June 05, 2019

ஜம்இய்யதுல் உலமாவின், மேலான கவனத்திற்கு...!

நேற்று ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் இப்தார் நிகழ்ச்சியில்;; கலந்து கொள்ளச் சென்றிருந்த ஜம்இய்யதுல் உலமா பிரதிநிதிகள் குழு முஸ்லிம்களின் பாதுகாப்பு, அப்பாவிக் கைதிகளின் விடுதலை, முஸ்லிம் பெண்களது ஆடை ஆகியன தொடர்பாக வரையப்பட்ட கடிதம் ஒன்றை ஜனாதிபதியிடம் கையளித்ததாகவும், ஜனாதிபதியின் சபையில் ஜம்இய்யத்துல் உலமா தலைவர் சமூகத்தின் கௌரவத்தை எடுத்துக் காட்டியமையும் ஊடகங்கள் வாயிலாக அறியமுடிந்தது. அல்லாஹ் ஜம்இய்யத் உலமா தலைவருக்கும் அதன் உறுப்பினர்களுக்கும் அருள் புரியவேண்டும்.

இங்கு நான் எழுதப்போகின்ற விடயம் ஜம்இய்யத்துல் உலமாவை விமர்சிப்பதற்காக அல்ல. ஓர் ஆலோசனையை முன்வைப்பதற்காக மட்டுமே.

நான் ஜம்இய்யாவிடம் மிகத் தாழ்மையாக முன்வைக்கின்ற ஆலோசனை யாதெனில் முஸ்லிம் பெண்களின் ஆடை தொடர்பில் ஜம்இய்யா தனது கருத்தை மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என்பதே.

ஜனாதிபதிக்கு வழங்கிய கடிதத்தில் முஸ்லிம் பெண்களின் ஆடைதொடர்பில் மீள்பரிசீலனை செய்யுமாறு கோறியிருந்தமை ஜம்இய்யா ‘பெண்கள் முகம் மறைக்க வேண்டும்’ என்ற விடயத்தில் இன்னும் பிடிவாதமாக இருப்பதை சுட்டிக்காட்டுவதாகவே உள்ளது, ஜம்இய்யதுல் உலமா இஸ்லாத்தையும் எல்லா முஸ்லிம்களையும் பிரதிநிதித்துவப் படுத்தும் அமைப்பு என்றவகையில் குறித்த விடயத்தில் பிடிவாதத்தைத் தளர்த்த வேண்டும் என்பதே எனது ஆலோசனையாகும். அதற்கான நியாயங்கள் பல

1. அரசாங்கம் முகத்தை மறைத்தலை மாத்திரமே தடைசெய்தது. ஆனால் இனவாதிகளோ அபாயா, இஸ்காப் ஆகியவற்றைக் கூட எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடாத்தினர். அதனால் முஸ்லிம் பெண்கள் பல்வேறு இடைஞ்சல்களுக்கு உள்ளாகினர். இவ்வாறான நிலையில் நாம் முகம் மறைத்தலுக்கான அனுமதியைப் பெற்று, வெற்றி பெற்றோம் என்ற மகிழ்ச்சியல் அதை நடைமுறைப் படுத்தும் போது பாரிய பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டி வரலாம்.

2. முகம் மறைக்கும் விடயத்தில் உலமாக்கள் மத்தியல் நிறையக் கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன. ஷாபி மத்ஹபில் கூட முகம் மறைத்தல் கட்டாயமல்ல. இந்நிலையில் ஜம்இய்யதுல் உலமா முகம் மறைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் பிடிவாதமாக இருப்பது பொருத்தமானதல்ல.

