Header Ads



"ஜனாதிபதி வேட்பாளராக மைத்திரி போட்டி, பிரதமராக மஹிந்த நியமிக்கப்படுவார்"

பரந்துப்பட்ட கூட்டணி  வெற்றிபெறவேண்டும் என்ற நிலைப்பாட்டிலே  எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ உறுதியாக உள்ளார். தற்போதைய அரசியல் களத்தில்  பல மாறுப்பட்ட கருத்துக்கள் காணப்பட்டாலும், இறுதி தருணத்தில்  பரந்துப்பட்ட கூட்டணியின் ஊடாக  இந்நாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவார் என பாராளுமன்ற உறுப்பினரும் ,  சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளருமான  தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். 

பொதுஜன பெரமுனவினால் ஒருபோதும் ஜனாதிபதி தேர்தலில் தனித்து போட்டியிட முடியாது.  பரந்துப்பட்ட  கூட்டணி நிச்சயம் வெற்றிப் பெறவேண்டும் என்ற நிலைப்பாட்டில்  எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ உறுதியாகவுள்ளார்.  பரந்துப்பட்டக் கூட்டணியின் ஊடாகவே  முறையாக  அரசாங்கம் ஒன்று ஏற்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார். 

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைமை காரியாலயத்தில்  இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு இவ்வாறு  தெரிவித்துள்ளார். 

பாராளுமன்றத்தை கலைத்து பொதுதேர்தலை நடத்த  பொதுசன அபிப்பிராயத்தை கோரவேண்டும் என  குறிப்பிடப்படுகின்றது. தற்போதைய நிலையில் பொதுசன அபிப்பிராயத்தை  நடத்துவதால் மாத்திரம் பிரச்சினைகளுக்கு தீர்வை எட்டமுடியாது. 

பொதுசன அபிப்பிராயத்தின் பெறுபேறுகளை கொண்டு எவ்வித அதிகார பூர்வமான நடவடிக்கைகளையும் முன்னெடுக்க முடியாது.  பாராளுமன்றத்தைக் கலைக்கவேண்டுமாயின்  மூன்றில் இரண்டு பெரும்பாண்மை ஆதரவு தேவை  தற்போதை  பாராளுமன்றத்தில் ஒருபோதும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவு  எத்தரப்பினருக்கும்  கிடைக்கப்பெறாது.

பரந்துப்பட்ட கூட்டணி  வெற்றிபெறவேண்டும் என்ற நிலைப்பாட்டிலே  எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ உறுதியாக உள்ளார். தற்போதைய அரசியல் களத்தில்  பல மாறுப்பட்ட கருத்துக்கள் காணப்பட்டாலும் இறுதி தருணத்தில்  பரந்துப்பட்ட கூட்டணியின் ஊடாக  இந்நாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவார்.

இதனை தொடர்ந்து பொதுத்தேர்தலின் ஊடாக  பிரதமராக  எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்படுவார். இதுவே நிச்சயம் இடம் பெறும் இதனை தவிர்க்க முடியாது.  தனிமனிதனின்  தனிப்பட்ட விடயங்கள் தொடர்பில் முக்கியத் துவம் கொடுக்காமல்  அரசியல் கொள்கைகளுக்கு நாட்டு மக்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். 2015ஆம் ஆண்டு  அரசியல் ரீதியில் செய்த தவறுகளை திருத்திக் கொள்ளவேண்டும்.

2 comments:

  1. We will VOTE only for a New Leader of this country...
    Say No To Old Political Culprits/Killers /Terror.

    ReplyDelete

Powered by Blogger.