June 08, 2019

முஸ்லிம்களிடம் ரதன தேரர், விடுத்துள்ள வேண்டுகோள்

முஸ்லிம் சமூகத்திலிருந்து தற்போதுள்ள பிரதிநிதிகளைப் போல அல்லாது நாட்டை நேசிக்கும் புதியத் தலைமைத்துவமொன்று உருவாக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர் தெரிவித்துள்ளார்.

 ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிடும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

நம்பிக்கையில்லாப் பிரேரணைக் குறித்து தற்போது பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. நாம் கடந்த காலங்களில் பல நம்பிக்கையில்லாப் பிரேரணைகளை நாடாளுமன்றில் கொண்டுவந்துள்ளோம்.

எனினும், இந்தச் செயற்பாடுகள் அனைத்தும் தோல்வியில்தான் முடிவடைந்துள்ளன. எனவேதான், எம்மால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த விடயத்தில் ஸ்திரமான நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டும் என்று நாம் நேரடியாக வலியுறுத்தியிருந்தோம்.

நம்பிக்கையில்லாப் பிரேரணை நாடாளுமன்றில் வெற்றி பெறுமா என்பதைவிட, நாட்டு மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்திச் செய்ய வேண்டும் என்பதில்தான் இரண்டு தலைவர்களும் கவனம் செலுத்த வேண்டும்.

இதற்கான சரியான செயற்பாட்டையே மேற்கொண்டு வருகிறது.

அமெரிக்காவுக்கு இடங்களை வழங்கி, நாட்டில் இராணுவ முகாமொன்றை ஸ்தாபிக்க அனுமதியளித்துள்ளது.

இவ்வாறான செயற்பாடுகளுக்கு நாம் கடுமையான எதிர்ப்பினை வெளியிட விரும்புகிறோம். இதனை தடுக்க வேண்டியமை எமது பாரிய பொறுப்பாகும்.

இந்த நாட்டைப் பொறுத்தவரை அரசியல் கொள்கையொன்று இல்லாதமை பெறும் குறையாக இருக்கிறது.

அரசியல்வாதிகளுக்கென்று கொள்கைகளை வகுக்க மதத்தலைவர்களும் ஒன்றிணைய வேண்டும். அவ்வாறான செயற்பாடு மேற்கொள்ளப்பட்டால் நாட்டில் இவ்வளவு பிரச்சினைகள் ஏற்படாது.

நாடு குறித்து தற்காலிகமாக ஆட்சிபீடத்தில் அமரும் அரசியல்வாதிகள் தீர்மானிக்ககூடாது என்பதுதான் எமது நிலைப்பாடாக இருக்கிறது.

முஸ்லிம் சமூகத்தைப் பொறுத்தவரை, புதிய நபர்கள் நாடாளுமன்றுக்கு தெரிவு செய்யப்படவேண்டும். இப்போதுள்ள உறுப்பினர்கள் அன்றி, நாட்டை நேசிக்கும் நபர்கள் அந்த சமூகத்தில் இருந்து வர வேண்டும். இதனைத்தான் நாம் தற்போது எதிர்ப்பார்த்துக்கொண்டிருக்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்.

8 கருத்துரைகள்:

எங்கட வேலையே நீங்க செய்ய யோசிக்க வேண்டாம் நீங்கள் கோவில் உள்ளே இருந்து கொண்டு ஏதும் யாறுசரி தந்தால் உண்டு குடிச்சி கொண்டு இருங்கள்.

இதை உங்களது பெளத்த மக்களுக்கு சொல்லி நல்ல மனங்கொண்ட கருஜயசூரிய, விக்ரமபாகு கருணாரட்ன போன்ற தலைவர்களை தேர்வுசெய்யுமாறு கூறுக

உலமகாகள்ளன் அமெரிக்கா நம்நாட்டை களவெடுக்க திட்டம்தீட்டிவிட்டான் என்று உங்களுக்கு புரிந்துவிட்டதா? கட்டாயம் அதை உங்கள் மகாநாயக்க தேரர்களுக்கு தெரியபடுத்தி நம்நாட்டுக்குள் அமெரிக்காவின் அதிகாரங்களை நுழையவிடாமல் உண்ணாவிரதம் இருந்து தடுங்கள் உண்மையில் இதைநீங்கள் செய்தால் தேசப்பற்றுள்ளவர்கள் என்று நாங்கள் உங்களுடன் கை கோர்கின்றோம்

எந்த வகையிலாவது இந்த அமெரிக்கர்கள் நம்நாட்டுக்குள் நுழைவதை தடுங்கள் அவ்கள் நம் நாட்டின் சொத்துக்களில் வைத்த ஆசையின் முதல் பெருபேறுதான் 21/4/2019 நிகழ்ந்த கொடூரக் கொலைகள்!

Thanks ur advice....roadla pora kuppayellam innaiku wilakkam...
Awathaanam makkale....

You Terror Monk you to deep Jungle and do your Buddhist work. We have well educated people to do our work.
Mind it you Shameful Racist Monk.

ஏம்பா பழைய அமைச்சர்களை படுத்திய பாடு போதாது இப்ப புதியவர்கள் தேவைப்படுதோ.மத தலைவர்கள்தான் நாட்டு நிலையை தீர்மானிப்பதென்றால் தேர்தல் தேவையில்லை.சனநாயகம் தேவை இல்லையே தேரரே

බල්ලාගේ වාඩ බුරැවෙක් කරන්න බැ.

ஆரம்பத்தில் இருந்த இந்த நாட்டின் தலைவர்கள் தேரோக்களை உரிய இடத்தில் வைத்திருந்தமையால் நாட்டை சிறந்த முறையில் நாட்டை ஆட்சிசெய்ய அவர்களால் முடிந்தது. இப்போது நாட்டின் நாட்டு மக்களின் தலைவிதியை தீர்மானிக்கும் அதிகாரம்தேரோக்களிடம் ஒப்படைத்து விட்டு சனாதிபதி ஓய்வெடுப்பதன் காரணமாக இந்த நாடு சீரழிவையும் பொருளாதார வீழ்ச்சி நீதித்துறைபெரும்பான்மையின் அதிகாரத் தொனியாகச்செயற்பட ஆரம்பித்துள்ளது. சகல துறைகளிலும் சிறுபான்மை ஒதுக்கப்படுகின்றது, முஸ்லிம்களை அடக்கி ஒடுக்கிவிட்டு, அடிக்கடி வடக்கு சென்று தமிழ்மக்களின் செல்வாக்கையும் வாக்குகளையும் பெற்றுக்கொள்ளலாம் எனக்கனவு காண்கின்றார்.அதற்குநேற்று வடக்கில் தமிழ் சனங்கள் சரியான பாடத்தைக்கற்றுக்கொடுத்தார்கள். ஒரு சில நூறு வாக்குகளால் பாராளுமன்றம் சென்ற ரத்னதேரோ, இந்த நாட்டு சனாதிபதிக்குமேல் சிறுபான்மையினருக்கு உபதேசம் செய்யும் அளவு தேரோ ஆதிக்கம் இந்த நாட்டில் மேலோங்குகின்றது. இத்தகையபோக்கு, இந்த நாட்டு மக்களின் அழிவுக்கும் நாடு உலக அரங்கில் இலங்கை ஒதுக்கப்படுவதற்கும் தான் காரணமாக அமையும்.

Post a comment