3. முகம் மறைத்தல் பெண்ணின் உரிமையோடு தொடர்பான விடயம். எனவே அதைப் பெண்கள் பேசட்டும். ஜம்இய்யதுல் உலமாவோ அல்லது ஏனைய ஆண்களோ அதைப் பற்றிப் பேசும் போது இஸ்லாம் பெண்ணுரிமைக்கு எதிரானது என்ற விமர்சனத்திற்கு ஆதாரமாய் அமைந்துவிடும்

4. பெண்கள் முகத்தை மறைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை விட ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவான ‘பார்வையைத் தாழ்த்திக் கொள்ளுங்கள்;’ என்ற அல்குர்ஆனியக் கட்டளைக்கு முன்னுரிமை வழங்குதல் இஸ்லாம் பற்றிய நல்லெண்ணத்தை ஏற்படுத்தும்.

5. முஸ்லிம் அல்லாதவர்கள் இஸ்லாத்தை வெறுப்பதற்கு பெண்களின் முகத்திரையும் ஒரு காரணம் என்பதை நாம் அறிவோம். இந்நிலையில் முகத்திரை முக்கியமா? இஸ்லாம் பற்றிய நல்லெண்ணத்தை ஏற்படுத்தல் முக்கியமா? பொருத்தமானதைத் தெரிவுசெய்வதில் ஜம்இய்யா அதி;க கவனம் செலுத்த வேண்டும்.

6. முகத்தை மூடும் சில பெண்கள் பொது இடங்களில் வெளிப்படுத்தும் நடத்தைக் கோளம் முகத்தை மறைப்பதற்காகக் கூறப்படும் தாத்பரியத்திற்கு முரணாக இருத்தல்

7. தமது முகத்தை அல்லது தமது பெண்களின் முகத்தை எந்த ஆணும் பார்க்கக் கூடாது என்ற நிலைப்பாட்டில் உள்ள குறைந்த வீதத்தினருக்காக போராடுவது முழு சமூகத்தையும் பிரதிநிதிதுவப்படுத்தும் ஜம்இய்யாவுக்குப் பொருத்தமானதா?

8. ஜம்இய்யா முகத்திரைக்கு அதிமுக்கியத்துவம் கொடுக்கும் போது, முஸ்லிம் அல்லாத அரசியல் வாதிகள் கூட முகத்திரை விவகாரம் மூலம் அரசியல் இலாபம் தேட முயற்சிக்கலாம். அதனால் ஏற்படும் வாதப் பிரதிவாதங்களால் முகத்திரை முஸ்லிம்களின் அவமானச் சின்னமாக மாறலாம்.

9. ஜம்இய்யதுல் உலமா முகத்திரையை வலியுறுத்தும் போது தொழில் புரியும் சில பெண்களும் அதை தமக்குக் கட்டாயப்படுத்திக் கொள்கின்றனர். இது பல சந்தர்ப்பங்களில் அவர்களது தொழிலுக்கு இடைஞ்சலாகி கடும் விமர்சனத்திற்கு ஆளாகின்றனர்.

10. சில முஸ்லிம் பெண்கள் சுயநலனுக்காகவும் குறுகிய இலாபத்திற்காகவும் முகத்திரையைப் பயன்படுத்துவதனாலும், சில சமூகவிரோதிகள் முகத்திரை அணிந்து குற்றச் செயல்களில் ஈடுபடுவதனாலும் முகத்திரைக்கிருந்த நம்பிக்கையும் நல்லபிப்பிராயமும் மக்கள் மத்தியில் இல்லாமல் போய்விட்டது.

11. அனைத்துக்கும் மேலாக, முகம் மூடுவதை அல்லாஹ் கட்டாயப்படுத்தாத நிலையில் ஒருசாராரின் விருப்பத்திற்கமைய அதைக் கட்டாய நிலைக்குக் கொண்டுவருவது அல்லாஹ்வின் அதிகாரத்தில் கைவித்த குற்றத்திற்கு, அவன் இலகுவாக்கியதை கஷ்டப்படுத்திய குற்றத்திற்கு ஆளாக்க மாட்டாதா?

