Header Ads



கல்முனையில் முஸ்லிம்களின் சத்தியாக்கிரகமும், தமிழர்களின் உண்ணாவிரதமும் நிறைவு


கல்முனை வடக்கு தமிழ் உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்த வேண்டும் எனக்கோரி கடந்த ஒரு வார காலமாக தமிழர்களினால் முன்னெடுக்கப்பட்டு வந்த உண்ணாவிரத போராட்டமும் அதற்கெதிராக முஸ்லிம்களினால் முன்னெடுக்கப்பட்ட சத்தியாக்கிரக போராட்டமும் இன்று ஞாயிறு நண்பகலுடன் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

கல்முனை சுபத்ரா ராமய விகாராதிபதி ரன்முத்துக்கல சங்கரத்ன தேரர், இந்த உண்ணாவிரதத்தை முடித்து வைத்து உரையாற்றியாற்றினார்.

கல்முனை வடக்கு தமிழ் உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவதற்கு கூடிய விரைவாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அத்துரெலிய ரத்ன தேரர் மற்றும் கலகொட அத்தே ஞான சார தேரர் போன்றோராலும் அரச தரப்பினராலும் வழங்கப்பட்ட உத்தரவாதங்களை ஏற்றுக்கொண்டே தமது உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு செய்யப்படுவதாக ரன்முத்துக்கல சங்கரத்ன தேரர் தனதுரையில் தெரிவித்தார்.

எமது கோரிக்கையில் நாம் தொடர்ந்தும் உறுதியாக இருப்போம் எனவும் குறித்த காலப்பகுதியினுள் தமிழ் செயலகம் தரமுயர்த்தப்படா விட்டால் எமது போராட்டம் மீண்டும் மிகப்பெரியளவில் வெடிக்கும் எனவும் அவர் சூளுரைத்தார்.

அதேவேளை தமிழர்களின் உண்ணாவிரதப் போராட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டிருப்பதனால் தாம் ஏற்கனவே அறிவித்ததன் பிரகாரம் தமது சத்தியாக்கிரகப் போராட்டத்தை நிறைவு செய்வதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதி தலைவரும் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.

இணக்கமான தீர்வு எட்டப்படும் வரை நாம் விழிப்பாக இருப்போம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இறுதியாக துஆப் பிரார்த்தனையுடன் சத்தியாக்கிரகம் நிறைவுக்கு வந்தது.

கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப், கல்முனை பள்ளிவாசல்கள் சம்மேளனத் தலைவர் டொக்டர் எஸ்.எம்.ஏ.அஸீஸ், கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள், முன்னாள் கிழக்கு மாகாண உறுப்பினர்கள், உலமாக்கள், வர்த்தகர்கள், இளைஞர்கள் மற்றும் பொது மக்களும் பங்கேற்றிருந்தனர்.

(அஸ்லம் மௌலானா, எம்.எம்.அப்ராஸ்)

2 comments:

  1. நல்ல ஒத்திகை,நல்ல ஏமாற்றம்,சூப்பர் நடிப்பு.தமிழா உன் காதில் நல்லபடியாக பூ சுத்தி விட்டார்கள்.ஆனால் பரிதாபம் உங்கள் சமூகத்துக்குல் இருக்கும் சில கைக்கூலிகலே உங்களை பணத்துக்காக,பதவிக்காக ஏமாற்றுவது.

    ReplyDelete
  2. நிம்மதியான செய்தி. உண்ணாவிரதங்கள் கைவிடப்பட காரணமான சகலருக்கும் நன்றியும் வாழ்த்துக்களும். ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல், தொடர்ந்து முஸ்லிம்கள் மீது கட்டவித்துவிடப்பட்ட அச்சுறுத்தல்களும் தாக்குதல்களும் கல்முனை உண்ணாவிரதமென பலவாரங்களாக எனக்கே துக்கமில்லை பாதிக்கபட்ட மக்கள் நிலமை கொடியது. உண்ணாவிரதம் முடிவுற்றது நிமதியியும் மகிழ்ச்சியும்.

    ReplyDelete

Powered by Blogger.