Header Ads



சிங்கள வாக்குகளை பெற்று வெற்றிபெற்ற கபீரும், ஹக்கீமும் பயங்கரவாதத்திற்கு துணைபோகின்றனர்

முன்னாள் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், கபீர் ஹாசீம் ஆகியோர் சிங்கள மக்களின் வாக்குகளை பெற்று வெற்றி பெற்ற போதும், முஸ்லிம் பயங்கரவாதத்திற்கு துணைபோவதாக நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் குற்றம் சாட்டியுள்ளார்.

முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கு ஆதரவு தெரிவித்த ஏனைய முன்னாள் அமைச்சர்களும் பயங்கரவாதத்தை ஆதரிப்பவர்கள் என்பது உறுதியாகி உள்ளது.

பயங்கரவாதிகளுடன் தொடர்புள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள ரிசாத் பதியூதினுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தமது அமைச்சு பதவிகளிலிருந்து கபீர் ஹசீம் மற்றும் ரவூப் ஹக்கீம் விலகி இருந்தனர். இதன்மூலம் பயங்கரவாதத்தை ஆதரிப்பதாக அவர்களே ஏற்றுக்கொண்டுள்ளனர்.

“கபீர் ஹசிமிற்கு முஸ்லிம் மக்களை விட சிங்கள மக்களே அதிகமாக வாக்களித்துள்ளனர்.

ஹிஸ்புல்லாஹ், ரிசாத், அசாத் சாலி ஆகியோர் செய்த காரியங்களை கபீர் ஹசீம் போன்றவர்கள் உட்பட அனுமதித்துள்ளனர்.

கேகாலை மக்கள் கபீருக்கு இனிவரும் காலங்களில் நல்ல படிப்பினையை வழங்குவார்கள் என நான் நினைக்கிறேன்.

ஹக்கீம் எங்களுடன் இணைந்திருப்பார் என்றே நினைத்தேன். அவர் மத்தியஸ்தர் என நினைத்தேன். எனினும் அவரும் முழுமையாக பயங்கரவாதத்துடன் தொடர்புடையவர்களுடனேயே இருக்கின்றார்.

இனி வரும் காலங்களில் முஸ்லிம் மக்கள் தங்களுக்கு சரியான ஒரு தலைவரை தேர்ந்தெடுப்பார்கள் என நான் நம்புகின்றேன்” என ரத்ன தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.

கண்டி மல்வத்து பீட மஹா நாயக்க தேரரை இன்று -07- சந்திக்க சென்ற போது ரத்ன தேரர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார்.

7 comments:

  1. இவரது போலியான போராட்டம் முஸ்லிம்களுக்கு வெற்றியைக் கொடுத்ததனால் இவர் தற்போது கொக்கரிக்கின்றார்

    ReplyDelete
  2. May allah give you hidayah

    ReplyDelete
  3. This terrorist monks dress(siwuruve)should removed he not deserve bhudist preache.

    ReplyDelete
  4. இனவாதத்தைக் கக்கித் தீர்க்கும் இனவாத விசமிகளைச் சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனையைப் பெற்றுக்கொடுக்கும் நடுநிலைமையாக இயங்கும் இலங்கையர்கள் எங்கே என நாட்டுப்பற்றுமிக்க இலங்கையர்கள் மனக்கலக்கத்துடன் தேடுகின்றார்கள்?

    ReplyDelete
  5. இந்த இனவாதிக்கு நேர்வழி கிடைக்க பிரார்த்தனைசெய்வது பிர்ஔனுக்கு ஹிதாயத் கிடைக்க பிரார்த்தனைசெய்வதற்கு சமன். அந்த பிரார்த்தனையை அல்லாஹ் தெளிவாக நிராகரித்தான் என்பதை அனைவரும் நினைவு கூறவேண்டும்.

    ReplyDelete
  6. Why do not you lodge the complaints to Police with the evidence rather than misleading the Public??

    ReplyDelete
  7. அவர்களும் சூழ்ச்சி செய்கின்றனர், அழ்ழாஹ்வும் சூழ்ச்சி செய்கிறான், அழ்ழாஹ்வின் சூழ்ச்சியில் எவருமே தப்பமாட்டார்கள்.

    ReplyDelete

Powered by Blogger.