் உருவாகிக்கொண்டே இருக்கும் இப்படியான பயங்கரவாத செயற்பாட்டைத் தூண்டும் அவர்களை இந்த அரசு அனுமதித்தால்..தமிழ் பேசும் இந்து மக்களின் போராட்டம் எப்படி ஆரம்பித்தது என்பதை ஆராய்ந்து பாருங்கள் இப்படியான இனவாத பேச்சும் அட்டூழியங்களும் காரணமாகவே அவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி சிங்கள கடும் போக்குவாதிகளின் இந்த நாட்டில் வாழ முடியாது என்ற கட்டத்திலேயே அவர்கள் போராட்டத்தை கையிலெடுத்து தனிநாடு கேட்டார்கள் இதே போன்று இந்த பொதுபலசேனாவும் இதைப் போன்ற பல அமைப்புகளும் இப்பொழுது உருவாக்கி வருகின்றது இதை நாட்டு நீதித்துறையும் ராணுவத்தினரும் சரிவர கண்காணிக்க வேண்டும் என்று பணிவுடன் வேண்டுகோள் விடுக்கின்றோம்..

    ReplyDelete

Powered by Blogger.