Header Ads



குண்டுவெடிப்புக்கு எனது தவறுகளே காரணமென ஒப்புக்கொண்டால், தூதுவர் பதவி வழங்குவதற்கு ஜனாதிபதி கூறினார்

உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புகளிற்கு  எனது தவறுகளே காரணம் என நான் ஒப்புக்கொண்டால் எனக்கு வெளிநாட்டு தூதுவர் பதவியை வழங்குவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்வந்தார் என பொலிஸ்மா அதிபர் பூஜித்ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

உயிர்த்தஞாயிறு குண்டுவெடிப்புகள் குறித்து விசாரணை செய்யும் பாராளுமன்ற தெரிவுக்குழுவின் முன்னிலையில்  சாட்சியமளிக்கையில்

குண்டுவெடிப்புகளிற்கு எனது தவறே காரணம் என்பதை ஏற்றுக்கொண்டு நான் பதவியை இராஜினாமா செய்தால் எனக்கு  தூதுவர் பதவியை வழங்க சிறிசேன முன்வந்தார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

குண்டுவெடிப்புகளிற்கு எனது தவறே காரணம் என்பதை ஏற்றுக்கொண்டால் விசாரணை குழு பின்னர் என்மீது எந்த தவறுகளும் இல்லை என தெரிவிக்கும் எனவும் சிறிசேன குறிப்பிட்டார் என பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.

எனது தொழில்வாழ்க்கையில் நான் அவ்வாறான பதவியை விரும்பியதும் இல்லை, நான் தவறான விதத்தில் நடந்துகொண்டேன் என என்மீது குற்றச்சாட்டுகள்  சுமத்தப்பட்டதும் இல்லை எனவும் பூஜிதஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

4 comments:

  1. Arrest both the President and this Policeman and bring both of them into Justice.

    ReplyDelete
  2. Arrest both the President and this Policeman and bring both of them into Justice. They are playing game and around 250 innocent worshipers died in Terror Attacks.
    Where is the Shit Country Law??? We are very fad up with these politicians Games. Innocent people died and going to die in future because of them..

    ReplyDelete
  3. சில உண்மைகள் காலம் கடப்பதால் அழிவு தவிர்க்க முடியாது......

    ReplyDelete
  4. Maithri should be arrested and inquired, for telling lie in front of public.

    ReplyDelete

Powered by Blogger.