ஜம்இய்யதுல் உலமா முகம் மூடுவதைக் கட்டாயப்படுத்தவில்லை என்றிருப்பின் இலங்கையில் முஸ்லிம்கள் சிறுபான்மையினர் என்பதையும் தற்போது நாட்டில் உள்ள நிலைமைகளையும் கவனத்திற்கொண்டு இனிமேல் ஜம்இய்யதுல் உலமா முகத்திரை விவகாரத்தை பேசாமல் இருப்பதே ஜம்இய்யாவுக்கும் சிறந்தது, முஸ்லிம்களுக்கும் சிறந்தது என்பதே எனது பணிவான அபிப்பிராயமாகும்.

அஷ்செய்க் எம்.எம். பஸ்லுர்ரஹ்மான் Naleemi, B.A., SLTS

15 கருத்துரைகள்:

அஷ்ஷெய்க் நளீமி. ஆண்கள் பெண்களை நிர்வாகிக்க வேண்டியர்கள்.முகத்தை மூட வேண்டாம். ஆனால் தன் உடல் அழகை எம்முஸ்லிம் பெண்தான் அந்நியர்க்கோ மற்ற ஆண்களுக்கோ காட்டுவாள். அப்படியென்றால் விரும்பியவாறு அவர்கள் ஆடை அணியட்டும் என்பதே உங்கள் வாதமா.

Yo if u don't want to cover keep quite. Don't go nd advice others. As I told these Naleemies studying 25% Islam nd coming to give Fatwa

Assalamu alikum pleas inda naleemikku enna pidichchirukku .neenga ungada waifukku face cover pannallatti summa irunga .arikka widattewala .iwarda number irunda enakku konjam taanga pleas

Assalamu alikum pleas inda naleemikku enna pidichchirukku .neenga ungada waifukku face cover pannallatti summa irunga .arikka widattewala .iwarda number irunda enakku konjam taanga pleas

sahodarare face cover vidayattil adhihamana ilangai muslimgal nalladhu enra nilaipatile ullanar. aaha face cover thodarfaha kavanam seluttuwathu jammiyavin kadamai ahanaltan avarhal attahaya korikkaiyayum mun vaitarhal.naangal ovveruverum kavanattil kolla vaandiya vidayam ennavenral emadhu oru siriya urimaihalaha irundalum avatritkaha naam iyakkam enra adippadaiyyil sindikkadhu muslim enra reedhiyil sindittu emadhu talimaituwamana ACJU'tku mulumaiyyaha kattuppattu nadappadhutan.

ungaludaiyya aalosanaikku jazakallahu hair.

It's one of our rights so let's struggle to get it back. And I disagree with the points 9 & 11.

மிகவும் அருமையான கருத்து இதனை விளங்கக் கூடியவர்கள் சபையில் இருக்கிறார்களா?

அஷ்செய்க் அவர்களே, உங்களின் மேலான கருத்துக்கும் கவனத்திற்கும் ஒரிருகேள்விகள் ,அதானது

இஸ்லாத்தில் (அல் குர்ஆன்,ஹதீஸ்)எங்கேயாவது பிழையான. குற்றமிழைக்கக்கூடிய,தோற்றுவிக்கக்கூடிய செயற்பாடுகள் பற்றி கூறப்பட்டுள்ளதா?( இங்கு இமாம்களின் கருத்துக்களை கூறவரவேண்டாம் pl

உலகமக்களுக்கான யுக முடிவுவரைக்குமான மதமென்பதன் கருத்தின் அடிப்படையில் பார்த்தால் பெண்கள் முகம் மறைப்பது என்பது இறைகட்டளையாகுமா?

இஸ்லாத்தில் பெண்கள் முகம் மறைத்தல் கட்டாயமா(ஹலாலா)
good sir but inta vidayattai acju kku eluttumoolam tarivittal mekavum nanru.

இந்த பெண்கள் ஆடை விடயத்தில் ஜம்மியத்துல் உலமா எடுத்த முடிவு சரியானது இதற்கு ஆதரவளிப்பது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும்

The article isn't consider all corner.

முகத்திரை தேவை இல்லை மனத்திரை போதும்.

