Header Ads



"வைத்தியர் ஷாபி கருத்தடை முன்னெடுப்பதை, நாம் ஒருபோதும் காணவில்லை"

(எம்.எப்.எம்.பஸீர்)

சிசேரியன் மகப்பேற்று சத்திர சிகிச்சைகளின் இடைநடுவே,  வைத்தியர் ஷாபி சிஹாப்தீன் பெண்களுக்கு சட்ட விரோதமாக கருத்தடை அல்லது பலோப்பியன் குழாய்களில் தடையை ஏற்படுத்தும் எந்த நடவடிக்கைகளையும் முன்னெடுப்பதை தாம்  ஒரு போதும் காணவில்லை என குருணாகல் வைத்தியசாலையின் - சத்திரசிகிச்சைக் கூட தாதியர்கள் 69 பேர் சி.ஐ.டி.க்கு வாக்கு மூலமளித்துள்ளனர். 

சிசேரியன் சிகிச்சைகளின்போது அங்கு இருக்கும் ஏனைய வைத்தியர்கள் மற்றும் தாதியர்களுக்கு தெரியாமல் இவ்வாறான நடவடிக்கைகளை ஒரு போதும் முன்னெடுக்க முடியாது எனவும் அவர்கள் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளனர்.

சட்ட விரோத கருத்தடை விவகாரம் தொடர்பில் குருணாகல் வைத்தியசாலையின்  பிரசவ மற்றும் மகப்பேற்று வைத்தியர் ஷாபி சிஹாப்தீனுக்கு எதிராக குற்றம் சுமத்தப்படும் நிலையில், அவர் தற்போது சி.ஐ.டி. பிடியில் தடுத்து வைத்து விசாரிக்கப்பட்டு வருகின்றார்.

இந் நிலையில் வைத்தியர் ஷாபியுடன் சத்திர சிகிச்சைகளின் போது சத்திர சிகிச்சை கூடங்களில் இருந்தவர்கள் என  சி.ஐ.டி.யினர் 70  சத்திர சிகிச்சைக் கூட தாதியர்களை அடையாளம் கண்டனர். அவர்களில் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் சுகயீனம் காரணமாக சிகிச்சைப் பெறும் நிலையில் ஏனைய 69 பேரிடமும் குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணை செய்து வாக்கு மூலம் பதிவு செய்துள்ளபோதே அவர்கள் மேற்கண்டவாறு குறிப்பிட்டனர். 

5 comments:

  1. சிங்கள ஆங்கில மொழியிலும் பதிவிடுங்கள்

    ReplyDelete
  2. in the country every where in medical and private institution sing board. says Family planning. every Sinhala women goes to Middle East countries for Domestic jobs. They do this with her partners proposed. this is 100% Recism. in the country.

    ReplyDelete
  3. Manitham valum emathu sahothara ina thathihal, 1 persentag itkum kuraivana moattu mottaihalathum oru sila sillarai kavali arasiyal vathihalalum oattu mottha ilangai thiru nadu allolappattukkondirukkinrathu.

    ReplyDelete
  4. Al-Hamdulillah..!!

    Inda news aan enda News ilum wara illai??

    ReplyDelete

Powered by Blogger.