Header Ads



டாக்டர் சாபி மீது, பொய்யை இட்டுக்கட்டிய பொலிஸ் உயரதிகாரி சிக்குகிறார் - பாரதூரமான குற்ற்சாட்டுக்கள் சுமத்தப்படுகின்றன

நான்காயிரம் சிங்கள பெண்களுக்கு குடும்ப கட்டுப்பாடு செய்துள்ளதாக முஸ்லிம் மருத்துவர் மீது குற்றம் சுமத்தி, செய்தி ஒன்றை உருவாக்கி, நாட்டில் இனவாத கலவரத்தை ஏற்படுத்த முயற்சித்த குருணாகல் மாவட்ட பிரதிப் பொலிஸ் அதிபர் வசந்த கிச்சிறி ஜயலத்திற்கு எதிராக மூன்று பாரதூரமான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.

இது சம்பந்தமாக குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் தலைமையகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இனவாத கலவரத்தை ஏற்படுத்தக் கூடிய தகவல் ஒன்றை பதில் பொலிஸ் மா அதிபருக்கு அறிவிக்காது, ஊடகங்களுக்கு வழங்கியமை அதில் ஒரு குற்றச்சாட்டாகும். இது நிறுவனங்கள் தொடர்பான ஏற்பாடுகள் சட்டத்தின் கீழ் பாரதுரமான குற்றமாகும்.

அத்துடன் இனவாத கலவரத்தை ஏற்படுத்த உதவியமை மற்றுமொரு குற்றச்சாட்டாகும். இது தொடர்பாக குற்றவியல் தண்டனை சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட உள்ளது.

மேலும் ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை தேடி குற்றப் புலனாய்வு பிரிவினர் உட்பட பொலிஸார் விசாரணைகளை நடத்தி வந்த சூழ்நிலையில், முஸ்லிம் மருத்துவரான ஷாபி சஹாப்தீன் தொடர்பான செய்திகளை வெளியிட்டதன் காரணமாக அது பற்றி விசாரணை நடத்த பெரிய பொலிஸ் குழுவை நியமிக்க நேரிட்டது. இது பொலிஸாரை வேறு பக்கம் திசைத் திருப்பும் நடவடிக்கை எனவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

எது எப்படி இருந்த போதிலும் மேற்படி செய்தியை வெளியாகி பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியதை அடுத்து, குற்றப் புலனாய்வு திணைக்களம் மருத்துவர் சஹாப்தீன் தொடர்பாக விசேட விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது. குருணாகல் போதனா வைத்தியசாலையின் 26 ஊழியர்களிடம் இதுவரை வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன.

மருத்துவர் சஹாப்தீனுடன் இணைந்து மேற்கொண்ட சத்திர சிகிச்சைகளின் போது எந்த சந்தேகத்திற்குரிய சம்பவங்களும் நடக்கவில்லை என வாக்குமூலம் வழங்கிய அனைவரும் கூறியுள்ளனர்.

எனினும் மருத்துவருக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ள பெண்களை கொழும்பு பிரதான சட்ட வைத்திய அதிகாரியிடம் அனுப்பி மருத்துவ அறிக்கை ஒன்றை பெற்றுக்கொள்ள குற்றப் புலனாய்வு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

4 comments:

  1. அன்புக்கும் மரியாதைக்குமுரிய டாக்டர் ஷாபி அவர்களே! பொறுமையுடன் உங்கள் போராட்டத்தை முன்னெடுத்துச்செல்லுங்கள். இறுதியில் வெற்றி சத்தியத்துக்குத்தான் காத்திருக்கின்றது. அடிக்கடி நியாயமான அளவு தொகையை சும்மா 5, 20 சரிவராது. உங்கள் வசதிக்கு ஏற்ற பெறுமதியான தொகையை ஸதகா கொடுங்கள். சற்று பொறுமையாக செயற்படுமாறும் அடிக்கடி ஸதகா வழங்குமாறும் குடும்பத்துக்கும் கூறுங்கள். அல்லாஹ் தற்காலிகமாக தலைமேல் படர்ந்துள்ள கார் மேகத்தை விரைவில் அகற்றுவான் இன்ஷா அல்லாஹ்.

    ReplyDelete
  2. Alhamdhulillah. Whatever happen, all are good for us. Allah swt inside love are always for the true Muslims.

    ReplyDelete
  3. முன்னால் ஆளுநர் அசாத் சாலி அவர்கள் டாக்டர் சாபீ விடயமாக
    மீடியாக்களிள் பகிரங்கமாக பொலசாறுக்கும் தொடர்பு
    உல்லது என்றதும் மக்களுக்கு உண்மை தன்மை விளங்க வந்தது அசாத்சாலியும்
    சாபீ விடயதில் பேசாமல் இருந்து இருந்தால் டாக்டர் சாபீ அவர்களின் நிலமை கேள்வி குறி

    ReplyDelete

Powered by Blogger.