அஷ்செய்க் பஸ்லிர்ரஹ்மான் அவர்களே! நீங்கள் ஓர் அஷ்செய்க் ஆக இருப்பதையிட்டு நான் வெட்கப்படுகிறேன். இது உங்களுடைய ஈமானுடைய குறைபாடா அல்லது கோழைத்தனமா என்பது புரியவில்லை.
நீங்கள் கூறியதில் 6 மற்றும் 10 ஆம் விடய்ஙகளுடன் உடன்படுகிறேன். அது அதனைப் பயன்படுத்துபவர்களால் செய்யப்படும் தவறு என்பதனால். மத்ஹப்கள் வேண்டாம் என்பீர்கள். தனக்கு சாதகமாக வரும் போது ஏற்றுக்ெகாள்வீர்கள். அடித்தவனின் விருப்பு வெறுப்புக்காக பின்பற்றுவதல்ல இஸ்லாம். படைத்தவனின் விருப்பத்திற்காகப் பின்பற்றுவது.
எந்தவொரு பெண்ணும் நபியாக வந்ததில்லை. பெண்கள் உரிமையையும் நபியவர்களே பெற்றுக் கொடுத்தார்கள். அதனை பெண்கள் பார்த்துக் கொள்ளட்டும் என்று விட்டுவிடவில்லை.
தொழில் புரியும் இடத்தைப் பற்றிப் பேசுகிறீர்கள். அந்த இடத்தில் தானே முகத்திரை கட்டாயமாகத் தேவைப்படுகின்றது. வீட்டில் இருக்கும் போது முகத்திரை அணிவதில்லையே இது தெரியாதா உங்களுக்கு.
B.A., PhD, எந்தவொரு பட்டம் பதவியும் சுவர்க்கத்திற்குரிய தகைமைச் சான்றிதழ் அல்ல என்பதை நினைவிற் கொள்ளுங்கள். அல்லாஹ் இலகுவாக்கியதை கஷ்டப்படுத்திய குற்றம் என்கிறீர்கள். எந்த விடயத்தை எந்த விடயத்துடன் முடிச்சுப் போடப் பார்க்கிறீர்கள். இந்த சிந்தனைதான் முஸ்லிம்களை இன்னும் அதே இடத்தில் வைத்துள்ளது. அவனவன் உயிரையும் துச்சமாக மதித்து எவ்வளவோ சாதனைகளை நிலைநாட்டுகிறான். அல்லாஹ்வின் மீது தவக்குல் வைத்து எந்தவொரு அமலைச் செய்யும் போதும் அது இன்பமாகவே இருக்கும்.
ஷீஆக்களின் எண்ணெய்யால் சலவைவை செய்யப்பட்ட மூளையை வைத்துக் கொண்டு கருத்துத் தெரிவிக்காமல். ஈமானியப் பார்வையோடு கருத்துக்களை முன்வையுங்கள்.

Here you should note that they didn't ask whole the women in sri lanka to cover their face. They are just requesting the freedom for our women to choose the dress code. There are many women in our country who willingly cover thier face.as Islam didn't force everyone to cover their face those who willing should be able to do. If you loose this right now one by one our community will loose every right. How women themselves go and ask that we want the niqab back at the situation. It's the obligation of our leaders to request that. If you do not agree with the nikab it's fine but don't expect evryone to follow that as still there are hadees which support that. Lets united togather and patiently try for our rights. Avoid making public oppinion which shows we are divided in our religion where extremist use that for there benefits.

துருக்கி தொப்பியை விட்டுக்கொட்க்காத எமது முன்னோர்கள் எங்கே..... இந்த கேடுகெட்ட உள்ளங்கள் தக்வா இல்லாமல் மரநித்த நீடிக்கும் எங்கே ? அல்லாஹ் பாதுகாப்பானாக
பாதுகாப்பானாக நண்பரே அல்லாஹ்வை பயந்துகொள்ளுங்கள்

Post a Comment