June 25, 2019

இலங்கை முஸ்லிம்களுக்கு அரியவாய்ப்பு - இதை, தக்கமுறையில் பயன்படுத்தவார்களா..?

#உங்கள்_சிந்தனைக்கு ! பொன்னான வாய்ப்பிதனை என்ன செய்யப் போகிறோம்..?

நடப்பதெல்லாம் நன்மைக்கே எனக் கொள்வோம் ! இறைவன் நாட்டமில்லாமலா இவையெல்லாம் நடக்கின்றன ?

சஞ்சலங்களின் பின்னர் செளகரியங்களும் இருப்பதாகத்தானே திருக்குர்ஆன் கூறி நிற்கிறது !

சீறி வெடித்துப் பிரவாகிக்கும் பேரினவாத வெறிப் பிரச்சாரங்களின் முன்னால்...

தவ்ஹீத் கொள்கை
ஜிஹாத் கோட்பாடு
இஸ்லாமியப் பயங்கரவாதம்
இஸ்லாமியத் தீவிரவாதம்
இஸ்லாமிய அடிப்படைவாதம்
வஹாபிஸம்
அரேபியக் கலாசாரம்
மலட்டு மருந்து
மலடாக்கும் சத்திரசிகிச்சை
ஷரீஆ சட்டம்
இஸ்லாமிய ஆடைக் கலாசாரம்
அரபு மொழி
மத்ரஸாக்கள் மற்றும் பாடத்திட்டம்
இஸ்லாமிய இயக்கங்கள், ஜமாஅத்கள்
பெண்ணுரிமை
இஸ்லாமிய வங்கி
ஹலால் - ஹராம் சட்டம்
வன்முறை தூண்டும் அல்குர்ஆன் வசனங்கள்
அல்தகிய்யா கோட்பாடு
அல்முஸ்தபா பல்கலைக்கழகம்
முஸ்லிம்களின் பலதார மணம் 
காதி நீதிமன்றங்கள்
தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள்
72 சுவனத்துக் கன்னிகள்
விவாக, விவாகரத்துச் சட்டம்...

போன்ற ஏராளமான விவகாரங்கள் குறித்தெல்லாம் எவனெவனெல்லாமோ முஸ்லிம்களுக்கே டியூஷன் கொடுக்கத் தொடங்கி இருக்கிறான்கள் !

இலங்கையில் இருக்கும் மொத்தப் பிரச்சினைகளுமே இவைகள் மட்டும் தான், மற்றப்படி நாட்டில் பாலாறும் தேனாறும் ஓடிக் கொண்டிருப்பதுபோலப் படம் காட்டுகிறான்கள் !

மேலுள்ள விவகாரங்கள், சர்ச்சைகள், குற்றச்சாட்டுகள், விமர்சனங்கள் குறித்தெல்லாம் இந்நாட்டு மக்களுக்குத் தெளிவூட்டவும் இஸ்லாத்தின் தூதை எடுத்துச் சொல்லவும் அல்லாஹ் பொன்னானதொரு வாய்ப்பை நமக்கு ஏற்படுத்தித் தந்திருக்கிறான் ! 

முன்னெப்போதையும் விடவும் இப்போதுதான் இவ்விடயங்களைத் தெளிவாகப் பேசுவதற்கான சந்தர்ப்பம் வாய்த்திருக்கிறது !

இருக்கும் இக் கொதிநிலையில் இதையெல்லாம் நாம் விளங்கப்படுத்தினாலும்  இவர்கள் ஏற்றுக் கொள்வார்களா எனக் கேட்கும் அதிமேதாவிகளும் நமக்குள் அதிகமாகவே உள்ளனர். 

ஏற்பதும் மறுப்பதும் அவரவர் உரிமை, சுதந்திரம் ! 
நமது பொறுப்பு எடுத்துச் சொல்வதும் விளக்கம் கொடுப்பதும் மட்டுமே !
நேர்வழி என்பது இறைவனின் பேரருள். எல்லோருக்குமே அது சித்திக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. 

பாக்கியவான்களின் உள்ளங்கள் மட்டுமே சத்தியத்தை நேசிக்கும் !

விளைவுகளைப் பற்றிய கவலை நமக்குரியதல்ல. நம்மீதான கடமையைச் செய்வதே நமது பொறுப்பு !

அமெரிக்காவின் சொந்தச் சூனியமான செப்டெம்பர் 11 தாக்குதலின் போது முழு இஸ்லாமிய உலகமும் பேரதிர்ச்சிக்கு உள்ளானது.  இனி இஸ்லாத்தின் - முஸ்லிம்களின் கதி - கதை அவ்வளவுதான். இனி மீட்சியே இல்லை, பேரழிவுதான் என்றெல்லாம் நாம் துவண்டுதான் போனோம். 

ஆனாலும், உண்மையிலேயே என்ன நடந்தது ? 

