Header Ads



அத்துரலியே ரத்ன தேரர் போராட்டத்திற்கு, மகிந்த அணி முழு ஆதரவு

அடிப்படைவாதிகளுக்கு எதிராக அத்துரலியே ரத்ன தேரர் நேரடியாகக் களமிறங்கி போராட முன்வந்துள்ளமை வரவேற்கக் கூடிய விடயமாகும். அவருடைய போராட்டத்திற்கு எதிர்கட்சி முழுமையான ஆதரவை வழங்கும் என்று கூட்டு எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க தெரிவித்தார். 

கிழக்கு மாகாண ஆளுனர் ஹிஸ்புல்லா, மேல் மாகாண ஆளுனர் அசாத் சாலி மற்றும் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் ஆகியோர் பதவிகளிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி அத்துரலியே ரத்ன தேரர் முன்னெடுத்துள்ள உண்ணாவிரத போராட்டம் போட்டம் தொடர்பில் எதிர்கட்சியின் நிலைப்பாட்டை வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அடிப்படைவாதிகள் மற்றும் பயங்கரவாத்திற்கு துணை போகின்றவர்களைத் தவிர ஏனைய அனைத்து சாதாரண முஸ்லிம் சமூக மக்கள் மத்தியிலும் இரு ஆளுனர்கள் மீதும் ரிஷாத் பதியுதீன் மீதும் எதிர்ப்புக்கள் உள்ளன. அத்தோடு பல்வேறு குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்பட்டுள்ளன. எனவே இவர்கள் உடன் பதவி நீக்கப்பட வேண்டியது அவசியமாகும். 

ஜனாதிபதியும் பிரதமரும் தத்தமது சுய தேவைகளுக்காக தமிழ் மக்களை ஏமாற்றினார்கள் என்றால் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பும் இவ்வாறே செய்து கொண்டிருக்கின்றது. 

தற்கொலை குண்டு தாக்குதல்களில் மட்டக்களப்பிலும் கொழும்பிலும் அதிகளவான தமிழ் மக்களே கொல்லப்பட்டனர்.ஆனால் கூட்டமைப்பு இதனை துளியேனும் கவனத்தில் கொள்ளவில்லை. அவர்கள் தமது சுயதேவைகளுக்காகவும் சுக போக வாழ்க்கைக்காகவும் ஐ.தே.கவை பாதுகாத்துக் கொண்டிருக்கினறர்.

னவே ரிஷாத் பதியுதீனிக்கு எதிராக இவர்கள் வாக்களிக்கப்  போவதில்லை என்பதை தெளிவாகக் கூற முடியும் என்றும் குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.