Header Ads



இலங்கை முஸ்லிம்கள் மீதான, தாக்குதல் நம் அனைவர் மீதுமான தாக்குதலாகும் - ஐ.நா. மனித உரிமை ஆணையாளர்


கடந்த ஏப்ரல் 21ம் திகதி மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் பின்னர் இலங்கை அரசாங்கம் துரிதமாக மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக பயங்கரவாதத்தை விரைவில் கட்டுப்படுத்த முடிந்ததாக மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் தெரிவித்துள்ளார்.

ஜெனீவாவில் நடைபெறும் சர்வதேச மனித உரிமைகள் பேரவையின் 41வது கூட்டத்தொடரில் உரையாற்றிய அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

இதேபோன்று இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு அரசியல் தலைவர்களும், சமயத் தலைவர்களும் ஏனைய தேசிய அமைப்புகளின் தலைவர்களும் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து திருப்தியடைவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நடவடிக்கைகளில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வழங்கிய பங்களிப்பு பாராட்டப்பட வேண்டுமென்றும் அவர் கூறினார். சிறுபான்மை சமயத்தவர்கள் மீதான தாக்குதல் நம் அனைவர் மீதுமான தாக்குதலாகும்.

எவ்வாறாயினும், சமய நம்பிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ள ஆழமான மனித விழுமியங்களையும், மனித பிணைப்புக்களையும் மதிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

அனைத்து வகையான வன்முறைகள் மற்றும் பாகுபாடுகளுக்கான பிரதான காரணிகளை கண்டறிந்து தீர்ப்பதற்காக அரசியல், சமய மற்றும் சமூகத் தலைவர்கள் ஒன்றிணைய வேண்டியதன் அவசியத்தையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

3 comments:

  1. Hello UN,
    இது முஸ்லிம்-சிங்களம் இணைந்த அரசாங்கம். அணைத்து 21 முஸ்லிம் MPகளும் அரசுக்கு ஆதரவு, பல முஸ்லிம்கள் அமைச்சர்களாக உள்ளார்கள்.
    எனவே, ஒரு முஸ்லிம் அரசாங்கம் எப்படி முஸ்லிம்களை மற்றவர்கள் தாக்குவதை அனுமதிக்கும்?, அப்படி அனுமதித்திருந்தால், முஸ்லிம்கள் MPகளும் அமைச்சர்களும் இன்னேரம் அரசாங்கத்தை விட்டு விலகியருப்பார்களே!

    ஒரு சில சிறு சம்பவங்கள் நடந்திருக்கலாம், இது உள்நாட்டு விவகாரம் என்பதாலேயே முஸ்லிம்கள் அரசுடன் இணைந்துள்ளார்கள்.
    statement விட முதல் இலங்கை அரசில் யார் யார் இருக்கிறார்கள் என அறிந்துகொள்ளுங்கள்

    ReplyDelete
  2. வரவேற்க்க வேண்டிய பிரக்ஞையுடனும் பாரபட்ச்சமின்றியும் ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கையில் மேலோங்கும் முஸ்லிம் வெறுப்பு குற்றச்செயலுக்கு எதிராக கருத்துச் சொல்லியிருக்கிறார். பாராட்டுவதுடன் ஐநா மனித உரிமை அமைப்புகளுடன் முஸ்லிம் சிவில் சமூகம், அமைப்பு ரீதியான பங்குபற்றுதலை அதிகரிக்க வேண்டும்

    ReplyDelete
  3. Thanks a lot mom.I would like to respect on behalf of whole Muslims.

    ReplyDelete

Powered by Blogger.