அமெரிக்கச் சாத்தானின் கோரமுகம் உலகுக்கே அம்பலமானது ! 
உலகின் நம்பர் வண் பயங்கரவாதி புஷ்தான் என்று உலகமே கண்டுகொண்டது ! 

அமெரிக்க மக்களினதும் சர்வதேச சமூகத்தினதும் மனசாட்சி விழித்துக் கொண்டது ! 

அமெரிக்காவெனும் உலகப் பெரும் ரவுடியின் முன்னால் சர்வதேச சமூகம் மவ்னமாக இருக்கிறதே தவிர அமெரிக்காவை மனதளவில் சபித்துத்துக் கொண்டுதான் இருக்கிறது !

செப்டெம்பர் 11 தாக்குதலின் பின்னர்தான் உலகம் முழுதும் இஸ்லாத்தின் பேரலை பலமாக எழத் தொடங்கியுள்ளது. 

அமெரிக்க, ஐரோப்பிய, ஆசிய, அவுஸ்திரேலிய, ஆபிரிக்க உள்ளங்கள் கணிசமாக இஸ்லாத்தை நேசிக்கத் தொடங்கியுள்ளன. 

உலகில் அதிவேகமாக வளர்ந்து வரும் சமயமாக இஸ்லாம் திகழ்கிறது. 

சோதனைகளும் வீழ்ச்சிகளும் துயரங்களும் இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் வரலாறு நெடுகிலும் புதியன அல்ல - நன்கு பழக்கப்பட்டவைதாம் ! அதுதான் அல்லாஹ்வின் நாட்டமும் ஏற்பாடுமாகும். 

சோதனைகள் - துயரங்களின் போதெல்லாம் நமது ஈமான் - நம்பிக்கைகள் இறைவனால் பரீட்சிக்கப் படுகின்றன. 
நம் வாழ்வின் நோக்கமே இப்பரீட்சைதானே ! 
நாம் வாழ்வது - நமக்காகவா இறைவனுக்காகவா என்பதே நமக்கு முன்னாலுள்ள கேள்வி ! 

இஸ்லாத்தின் எதிரிகளின் வெற்றுக் கூச்சல்களும் காட்டுக் கத்தல்களும் அபாண்டங்களும் புளுகுகளும் நமது நம்பிக்கைகளில் ஒரு சிறு அசைவையேனும் ஏற்படுத்திவிடக் கூடாது ! உலகமே எதிர்த்தாலும் துளியளவும் நாம் துவண்டுவிடக் கூடாது !

இப்போது நாம் இலங்கையில் செய்ய வேண்டியவை:

1. நமது நம்பிக்கைகளை உறுதியாக வைத்துக் கொள்வது. நம்மை நாமே திடப்படுத்திக் கொள்வது.

2. எத்தனை சோதனைகள் வந்தபோதிலும் பொறுமை, நிதானம், சகிப்புத்தன்மையைப் பேணிக் கொள்வது. எச் சந்தர்ப்பத்திலும் வன்முறையில் நம்பிக்கை கொள்ளாதிருப்பது. சட்டத்தைக் கையில் எடுக்காதிருப்பது. நாட்டின் பொதுச் சட்டங்களை மதித்து நடந்து கொள்வது.

3. முஸ்லிமல்லாத மாற்று மதத்தாரோடு முன்னரிலும் பார்க்க கனிவாக, இதமாக, நம்பிக்கையாக, நேர்மையாக, நீதமாக நடந்து கொள்வது. அவர்களது நம்பிக்கைகள், சம்பிரதாயங்கள், கலாசாரங்களை மதித்து நடந்து கொள்வது.

4. இஸ்லாமிய நம்பிக்கைக் கோட்பாடுகளுக்கும் கலாசாரத்துக்கும் இடையிலான வேறுபாடுகளைத் தெளிவுறப் புரிந்து கொண்டு, அரேபிய கலாசாரத்தைப் புறமொதுக்கி, இந்நாட்டுக்குப் பொருத்தமான, மாற்று மதத்தாரின் கண்களை உறுத்தாதவாறான பொதுவாழ்வில் ஈடுபடுவது. வெளிப்பகட்டுக்கு முன்னுரிமை கொடுக்காது, உள்ளார்ந்த ரீதியில் அழகுற நடந்து கொள்வது. இஸ்லாத்தைப் பிரசாரம் செய்வதைக் குறைத்துக் கொண்டு நடைமுறையில் - அழகிய வாழ்வொழுங்கின் - பண்பாடுகளினூடாக இஸ்லாத்தை மக்கள் மனங்களில் உணரச் செய்வது. 

5. இஸ்லாம், முஸ்லிம்கள் குறித்த விமர்சனங்களுக்குத் தகுதியானவர்கள் மட்டும் பொருத்தமான முறையில் சிங்கள, ஆங்கில மொழி ஊடகங்களில், பொது மேடைகளில் விளக்கமளிப்பது. எந்தச் சூழ்நிலையிலும் பிற மதத்தாரின் நம்பிக்கைகள், கலாசாரங்கள் குறித்து விமர்சனங்கள் செய்வதைத் தவிர்த்துக் கொள்வது. 

