June 22, 2019

ஞானசாரர் தலையீட்டுடன் முடிந்த, தமிழர்களின் உண்ணாவிரதம் - ஒரு மாத காலத்திற்குள் தீர்வை பெற்றுக் கொடுப்பதாக உறுதிமொழி

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறு கோரி தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட உண்ணாவிரத போராட்டம் தற்காலிகமாக நிறைவுக்கு வந்துள்ளது.

மதத் தலைவர்கள் உள்ளிட்ட சிலர் கடந்த ஆறு நாட்களாக சாகும் வரையிலான உண்ணாவிரதத்தை மேற்கொண்டிருந்தனர்.

இந்நிலையில் பலதரப்பட்ட பேச்சுவார்த்தைகளும் போராட்டங்களும் நடத்தப்பட்ட நிலையில் தற்போது குறித்த உண்ணாவிரத போராட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் இன்றையதினம் போராட்டக்களத்திற்கு விஜயம் செய்து கலந்துரையாடல்களை நடத்தியிருந்தார்.

கல்முனை தமிழ் பிரதேச செயலகம் தொடர்பான விடயத்திற்கு ஒரு மாத காலத்திற்குள் தீர்வை பெற்றுக் கொடுப்பதாக கலகொட அத்தே ஞானசார தேரர் உறுதிமொழி வழங்கியதையடுத்தே கல்முனையில் நடத்தப்பட்ட இந்த போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.

மேலும் இந்த போராட்டம் சுழற்சி முறையிலான போராட்டமாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

11 கருத்துரைகள்:

தமிழர் எல்லாம் ஞானசாரட ஆட்கலா போயிட்டாங்க.. சார வந்தால் உண்ணாவிரதத்தை கைவிட ஏற்கனவே திட்ட மிட்டுள்ளார்கள் முஸ்லிம் களே கிழக்கு தமிழர் பற்றி கொஞ்சம் கவனமாக இருந்து கொள்ளுங்கள்.

கடந்த சில தினங்களாக துள்ளிய தமிழ் தம்பிகலா பாயி,தலையணை போட்டு அந்த இடத்தில் நீங்கள் போய் தூங்குங்கல்.என்ன மடையர்களடா நீங்கள்,கைக்கூலிகல் கோடிகலை வாங்கிக் கொண்டு உங்களை உசுப்பேத்தி விட்டு இறுதியில் கை விடுவார்கள் அதை கூடவா இன்னும் உங்களுக்கு புரிய முடியவில்லை.உங்களை வைத்து எங்களுடன் கொஞ்ஞம் மோத விடுவது,எதிர்காலத்துக்கான ஒத்திகை.சர்வதேசம் ஏதாவது வழங்க முற்பட்டால் அதை இவ்வாறு மேடை போட்டு முரியடிப்பார்கல் என 3 நாட்களுக்கு முன்புதான் கூறினேன்.கைக்கூலிகலை வைத்து நல்லா மிலகாய் அரைத்து விட்டார்கள்.தமிழா உங்களுக்குல் இருக்கும் கைக்கூலிகலை நம்பி இன்னுமா ஏமார போகிறாய்

ஞானசாரவினால் அவருடைய பாம்பை அம்பாரை வரையில் மட்டுமே ஆட்ட முடியும் என்பது தெளிவாகி விட்டது.
கல்முனையில் உள்ள அப்பாவி தமிழ் மக்களுக்கு இன்னும் காலம் அவசரப்படாதீர்கள், காவிகளை நம்பி கடலில் இறங்காதீர்கள் அவர்கள் சந்தர்ப்ப வாதிகள், முஸ்லிம் மக்களோடு ஒற்றுமைப்பட்டு நிறைய உங்களால் சாதிக்க வேண்டியிருக்கிறது என்பதை மறந்து விடாதீர்கள்.

அப்பாவி தமிழ் மக்களுக்கு உண்மை தெரிய வாய்ப்பில்லை,ஆனால் கைக்கூலிகலுடன் ஏற்கெனவே நடத்திய திட்டத்தின் இறுதி கட்ட படப்பிடிப்புத்தான் 22.06.2019 கல்முனயில் நடந்தது.இவை அனைத்தும் பல நாட்களுக்கு முன்னே திட்டமிடப்பட்ட நாடகம்.ஆனால் அப்பாவி தமிழ் மக்கள் தற்போது கைக்கூலிகலின் வலையில் மாட்டிவிட்டார்கல்.பாவம் என்ன செய்வது

அடப் பாவிங்களா இந்த உண்ணாவிரதத்திற்கே அடிகோள் ஞானசாரர்தானா? அவர் செய்ங்கன்னு சொன்னா செய்றீங்க. முடிங்கன்னு சொன்னா முடிக்கிறீங்க. தமிழர்களுக்கு தமிழ் அரசியல் தலைவர்களாலேயே செய்து முடிக்க முடியாத எத்தனையோ அரசியல் சமூகப் பணிகள் இருக்கின்றன. அவற்றை முடித்துத் தருமாறு ஞானசாரரைத் தூண்டுங்கள்.

நிலைமை மோஷமடையும் நிலை ஏற்பட்டதும் ஒரு துரும்பைப்பிடித்து கரைஏறியுள்ளனர். நல்லது நடக்கட்டும் இரு சமூகத்தின் நல்லவர்கள் சேர்ந்து செய்யட்டும்.

National Integration Minister Mano failed, instead Ganasara succeeded. Let him hand over the minister portfolio to Ganasara in the Banana republic.

It seems there is no law and order in the Island. Buddhist Monks are taking law in their hands and running the country. What a shame on all Sri Lankans!

Thoppoorukkum poay ithach chenchal nallarikkum???

இன்றுவரை தேசிய தலைவராக தமிழ் மக்களின் மனதில் வாழ்ந்து வந்த வேலுப்பிள்ளை பிரபாகரன்
இன்றுமுதல் தேசிய தலைவராக ஞானசாரர் இதுதான் இன்றைய உலகம் கல்முனையில் இருந்து.

ஏம்பா ரொம்ப அப்பாவியாக இருக்காயே. முஸ்லிமை சம்பந்தப்படுத்தாமல் உன்னுடைய உரிமைக்காக மட்டும் உனது கைதிகள் விடயத்துக்காக மட்டும் உனது காணிக்காக மட்டும் உண்ணாவிரதம் இருந்து பார். ஒரு காவியாவது ஒரு சாரயாவது ஒரு நாயாவது திரும்பி பார்கின்றதா என்று.

Post a comment