Header Ads



தேரர்கள் உள்ளே நுழைந்தமைக்கு பிடிவாதகார, முஸ்லிம்கள் பொறுப்பேற்க வேண்டும் - மனோ

நான் வரித்துக்கொண்ட அரசியல் நாகரீகம் ஒன்று இருக்கிறது.  எனது கொள்கையை விட்டுக் கொடுக்காமல், இயன்றவரை அனைவரையும் அன்புடன் நிதானமாக அனுசரித்து போவேன்.

அப்படித்தான் நான், ததேகூட்டமைப்பையும் அரவணைத்து அனுசரித்து போகிறேன்.

அதனால்தான் கல்முனை மக்களின் அழைப்பின் பேரில் கல்முனைக்கு போக முடிவு செய்த போது கூட்டமைப்பின் அம்பாறை எம்பி கோடீஸ்வரனை அழைத்து சொன்னேன்.

அவர்தான் நண்பர் சுமந்திரன் எம்பியை, வஜிர அமைச்சரின் உறுதி கடிதத்துடன் கூட்டி வாருங்கள் அண்ணா என்று என்னை வலிந்து கேட்டுக்கொண்டார்.

ஆகவே நான்தான் நண்பர்கள் தயா கமகேவையும், சுமந்திரனையுமு கல்முனைக்கு அழைத்து வந்தேன்.

அங்கே சுமந்திரனுக்கு கிடைத்த எதிர்மறை வரவேற்பை நான் வெறுக்கிறேன்.

எனக்கு நேர்மறை வரவேற்பு கிடைத்தது, என்பதற்காக சுமந்திரனை தாக்க முயன்றதை நான் ஒருபோதும் ஏற்க முடியாது.

ததேகூ பல விடயங்களை கோட்டை விட்டுள்ளது என்பது உண்மை. ஆனால் அதற்கான பதில் இதுவல்ல.

அதேபோல், மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசியல்வாதிகளை நிராகரித்து விட்டு, பெளத்த தேரர்கள் கூறியதன் பேரில் போராட்டத்தை ஆரம்பிக்கவும், முடிக்கவும் முனைவது சரியானதல்ல.

தமிழ் தலைமைகளின் இயலாமை காரணமாகவே தமிழ் மக்கள் மாற்று வழி தேடுகிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால் கிழக்கு தமிழர்களின் மாற்று இந்த தேரர்கள் அல்ல.

அதேபோல் தமிழர்கள் இந்த நிலைக்கு தள்ளப்பட்டு, தேரர்கள் உள்ளே நுழைந்தமைக்கு பிடிவாதகார முஸ்லிம் தரப்பினரும் பொற்பேற்க வேண்டும்.

இதற்கான விளைவு விரைவில் அனைவரையும்சுடும். எதிர்பாருங்கள்.

Mano Ganesan - மனோ

3 comments:

  1. குடித்து விட்டு அமைச்சரை தாக்க முற்படும் முன்னாள் பயங்கரவாதிகலால் முழு கிழக்கிலும் ஆபத்து வரப்போகிறது.

    ReplyDelete
  2. தேரர்கலை குடை பிடித்து முஸ்லிம்கள் அழைத்து வரவில்லை அமைச்சரே.இந்த தேரர்கல் 30 வருடமாக எங்கே இருந்தார்கள்.தமிழர்கலுக்கு 30 வருடங்கலாக இவர்கள் ஏன் போராட வரவில்லை.எல்லாமே அவர்களின் திட்டம்.அந்த திட்டத்தில் தமிழர்களை சில கைக்கூலிகல் பகடைக் காயாக சாராயாத்தை கொடுத்து பயன்படுத்துவதற்கு நாங்கள் காரணமல்ல.

    ReplyDelete
  3. கொழும்பிலிருக்கும் தமிழ் வாக்குகளின் எண்ணிக்கை 150000. ஆனால் கடந்த தேர்தலில் இவனுக்கு கிடைத்தது 60 ஆயிரம் சொச்சம் வாக்குகள் அதுவும் தோல்வியடைந்த இவனுக்கு ரணிலால் ரோசியின் வெற்றி பறித்துகொடுக்கப்பட்டது. தோட்ட காட்டானான இவனுக்கு பொதுவாக இலங்கை தமிழர்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்பதால் கிழக்கு விடயத்தில் மூக்கை நுழைத்து கொழும்பில் வெற்றியை உறுதி செய்ய முயற்சிக்கின்றான். மூன்றாம் தர அரசியல் பிச்சைக்காரன்

    ReplyDelete

Powered by Blogger.