6. நாமும் இந்நாட்டுப் பிரஜைகளே, நமக்கும் இதுதான் தாய்நாடு, நாமும் இந்நாட்டின் சமமான பிரஜைகளே என்பதை காலையும் மாலையும் 'திக்ர்' செய்வதுபோல நமக்கு நாமே நினைவு படுத்திக் கொள்வது. இந்த விடயத்தில் நம்மில் அனேகருக்கு மனக்கோளாறு உண்டு.

7. நாட்டின் அபிவிருத்தி, முன்னேற்றம், சூழல் பாதுகாப்பு, சட்ட ஒழுங்கு, நல்லாட்சிக்கான முழுமையான பங்களிப்பை வழங்குவது !

8. நமக்கிடையிலான கொள்கை - இயக்க - ஜமாஅத் - கட்சி அரசியல் வேறுபாடுகளைக் கொஞ்ச காலத்திற்கேனும் மூட்டைகட்டி வைத்துவிட்டு ஒரே சமூகம் என்ற கண்ணோட்டத்தில் வாழத் தலைப்படுவது !

சிந்திப்போம் செயற்படுவோம் !

Mohamed Ajaaz

8 கருத்துரைகள்:

இது யதார்த்தம்.

இதனை ஒரு பெண் எழுதினால் விபச்சாரி என்பார்கள். உங்களுக்கு என்ன பட்டம் வருகிறது எனப்பார்ப்போம்

Bottom line self reformation to be done.

சகோதரி ஸர்மிளா செய்யத் எழுதிய அதே விடயத்தினை மையக்கருத்தாகக் கொண்டதே இந்த கட்டுரையும் என்பது எனது கணிப்பு ஆனால் இக்கட்டுரையாளர் கருத்துகளை நேர்மறையாகவும்,வார்த்தை ஜாலங்களால் அழகுபடுத்தியும் முன்வைத்திருக்கின்றார். அந்த சகோதரியின் கட்டுரைக்கான 21 கருத்துரைகளில் ஆணதிக்க துர்வாடை தாங்கமுடியாமல் இருந்தது. மற்ற மதத்தினர் தத்தமது சமூகத்தின் தவறுகளைச்சுட்டிக்காட்டி சுய விமர்சனம் செய்யும் போது குதூகலிக்கும் எம்மால் நாம் எம்மை சுயபரிசோதனை செய்யும் போது தாங்க முடியாமல் இருக்கிறது. சுயபரிசோதனை செய்தால் நரகம் போய்விடுவாய் என்று சொல்லும் மதபோதகர்களும் இல்லாமலில்லை. ஆங்கிலம் கற்பது ஹறாம் என்று சொல்லி இஸ்லாத்தை காப்பாற்றியவர்கள், சாப்பிடும் போது நாய், பன்றி என்று சொன்னால் சாப்பாட்டைத்துப்பிவிட்டு வாய்கழுவிய பின் மீண்டும் சாப்பிடுமளவுக்கு சுத்தம் சொல்லித்தந்த மதபோதகர்கள் இன்னும் நம்மை நாம் சுயபரிசோதனை செய்தால் மதமாறியவனாக பிரகடனம் செய்வார்கள். இவ்வாறான மதபோதனையின் பிரதிபலிப்புத்தான் சர்மிளாவின் கட்டுரைக்குக் கிடைத்த கருத்துரைகள் என்பது என் கணிப்பு.

@ Suhaib, You are Hindu/ Christian with a Muslim name. go get lost.

Questions remain unanswered:
How many good speakers or orators do we have who can speak for the whole Muslims in the Island?
Can Muslims get back the trust on business ever? No. no.
Would allowing only Thablique Jamath to do da'wah in the masjid solve all our problems including education?

@Suhaib உம்மை போன்ற நயவஞ்சக அரைகுறைகளை தவிர ஷர்மிளா போன்ற இஸ்லாத்தை அழிக்க துடிக்கும் மேலைத்தேய அடிவருடிகளின் கருத்தை யாரும் ஆதரிக்கும் தேவையில்லை.முஸ்லிம்களுக்கு ஞானசார கூறும் அறிவுரையை கேர்ப்பதற்கும், ரிஸ்வி முப்தி கூறும் அறிவுரையை கேர்ப்பதற்கும் வித்தியாசம் தெரியும். அதைப்போன்று தான் இந்த ஆக்கத்திற்கும் தலையில் மலத்தை சுமந்து கொண்டிருக்கும் ஷர்மிளாவின் ஆக்கத்திற்கும் அதன் நோக்கத்திற்கு வித்தியாசம் முஸ்லிம்களுக்கு தெரியும்.

Post a comment