June 09, 2019

சஹ்ரான் அழிவடைந்திருந்தாலும், அவர்களின் நோக்கம் மக்களிடம் பரவியுள்ளது

ஈஸ்டர் குண்டு தாக்குதலை நடத்திய சஹ்ரான் உள்ளிட்ட குழுவினர் அழிவடைந்திருந்தாலும் இன்றும் இவர்களின் நோக்கம் மக்களோடு மக்களாக பரவியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

பௌத்த பிக்குமார்களை ஒன்றுப்படுத்தி 'ஜாதிக மக' என்ற தொனிப்பொருளில் தீவிரவாத தாக்குதல் தொடர்பில் தெளிவுப்படுத்தல் நிகழ்வு கொழும்பில் இன்று -08-இடம்பெற்றுள்ளது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். சர்வதேச தீவிரவாதத்தை முழுமையா துடைத்தெறிய வேண்டுமாயின் சட்டங்களை மறுசீரமைப்பு செய்ய வேண்டும்.

அரசியல் காரணிகளை மையப்படுத்தி ஒரு போதும் அடிப்படைவாத தீவிரவாதத்தை இல்லாதொழிக்க முடியாது.

தேசிய நல்லிணக்கத்தை விரும்பும் சாதாரண முஸ்லிம் மக்களுடன் ஊடுறுவியிருக்கும் அடிப்படைவாதிகள் விரைவில் அடையாளப்படுத்தப்படுவார்கள்.

இஸ்லாம் மார்க்கத்திற்கு அப்பாற் சென்று மனிதாபிமானத்திற்கு எதிராக செயற்படும் அடிப்படைவாதிகள் நாட்டு மக்கள் அனைவருக்கும் ஆபத்தானவர்கள்.

இன்று நாடாளுமன்றத்தில் அடிப்படைவாதத்தை இல்லாதொழிப்பதற்கு உரிய விஷேட திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

மதரஸா கற்கை நிலையம் , வெளிநாட்டு மத போதகர்களின் வருகை , உள்நாட்டு தொண்டு நிறுவனங்களுக்கு வெளிநாட்டிலிருந்து கிடைக்கப் பெறும் நிதி , தேசிய கலாசாரத்திற்கும் , தேசிய பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தல் விடும் ஆடைகள் தொடர்பில் புதிய சட்டங்களை அமுல்படுத்துவதற்கு கூடிய கவனம் செலுத்தப்படுகின்றது.

இஸ்லாமிய அடிப்படைவாதம் இந்த அரசாங்கத்திலேயே வலுப்பெற்றது என்று குறிப்பிடுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. இப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு முதலில் அனைவரும் அரசியல் இலாபங்களை துறக்க வேண்டும்.

ஜனாதிபதி , பிரதமர் மற்றும் எதிர்கட்சி தலைவர் ஆகியோர் ஒன்றிணைந்து புதிய சட்டங்களை வகுத்து சர்வதேச தீவிரவாதத்தை வெற்றி கொள்ள வேண்டும் என்றும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

10 கருத்துரைகள்:

Hey. Very intelligent person. What a bullshit . He is number one racist. He will talk among bikus like that. He is having a dream of becoming president. Never happen

Under the "Politician" , "Priest" identities can do any terrorism no? this is the beauty of this country's law?

firs of all should give death penality for you , begger

Ippudiyellam.pesuda pesu....unakku santharpam.thanthikkaan sahraan....muslimda enna enru padichittu pesu....
Unmayyaana muslim eppudi irippandu konjam thedipparu

இவனுடைய இத்தீய கருத்துக்களுக்கு எமது மதத்தலைவர்கள் மற்றும் அரசியல்வாதிகள் சிறந்த பதிலை வழங்க வேண்டும்.

Similarly Buddhist extremism has spread by Politicians & Monks also needs to be irradicated.

இவரைப்போன்ற இனவதிகளால்தான் இலங்கை எல்லாவிடயத்திலும் பின்னோக்கிச்செல்கின்றது.

முஸ்லிம்கள் சம்பிக்கவை இனவாதி என்கிறார்கள்.

ஆனால், கிழக்கு தமிழ்ர்களை தனது இனவாத அரசியல் மூலம் கொடுமைபடுத்திய ஹிஸ்புல்லா வை ஆதரிக்கிறார்கள். இந்து தமிழர்களின் கோவில் காணியை மோசடி செய்ததையும் ஆதரிக்கிறார்கள்.
ஏன் ?

Ajan தமிழன் தீவிரவாத பன்றி பிரபாகரனையும் அவனுடைய குண்டு தாக்குதல்களையும் ஆதரித்துக்கொண்டு isis பயங்கரவாதத்தை எதிர்கிறார்களே.. அது ஏன்?

Post a comment