Header Ads



இஸ்லாமிய நாட்டு தூதுவர்களுடன் சபாநாயகர் சந்திப்பு

அண்மைய காலங்களில் நாட்டில் ஏற்பட்டுள்ள அமைதியற்ற சூழ்நிலை காரணமாக, பயங்கரவாதத்தை குறுகிய காலத்துக்குள் முழுமையாக முடிவுக்கு கொண்டு வந்து பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இலங்கையில் அனைத்து அடிப்படை வாதிகளையும் புறம்தள்ளி மீண்டும் ஐக்கியத்துடன் நாடு தலைநிமிறும் என சபாநாயகர் கரு ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.

17 இஸ்லாமிய நாடுகளின் தூதுவர்களுடன் இடம்பெற்ற விஷேட சந்திப்பின் போது சபாநாயகர் இதனை தெரிவித்துள்ளார் இந்த சந்திப்பு பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் இந்த சந்திப்பு இடம்பெற்றமை குறிப்பிடதக்கது.

மேலும், பாராளுமன்றத்தில் சம்பந்தப்பட்ட தெரிவுக்குழு மற்றும் அமைச்சுக்களை இணைத்து பயங்கரவாதம் மற்றும் அதனை ஊக்குவிக்கும் அடிப்படை வாதத்தை ஒழிப்பதற்கு தெளிவான சட்டத்திட்டங்களை தயாரித்து வருவதாகவும் சபாநாயகர் இதன்போது தெரிவித்துள்ளார்.

ஒரு நாட்டுக்குள் ஒரு சட்டத்தின் கீழ் இலங்கையர் என்ற ரீதியில் வாழ்வதற்கான அடிப்படை இதன் மூலம் வகுக்கப்படும் என சபாநாயகர் இதன்போது தெரிவித்துள்ளமை முக்கிய விடயமாகும். 

அத்தோடு சபாநாயகருடனான இச்சந்திப்பில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்த்தன உற்பட தெரிவுக்குழுவின் தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டுள்ளமையும் குறிப்பிடதக்கது. 

No comments

Powered by Blogger.